காரணம் தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்தவேளையில் அவர்களே தமது ஏகப்பிரதிநிதிகள், தமது குறிக்கோள் தமிழீழமே, தமது உயிருள்ளவரை அதில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என மேடைகளில் முழங்கிய நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று தமிழீழத்தையும் விட்டுவிட்டு தமிழர்களையும் விட்டுவிட்டு சிங்கள பேரினவாதிகளின் காலினை கழுவ முயற்சிப்பது வேதனையான விடயமாகும்.

 


அதிலும் இலட்சக்கணக்கான தமிழ் உறவுகளை ஈவிரக்கமின்றி கொலை செய்து “பஞ்சமாபாதகன்”என பெயர் பெற்ற ஒருவனை எமது இனத்தை சேர்ந்த ஒருவன் கட்டித்தழுவி அன்புகொண்டது எமது இனத்தை வெட்கி தலைகுனியச்செய்துள்ளது.


அதிலும் தமிழ் இனத்தை பாதுகாக்கப்போவதாக கூறி அந்த மக்களின் வாக்குகளைப்பெற்று பாராளுமன்றம் சென்ற ஒருவர் அந்த இனத்தை படுகொலைசெய்த ஒருவனிடம், படுகொலைக்களத்தின் இரத்தம் காயுமுன்பே சென்று மண்டியிட்டது பெரும் வரலாற்று துரோகமே. இவ்வாறான செயலைப்புரிந்த பாராளுமன்ற உறுப்பினர் கிஷோர் அவர்கள் இதனை உணர்ந்துகொள்ளாதது ஏன்?


விடுதலைப்புலிகள் அழிந்துவிட்டார்கள்,இனி நம்மைக்கேட்க யாரும் இல்லை,நமது என்னம்போன்று செயற்பட்டு,சிங்கள அரசிடம் எவ்வளவு நல்லபெயர் வாங்கமுடியுமோ அவ்வளவு வாங்கி தமது பெட்டியை நிறைத்துக்கொள்வோம் என இவர்கள் நினைக்கின்றனர்.


அது ஒருபோதும் நிறைவேறாது. இதனை வன்னி மண்ணில் புதையுண்ட ஆயிரக்கணக்கான பேராளிகளினதும் பொதுமக்களினதும் ஆத்மாக்கள் அனுமதிக்காது. இது என்றும் தமிழினத்துக்கு துரோகமிழைக்கும் எவரையும் விட்டுவைக்காது என்பது எமது மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாகும்.


இது மட்டுமல்ல மறுபுறத்தில் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழினத்துக்கு பேரம்பேசுவதாக கூறி தமது பைகளை நிறப்ப பேச்சுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.


அதிலும் நான்கு பிரிவாக இந்த தமிழ் தேசிய கட்சி உடைவடைந்துள்ளதானது தமிழ் மக்களை பெரும் ஏமாற்ற நிலைக்கு தள்ளியுள்ளது.


இன்று ஜனாதிபதித்தேர்தலில் சிங்கள பேரிவாதக்கட்சிகளில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களுமே தமிழர்கள் தொடர்பில் உறுதியான நிலைப்பாடுகளில் தான் உள்ளனர்.


அதாவது தமிழர்கள் இலங்கையில் வாழலாம் ஆனால் உரிமைகள் கேட்க முடியாது.நாங்கள் தருவதை பெற்றுக்கொண்டு இருக்கவேண்டும்,மேலதிகமாக எதனையும் கோரமுடியாது.இது பௌத்த நாடு,இது பௌத்தர்களுக்கே சொந்தம்.இதுவே இன்று இரு பேரினவாத வேட்பாளர்களினதும் கோசங்களாக இருந்துவருவது யாவரும் அறிந்த விடயமாகும்.


இவர்களுடன் அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு சாரார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.இந்த பேச்சுவார்த்தையில் எவற்றை தாங்கள் வலியுறுத்தியதான எந்த தகவல்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை வெளியிடவில்லை.


இந்த தேர்தலில் தங்களின் நிலைப்பாடு என்ன?நாங்கள் தமிழ் மக்கள் தொடர்பில் சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களிடம் எவற்றை எதிர்பார்க்கின்றோம்?தமிழர்களின் எதிர்பார்ப்பு என்ன?போன்ற எந்த விடயங்கள் குறித்தும் இதுவரை எந்த கருத்தையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிடவில்லை.


எனினும் வடகிழக்கு மக்கள் “முரசு”க்கு தெரிவித்த கருத்துகளின் படி இரு வேட்பாளர்களில் எவர் வந்தாலும் தமிழ் மக்கள் மீதான காழ்ப்புணர்வு மாறப்போவதில்லை.அவர்கள் தமிழர்களுக்கு ஒரு தீர்வை தருவார்கள் என நம்பினால் அது வெறும் முட்டால்தனமாகவே இருக்கும் என தெரிவிக்கின்றனர்.


இந்தக்கருத்து அந்த மக்களின் 25வருட போராட்ட வரலாற்றில் இருந்து பெறப்பட்ட அனுபவத்தின் அடிப்படையிலும் ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவர் தொடர்பில் அவர்கள் கொண்டிருந்த பார்வையின் அடிப்படையிலும் வெளியிடப்பட்ட கருத்தாகும்.


அன்று பாராளுமன்ற தேர்தலில் தேர்தலை பகிஸ்கரிக்குமாறு தமிழீழ விடுதலைப்புலிகள் எடுத்த தீர்க்க தரிசனமான முடிவின் காரணமாகவே அன்று சிங்கள அரசாங்கங்களின் பொய்முகம் வெளியில்  தெரிய ஆரம்பித்தன.


அந்த முடிவினை விடுதலைப்புலிகள் எழுந்தமானமாக எடுக்கவில்லை.நன்கு ஆராய்ந்து தமிழ் உணர்வாளர்கள்,தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் கலந்து எடுத்தமுடிவாகும்.அந்த முடிவின் காரணமாக சில பின்னடைவுகள் தமிழினத்துக்கு ஏற்பட்டாலும் கூட நீண்டகால அரசியல் நோக்கங்களுக்கு அந்த முடிவு சிறந்த வழிகாட்டலாக அமைந்திருந்தது.


இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அவ்வாறான ஒரு முடிவை எடுப்பார்களானால் இன்று “புலி பேய்”காட்டிவரும் சிங்கள அரசுகளுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் சிறந்த செய்தியாக இருக்கும்.


இன்றைய நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்க்கமான ஒரு தீர்வுத்திட்டத்தை தயாரிக்கவேண்டிய அவசரத்தில் இருக்கின்றது.அல்லது ஏற்கனவே தமிழ் உணர்வாளர்களால் தயாரிக்கப்பட்ட தீர்க்கமான தீர்வுப்பொதிகள் நம் கைவசம் இருக்கின்றன.


நீங்கள் வெறும் நிலையில் நின்று பேசாமல் அந்த தீர்வுப்பொதிகளை வெளிப்படையாகவே முன்வையுங்கள் அவற்றை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் ஆதரவு தருவார்கள் தெரிவியுங்கள்.அவ்வாறாயின் அதற்கான உறுதிமொழியை பெற்றுக்கொள்ளுங்கள்.இவையனைத்தையும் கறுத்த கண்ணாடி கொண்ட அறைகளுக்குள் நடத்தாமல் திறந்தவெளி அரங்கில் மூவின மக்களும் கண்டுகளிக்ககூடியவாறு நடத்துங்கள்.(ஏனென்றால் தேர்தல் முடிந்தவுடன் உறுதிமொழி வழங்கிய பல சிங்கள அரசுகள் தமிழர்களை வேரறுப்பதில் மும்முரமாக இருந்தன என்பதை மறந்துவிடக்கூடாது.)


இன்றை நிலையில் இது தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள பாரிய சந்தர்ப்பமாகும்.எமது உரிமை,எமது நிலம்,எமது உறவுகள் எம்மிடம் இருந்து பிரிக்கப்படுவதையும் கொலைசெய்யப்படுவதையும் நிறுத்துவதற்கான சரியான சந்தர்ப்பம் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கைகளில் உள்ளது.


தம்மிடம் உள்ள அனைத்துவெறுபாடுகளையும் களைந்து கருத்துகளால் பிரிந்துள்ள தமிழ் கட்சிகளையும் ஒன்றினைத்து இதனை மேற்கொள்வதன்மூலம் தமிழர்களுக்கு ஏதாவது ஒன்றை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துங்கள்.அவ்வாறு இல்லையாயின் தமிழ் மக்களின் முடிவினை இந்த உலகெங்கும் பறைசாற்ற வழி ஏற்படுத்துங்கள்.


 

பின்னூட்டங்கள் (1)

Subscribe to this comment's feed
...
0
Thambi varuvar - ethavathu oru roopathil meendum varuvar, kishor pondravarkaluku appothu puriyum.
velu , December 09, 2009

சிறிது | பெரிது

busy
 
Back to Top
சுவிஸ் செய்தி
News image

சுவிட்சர்லாந்தின் தேசிய நாள்

சுவிட்சர்லாந்து நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடு.

Sunday, 1 August 2010

விரிவு...
News image

இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது

சுவிட்சர்லாந்திலுள்ள இரத்தினக்கல் நிறுவனமொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இஸ்ரேலியர் ஒருவர் கைது ...

Thursday, 29 July 2010

விரிவு...
News image

ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ் காலிறுதிச் சுற்றிற்குத் தகுதி

சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் அலியன்ஸ் சியூ பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ்,காலிஞதிச் சுற்றிற்குத் தகுதி ...

Thursday, 29 July 2010

விரிவு...
News image

உலக புகழ்பெற்ற சுவிட்சர்லாந்து நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரரின் பயிற்றுவிப்பாளராக போல் அனாகோன்

போல் அனாகோன், ரொஜர் பெடரரின் தற்காலிக பயிற்றுவிப்பாளராக அனாகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, 29 July 2010

விரிவு...
-
+
1

உலகச் செய்தி
News image

பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி

பாகிஸ்தானின் குவேட்டா நகரில் இன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Friday, 3 September 2010

விரிவு...
News image

பிரிட்டன் அத்தியாவசிய சேவை ஊழியர் வேலை நிறுத்தம் : அரசு தடை

பிரித்தானியாவில் அத்தியாவசிய சேவை துறை ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதித்தது பிரித்தானியா அரசுபிரித்தானிய அரசு செலவீனங்களை கட்டுப்படுத்த தொடங்கியுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள பொதுத்துறை ஊழியர் அமைப்புக்கள் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடத்த முடிவு செய...

Friday, 3 September 2010

விரிவு...
News image

மலேசியாவில் கர்ப்பிணிகளாகும் மாணவிகளுக்கு சிறப்பு பள்ளி

பள்ளிகளில் பலவிதம் உண்டு. ஆனால் மலேசியாவில் திறக்கப்பட்டுள்ள இந்த பள்ளி புது விதம். பள்ளிப் பருவத்தில் திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாகும் பெண்களுக்காக மலேசியாவில் இந்தத் தனி பள்ளி ஒன்று திற...

Thursday, 2 September 2010

விரிவு...
News image

ஈராக்கில் அமெரிக்க வேலை முடிந்துவிட்டது: ஒபாமா அறிவிப்பு

ஈராக் போர் முடிந்து விட்டதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார். ஈராக் நாட்டின் பாதுகாப்பை அதன் மக்களிடமே ஒப்படைப்பதாகவும், ஈராக்கிற்காக அமெரிக்க ராணுவம் செய்த தியாகம் பாராட்டிற்குரியது என்றும் அவர் கூற...

Thursday, 2 September 2010

விரிவு...
-
+
1
இந்திய செய்திகள்
News image

இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்

இந்திய இராணுவத் தளபதி வி.கே.சிங் நாளை மறுதினம் இலங்கை வரவுள்ளார். ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டே அவர் இலங்கை வரவுள்ளார்.

Friday, 3 September 2010

விரிவு...
News image

சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்

கொழும்பில் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென்று தமிழ் எழுத்தாளர்களும், திரைப்பட இயக்குநர்களும் கோரிக்கை விட...

Friday, 3 September 2010

விரிவு...
News image

தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, கச்சத்தீவு கடல் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் விரட்டியடித்தனர்....

Thursday, 2 September 2010

விரிவு...
News image

இலங்கைக்கு வெடி பொருட்களை கடத்த முயற்சி

இலங்கைக்கு வெடி பொருட்களை கடத்த முற்பட்ட இருவர், தமிழ் நாட்டு தொண்டி கடற்பரப்பில் வைத்து வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Thursday, 2 September 2010

விரிவு...
-
+
1
பகிர்ந்துகொள்
Facebook MySpace Twitter Google Bookmarks RSS Feed 
விளையாட்டு செய்திகள்
News image

இலங்கை அணி சம்பியன்

தம்புள்ளையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

Sunday, 29 August 2010

விரிவு...
News image

சூராஜ் ரந்திவ், சேவாக்கிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்

இலங்கை அணியின் பந்துவீச்சாளர் சூராஜ் ரந்திவ் இந்திய அணியின் ஆரம்ப வீரர் வீரேந்திர சேவாக்குக்கு நோ பால் வீசியதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

Tuesday, 17 August 2010

விரிவு...
News image

முரளி இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் இலங்கைக் கிரிக்கெட்

உலகில் அதிகளவு விக்கெட்டுகளைப் பெற்று வரலாற்று நாயகனாக விளங்கும் முத்தையா முரளிதரன் இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் புதிய கிரிக்கெட் சகாப்தத்திற்குள் இலங்கை நேற்று வெள்ளிக்கிழமை ...

Saturday, 24 July 2010

விரிவு...
News image

முரளிதரன் உலக சாதனை-முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி

காலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தனது 800வது விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார் முத்தையா முரளிதரன். இப்போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை ...

Thursday, 22 July 2010

விரிவு...
-
+
1
முரசத்தின் தொடர்பு

+41 (0) 76 290 13 13

 info @ murasam.ch