SmallMediumLarge NarrowWideFluid
மற்றுமொரு வரவை–மீறிய செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க தயாராகும், 'மஹிந்த அரசு'. அச்சிடு E-mail
புதன், 15 ஒக்டோபர் 2008 06:52

நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏழு வீதம் என, 2008ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தினை பாராளுமன்றத்தில் கடந்த வருடம் சமர்ப்பித்து உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். ஆனால், அவ்வளவு பொருளாதார வளர்ச்சிக்கான எந்தவித அறிகுறியும் நாட்டிலில்லை என்கின்றனர் பொருளியலாளர்கள். இந்த நிலையில், 2009ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை சமர்பிக்க மஹிந்த அரசு தயாராகி வருகின்றது. இதில், 17,610 கோடி ரூபாய்களை பாதுகாப்பு செலவீனங்களுக்காக மாத்திரம் ஒதுக்க மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

கிளிநொச்சியை எதிர்வரும் டிசம்பர்  மாதத்துக்குள் கைப்பற்றவுள்ளதாக அறிவித்துள்ள இலங்கை அரசு, ஏன்? 2009ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் கடந்த ஆண்டை விட 950 கோடி ரூபாய்களை அதிகமாக பாதுகாப்பு செலவீனங்களுக்காக ஒதுக்கியுள்ளது என்று தெரியவில்லை. இந்தக் கூற்றை என்னுடைய சிங்கள ஊடக நண்பரிடம்  நான் கேட்டபோது, அவர் சொன்னார்

இதுவெல்லாம் விடுதலைப் புலிகளை ஒடுக்கலாம் என்று பகல் கனவு காணும்  மஹிந்தவுக்கும், அவரை ஆதரிக்கும் மக்களுக்கும் தான் வெளிச்சம்.’

என்று.
வரவு-செலவுத் திட்டத்தில், பாதுகாப்பு செலவீனங்கள்: 1977ஆம் ஆண்டு- 75 கோடி ரூபாய்கள். 1985ஆம் ஆண்டு- 370 கோடி ரூபாய்கள். 1995ஆம் ஆண்டு- 3400 கோடி ரூபாய்கள். 2000ஆம் ஆண்டு- 8300 கோடி ரூபாய்கள். 2006ஆம் ஆண்டு- 11000 கோடி ரூபாய்கள். 2007ஆம் ஆண்டு- 13900 கோடி ரூபாய்கள். 2008ஆம் ஆண்டு- 16660 கோடி ரூபாய்கள். 2009ஆம் ஆண்டுக்கு- 17610 கோடி ரூபாய்கள்.

இலங்கையின் பணவீக்கம் பாரதூரமாக அதிகரித்துச் செல்கின்ற நிலையிலும், அதன் பலனாக பொருட்களின் விலை வரைமுறையின்றி அதிகரிப்பை காட்டிக்கொண்டுள்ள நிலையிலும், ஜனாதிபதியின் பொருளாதார வளர்ச்சி பற்றிய கூற்று நடைமுறை சாத்தியமானதா என்ற கேள்வி எழுகிறது. இதுதொடர்பில் 2008ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், உத்தேச வருமானம் 750.74 பில்லியன் ரூபாவாகவும், செலவீனம் 1044.98 பில்லியன் ரூபாவாகவும் அமையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில், 293.44 பில்லியன் ரூபாய்  இந்த ஆண்டு மேலதிகமாக அரசாங்கத்திற்கு தேவைப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட 2003, 2004 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில், பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதி 50, 60 பில்லியன் ரூபாய்களே, ஆனால் 2005ஆம் ஆண்டு சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியதிகாரத்தை பிடித்த பின்னர், பாதுகாப்பு செலவீனங்கள் பாரியவில் அதிகரித்தன. அதன் விளைவாக, 2006ஆம் ஆண்டுக்காக 100 பில்லியன் ரூபாவுக்கு அதிகமாகவும், 2007ஆம் ஆண்டுக்கான 139 பில்லியன் ரூபாவும் பாதுகாப்பு தேவைகளுக்கான நிதியாக ஒதுக்கப்பட்டது.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் 2008ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் 166 பில்லியன் ரூபாய்கள் பாதுகாப்பு செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டை விட 2008ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு செலவீனம் 27 பில்லியன் ரூபாய்களால் அதிகரிக்கப்பட்டது. 2007ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்துடன் ஒப்பிடும்போது, 2008 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகை 36.79 பில்லியன் ரூபாவால் அதிகரித்திருந்தது.

பாதுகாப்பு செலவீனங்களுக்காக அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் குற்றஞ்சாட்டுகின்றது. ஆர்.பிரேமதாசா ஜனாதிபதியாக பொறுப்பேற்று அதிகாரத்தை கைப்பற்றிய சிறிது காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தபோதும், அவர் போரின் மீது கொண்ட மோகத்தால் அந்த வளர்ச்சி பின்னர் தடைப்பட்டது. அதுபோலவே, 1994ஆம் ஆண்டு சமாதான தேவைதை போல அதிகாரத்தைக் கைப்பற்றிய சந்திரிக்கா குமரதுங்க காலத்திலும் சிறிது காலம் பொருளாதாரம் வளர்ச்சி கண்டது. ஆனால், அதன் பின்னர் சமாதானத்துக்கான போர் என்ற பெயரில் அவரும் போர்மீது காட்டிய அதீத அக்கறையால் பாதுகாப்பு செலவீனங்கள் மீண்டும் அதிகரித்தது. மீண்டும் நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியது.

அதுபோலவே, தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், கிழக்கில் பெற்ற வெற்றியை முன்வைத்து, பாதுகாப்புச் செலிவீனங்களுக்காக நிதியை அதிகரித்துள்ளார். பயங்கரவாத அழிப்பு மற்றும் மனிதாபிமான இராணுவ நடவடிக்கை என இவற்றுக்கெல்லாம் அவர் காரணம் கற்பிக்கிறார். இந்த இரண்டு காரணங்களும், அவருக்கு சிங்கள மக்கள் மத்தியில் ஓரளவு தற்காலிக வரவேற்பை வழங்கலாம். ஆனால், நீண்ட கால அடிப்படையில் இதனால் நாட்டின் பொருளாதாரம் பாரிய அச்சுறுத்தலையே எதிர்கொள்ளும். சாதாரண மக்கள் தமது வாழ்கையைக் கொண்டுசெல்ல முடியாத நிலைமை ஏற்படும். இது பழைய அனுபவம் அல்லது வரலாறு.

நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டாலே, பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்று அரசாங்கத்தின் அடிவருடிகள் இந்தப் பாதுகாப்புச் செலவீன அதிகரிப்புக்கு நியாயம் கற்பிக்கிறார். இப்படிப் பார்த்தால் முன்னாள் ஜனாதிபதிகளான பிரேமதாஸா, சந்திரிகா பண்டாரநாயகா போன்றோரின் ஆட்சிக்காலத்தில் இந்தப் பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. போருக்கு ஓய்வு கொடுத்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் ஆட்சிக் காலத்தில் மாத்திரமே பாதுகாப்புச் செலவீனங்கள் குறைவடைந்து, நாட்டின் பொருளாதாரமும் ஓரளவு வளர்ச்சி கண்டது.

இந்த நாட்டின் அமைச்சர்களோ, மஹிந்தவின் அடிவருடிகளோ கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் பெற்ற அனுபவங்களை சரியாகச் சீர்தூக்கி பார்க்காததையே தொடர்ந்தும் பாதுகாப்பு செலவீனங்களுக்கான அதிக தொகையை ஒதுக்குவதற்கு காரணமாகின்றது. இலங்கையைத் தொடர்ந்து ஆட்சி செய்யும் தலைவர்களினதும், அவர்களுக்கு வழிகாட்டும் பொருளாதார வல்லுநர்களினதும் இத்தகைய குறுகிய பார்வை காரணமாக நாடு தொடர்ந்தும் யுத்த சூழ்நிலைகளுக்குள் தள்ளப்பட்டு, தொடர்ந்தும் பொருளாதார பின்னடைவுக்கே நாடு இட்டுச் செல்லப்படுகிறது.

மஹிந்தவுக்கு என்ன? பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் துபாயிலும், அமெரிக்காவிலும் தயாராகிவரும் மாளிகைகளுக்குள் அவர் தஞ்சமடைந்துவிடுவார். மக்களின் நிலைமைதான்    ???????????.


கருத்துக்கள் (0)Add Comment
உங்கள் கருத்தை எழுதவும்
 
  சிறிது | பெரிது
 

busy
 
Webமுரசம்


சிறப்பு ஆய்வுகள்

தமிழ்த் தேசியத்தை விழுங்க முயற்சிக்கும் சிங்கள தேசியம்

இராணுவ ரீதியாகத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்கிய சிங்கள அரசு, இப்போது வரலாற்று ரீதியாக அவர்களை அடிமைப்படுத்தி, தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேரே - வடக்கும் கிழக்கும் தமிழரின் மரபுவழித் தாயகம், தமிழர்கள் ஒரு தேசிய இனம், தமிழ் மக்களுக்கு தன்னாட்சி உரிமை உள்ளது ஆகிய விடயங்கள் தான்.

 
இனிவரும் போர்...?

ஈழத் தமிழினத்தினைப் போல பாவப்பட்ட வேறொரு இனம்  தற்போது இருக்கமுடியாது. அந்தளவுக்கு பலவந்தமாக அவலப்படுத்தப்பட்ட இனமாகவும், சர்வதேசத்தினால் முற்றுமுழுதாகக் கைவிடப்பட்ட ஒரு இனமாகவும் ஈழத் தமிழினம் போய்விட்டுள்ளதென்பது சோகத்திலும் சோகமான விடயம்.

 
இட்ட அடி நோக , எடுத்த அடி கொப்பழிக்க …

தோல்வியில் இருந்து மீண்டெழுதல் , இன்றைய வரலாற்றுக் கடமை இது“இயற்கை எனது நண்பன். வாழ்க்கை எனது தத்துவாசிரியன். வரலாறு எனது வழிகாட்டி.”
இது தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கூறிய மிகப் பிரபல்யமான கருத்து.

 
ஈரடி பின்னால் ஓரடி முன்னால்?

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு திருப்புமுனையைச் சந்தித்துள்ள இன்றைய காலகட்டத்தில் அடுத்தது என்ன எனத் தெரியாத சூழ்நிலைக்குத் தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ள அதேவேளை புலம்பெயர் தமிழர் மத்தியில் இக்குழப்பம் வெகுவாக நிலவுதுடன், மோதல் உருவாகக் கூடிய அபாயமும் தென்படுகின்றது.