புலம்பெயர் தமிழர்களைப் பொறுத்தவரையில் இந்தியா பற்றிய சரியான புரிதலும், இந்தியாவை எப்படி நாம் கையாளவேண்டும் என்ற தெளிவும் எங்களுக்கு இல்லை என்றுதான் கூறவேண்டும். கடந்த சில வருடங்களாக இந்தியாவைக் கையாளும் விடயத்தில் நாம் தோல்வி அடைந்தவர்களாகவே இருந்துவருகின்றோம்.

 விரிவு...

 

தமிழ் நாடு அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கருணாநிதிக்கு பல அனுகூலங்களை பெற்றுத் தரும் என்பது மட்டும் உண்மை.  அதற்கான தேவை கருணாநிதிக்கு என்றும் இல்லாதவாறு இப்பொழுது தேவை.  தேர்தல் நெருங்கும் அதேவேளை தான் நிச்சயம் அடுத்த முதல்வராக வருவதற்கான சாத்தியக்கூறுகள் அருகிவரும் வேளையில் குறிப்பாக அவரின் வயது தேர்தலில் முன்னையப் போல செய்ய இடம் தராது.  அத்துடன் தான் வாழும் காலத்திலயே தனது பிள்ளைகளை அரசியலில் நிரந்தர இடம் பெற்றுத் தந்துவிட வேண்டும் என்ற காரணத்தினாலும் குறிப்பாக அவரின் தனயன் ஸ்டாலினை எப்படியாவது வரும் தேர்தலில் தனது கட்சியை வெற்றிபெற வைத்து ஸ்டாலினை முதல்வராக்க கருணாநிதி ஏற்கனவே திட்டம் வகுத்துள்ளார்.  அதற்கு அவருக்கு பல உலகத் தமிழ் மாநாடு போன்ற மேடைகள் தேவை காரணம் தனது பிள்ளைகளை இந்த மேடைகளில் பெருமையாகக் கூறி பத்திரிகைகளில் முதற் பக்க செய்திகளாக வரவைத்து தமிழ் நாட்டின் மக்களை சென்றடையவைத்து ஸ்டாலின் மற்றும் அவரின் மற்றப் பிள்ளைகளையும் அரசியலில் ஒரு நிரந்தர இடத்தைப் பெற்றுத் தர உறுதிபூண்டுள்ளார். 

 விரிவு...

 

கிழக்காசியாவின் இருபெரும் பேட்டை ரொளடிகளில் ஒன்றான இந்தியாவை ஆளும் காங்கிரஸார் தான், இலங்கை ராணுவத்தைக் கொண்டு, கருணாநிதியின் சம்மதத்தோடும் ஒத்துழைப்போடும், தமிழினப் படுகொலையை நடத்திவிட்டு, இன்று மனித நேயத்தோடு தமிழ் மக்களுக்குத் தொடர்ந்து உதவிகள் செய்யப் போகிறோம் என்கிறார்கள்.

 விரிவு...

 

உலகையே தமது ஆழுமையின் கீழ் கொண்டு வந்து மார்க்சியப் பொருளாதாரக் கொள்கையை உலகமெல்லாம் பரப்ப அதற்கு ஒரே மார்க்கம் இராணுவ வலிமையினால் உலக நாடுகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப் போராடிய சோவியத் ஒன்றியம் பல உலக எதிர்ப்புக்களை கண்டது.  அதாவது அமெரிக்கா மற்றும் பல மேற்கத்தைய நாடுகள் சோவியத் ஒன்றியத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து அவர்கள் சோவியத் ஒன்றியத்தின் இராணுவ வலிமையை சிதறடிக்க முடிவெடுத்து பல போர் முனைப்புகைளை தமது இராணுவ தந்திரோபாயங்கள் மூலமாக நிறைவேற்றிய காலப்பகுதியை (1945–1991) குளிர்கால போர்க்காலமென அனைவராலும் அறியப்பட்டது. 

 விரிவு...

 

தேர்தல் முடிவை வெளியிடுவதில் பல தில்லுமுல்லுகளை செய்து  ஒருவாறு பதவியை தக்கவைத்துக்கொண்ட மகிந்த ராஜபக்ஷ தற்போது தனது வேட்டையை முழு வேகத்துடன் ஆரம்பித்து இருக்கிறார்.

 விரிவு...

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்- தமிழ்த் தேசியத்தை விரும்பும் மக்களும் ஒரு விடயத்தை மனதில் நிறுத்திக் கொள்வது நல்லது. தமிழரின் எதிர்காலத்தை- அவர்களின் அரசியல் பலத்தை, வாழ்வாதாரங்களைச் சிதைத்த மகிந்தவுக்கு ஆதரவு கொடுக்கத் துணிவது ஒட்டு மொத்தத் தமிழினத்துக்கே செய்யப்படும் வரலாற்றுத் துரோகமாக கருதப்படும்.

 விரிவு...

 

விடுதலைப்புலிகள் இயக்கம் குறித்தும் அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்தும் தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

 விரிவு...

 

 சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையின் தென்பகுதியிலிருந்து ஓர் இளம்வயது நாடாளுமன்ற உறுப்பினர், மக்களை அரசு கொடுமைப்படுத்துவதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல், ஐ.நா.வில் புகார் கொடுக்க ஜெனீவாவுக்குக் கிளம்பினார். அந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஜெனீவாவுக்குச் செல்ல விமானச் செலவுக்குக்கூட பணம் கிடையாது.

 விரிவு...

 

 இலங்கையில் நடந்து முடிந்த ஈழப் போரின் இறுதி நாட்களில் நடந்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவற்றில் கோதபயா ராஜபக்சேவுக்கு உள்ள தொடர்புகளுக்கான ஆதாரங்களை வழங்குமாறு இலங்கை கூட்டுப் படைத் தலைவர் சரத் பொன்சேகாவை கேட்டுள்ளது அமெரிக்க அரசு.

 விரிவு...

 

ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில் ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை தொடர்ந்தும், தொய்வுறாமல் முன்னெடுத்துச் செல்லக் கூடிய வலுவும், காத்திரமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாத்திரமே உள்ளது என்பது வெள்ளிடைமலை.

 விரிவு...

 

2009-ம் ஆண்டு மே 19-ம் தேதி விடுதலைப் புலிகளை முற்றிலுமாக முறியடித்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. போரின் இறுதி மூன்று நாள்களில் ஏறத்தாழ 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள். நான்காம் கட்ட ஈழப்போரில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தார்கள். போர்ப் பகுதியில் இருந்து உயிர் தப்பிய 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை நலன்புரி முகாம்கள் என்ற பெயரில் முள்வேலி முகாம்களில் ராணுவப் பாதுகாப்போடு சிங்கள அரசு அடைத்தது.

 விரிவு...

 
மேலதிக செய்திகள்...
கட்டுரைகள்

உலகச் செய்திகள்