ஜனவரிமாதம் இலங்கையில் சிங்கள அரசுக்கான தேர்தல் இடம்பெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரசார நடவடிக்கைகள் மிகவும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளனஇந்த நிலையில் ஒருபுறம் தமிழர்களை விற்று உடம்பு வளர்த்துவந்த துணை ஆயுதக்குழுக்கள் பெரும் நெருக்கடி நிலையினை எதிர் நோக்கியுள்ள நிலையில் தமிழர்களை கொன்றொழிப்பதில் முன்னின்ற இரு துருவங்கள் பிரிந்து நிற்பது பல விடயங்களை வெளிச்சத்துக்குகொண்டுவர ஏதுவாக அமைந்திருக்கிறது.

 

அண்மைக்காலமாக இரு துருவங்களும் மேற்கொண்டுவரும் பிரசாரப்போர் காரணமாக தமிழர்கள்மீது இவர்கள் புரிந்த அட்டூழியங்கள் மாறி மாறிவெளிவரக்கூடிய ஏதுவான சூழ்நிலைகள் காணப்படுகின்றன. இதையே இன்று சர்வதேச சமூகமும் எதிர்பார்த்து நிற்கின்றன.


அண்மையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸஅறிக்கையொன்று விடுத்திருந்தார்,
அதில் இலங்கை அரசாங்கத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில்செயற்பட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படும் என தெரிவித்திருந்ததுடன் இலங்கையில்இடம்பெற்ற கடத்தல்கள் தொடர்பில் நடவடிக்கையெடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.


இந்த கருத்து எதிர்காலத்தில் சரத்பொன்சேகாவுக்கு எதிராக மகிந்த அரசு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைக்கு பிள்ளையார் சுழி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இந்த நிலையில் மறுபுறத்தில் வன்னிக்களமுனையில் சன்டை இடம்பெற்ற நேரத்தில் “தமிழர்களை கொன்று குவியுங்கள்”என கோத்தபாய உத்தரவிட்டதாக சரத் பொன்சேகா பிள்ளையார் சுழி இட்டுள்ளார்.


இந்த நிலையில் இரு வேட்பாளர்களும் இராணுவ இரகசியங்களை வெளியில் விடவேண்டாம் என சிங்கள பௌத்த அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஏதிர்வரும் காலங்களில் வன்னிக்களத்தில் இடம்பெற்ற பல சம்பவங்கள் வெளிவரக்காத்திருக்கின்றன.


இந்த காலப்பகுதியில்புலம்பெயர் மக்கள் கடும் வழிப்பாகவிருந்து ஆதாரங்களை சேகரித்து தமிழ் மக்களின் வாழ்விடங்களில் சிங்கள அரசு மேற்கொண்ட கொலைவெறியாட்டங்களை சர்வதேச ரீதியில் வெளிக்கொணரவேண்டும்.


"அரசன் அன்று கொல்லுவான் தெய்வம் நின்றுகொல்லும்"என்பற்கு ஏற்ப பல உண்மைகள் இந்த தேர்தல் காலத்தில்வெளிவரும் என்பது வெள்ளிடைமலை.
 

பின்னூட்டங்கள் (1)

Subscribe to this comment's feed
...
0
srilankavil sandy mudinthuviddathaha palar solhirarkal. inimelthaan aarampamahapohirathendu naan ninykkiren. ini nadakkinra ovvoru sampavamum tamilan anupavitha valihal vethanyhalukku mudivury eluthupavyahavum vidivy thedi tharupavyahavumey amyum. anpudan ilango.
ILANGO , December 06, 2009

சிறிது | பெரிது

busy
 
கட்டுரைகள்