"தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழர் தன்னாட்சி உரிமை என்பனவற்றைவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலகிவிட்டதாக சிலர் அரசியல் இலாபம் கருதி பிரசாரம் செய்கின்றனர். ஆனால், அவர்கள் கூறுவது பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவந்துள்ளது"
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெள்ளிக்கிழமை அதன் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டில் உரையாற்றும்போது கூறினார்.