இது குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதியுள்ள கடிதம் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 

பொறுத்திருந்து பார்ப்போம்

 

விடியலுக்கு முன்பே திருச்சியிலிருந்து எழுதுகிறேன் இந்தக் கடிதம்- அந்த ஏப்ரல் 27 அதிகாலை ஐந்து மணிக்கு படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து விட்டேன்.

 

அதுவரையில் நான் தூங்கிக் கொண்டிருந்தால் அல்லவா; எழுந்து உட்கார்ந்தேன் என்று சொல்ல முடியும். இரவு முழுவதும்தான் உறக்கம் கிடையாதே! இரவு 10 மணி அளவில் தொலைபேசி மணி அடித்தது. தம்பி கவிப்பேரரசு பேசினார்.

 

இலங்கையிலிருந்து ஏதாவது செய்தி உண்டா என்று கேட்டார். எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்-இந்தப் பதிலுடன் நிறுத்தி விட்டேன். மீண்டும் இரண்டொரு செய்தியாளர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர்.

 

"நல்ல சேதியையே எதிர்பார்ப்போம்'' என்று ப.சிதம்பரம் சந்திப்புக்குப் பிறகு; "நல்லதே நடக்குமென நம்புவோம்'' என்றீர்களே; அது என்ன ஆயிற்று? என்பதே தொடர்ந்து கேள்விகளாக ஒலிக்கத் தொடங்கின. இன்று ஓர் இரவு பொறுத்திருந்து பார்ப்போம் என்றேன்.

 

உடல்நிலை வேதனை

 

என் மனோநிலை இரவு உணவு எடுத்துக் கொள்ள இடந்தரவில்லை. சுருண்டு கொண்டு படுத்தேன். என் அவசர அவசிய உதவிகளுக்காக என்னுடன் இருந்த மருத்துவ நண்பர் ஜம்பு என் முகத்தைப் பார்த்து விட்டு; "என்ன தலைவரே; இன்று காலை முதல் ஏதோ கவலையில் இருக்கிறீர்கள்?'' என்று கேட்டபோது "ஒன்றுமில்லை ஜம்பு- உடல் நிலையைப் பற்றிய வேதனை தான்'' என்று கூறி சமாளித்துக் கொண்டேன்.

 

ஆனால் என் காதுகளில் கடந்த காலத்தில் என்னுடன் நேச பாசத்துடன் பழகிய நண்பர்கள் சிலர் பொதுமேடைகளில் என்னைப் பற்றிப் புழுதி வாரித் தூற்றுகின்ற அந்த ஒலி முழக்கம்; ஓராயிரம் உளி கொண்டு தாக்குவது போலிருந்தது. தமிழ்ப்பால் குடித்து வளர்ந்து, 13-ஆம் வயதிலேயே எனக்கும் என் போன்ற இளைஞர்கள் சிலருக்கும், தமிழ் வேல் வடித்துக் கொடுத்து; "ஓடி வந்த கட்டாய இந்திப் பெண்ணே கேள்; நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே! வாருங்கள் எல்லோரும் இன உணர்வுப் போருக்குச் சென்றிடுவோம் வந்திருக்கும் இந்தித் திணிப்பை விரட்டித் திரும்பிடுவோம்'' என்று நான் இயற்றிய பாடலை நாள்தோறும், திருவாரூர் தெருக்களில் குழு முழக்கமாக (கோரஸ் பாட்டு) இசைத்துக் கொண்டு, புலி, வில், கயல் பொறித்த கொடிகளைத் தோளில் தாங்கி- இந்தி ஆசிரியரால் அடிபட்டு விரட்டப்பட்டு, அல்லற்பட்ட அந்தக் காலத்திலிருந்து பெரியாரின் பிள்ளையாக அண்ணாவின் தம்பியாக வளர்ந்து விட்ட எனக்கு;

 

அவர்கள் வழங்கிய வலிமையும், உறுதியும், வாய்மையும் எப்படி என்னை விட்டு அகன்று விடும்? பாலப் பருவம் கடந்தும் பல தடவை;

 

6 மாத கடுங்காவல்

 

எனக்குப் பாலுடன் கலந்தூட்டிய என் தமிழுக்காக அளவிட முடியா அடக்கு முறைகளைத் தாங்கியிருக்கிறேன்.

 

பாதி இரவில் என்னைக் கைது செய்து, பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில்- மதுரை ராணுவ முகாமில் நான் நெஞ்சு வலியால் துடித்தபோது- சிகிச்சையளித்து, அந்த இரவோடு இரவாக பாளைச்சிறையில் கொண்டு போய்- அங்கே 24 கொட்டடிகள் காலியாக இருக்க - ஒரே ஒரு கொட்டடியில் என்னைத் தன்னந்தனியாக அடைத்து வைத்தார்கள்.

 

ரெயில் ஓட்டியவர் ஒருக்கணம் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டிருந்தால்-நானும், முல்லை சத்தியும், கஸ்தூரிராஜும், குழந்தைவேலனும், குமாரவேலனும் கல்லக்குடியில் தண்ட வாளத்தில் தசைக்குன்றுகளாகத்தான் காட்சியளித்திருப்போம். தமிழ்காத்திடத் தண்டவாளத்தில் தலை வைத்தமைக்காக அரியலூர் நீதிபதி அளித்த தண்டனை ஆறு மாதக் கடுங்காவல்.

 

அறப்போர் முழக்கம்

 

இலங்கையில் 1956-ல் தந்தை செல்வா தொடங்கிய தமிழர் சமஉரிமைக் கானப் போராட்டத்திற்கு ஆதரவளித்து அண்ணா முன்னிலையில் சிதம்பரம் பொதுக் குழுவில் தீர்மானம் கொண்டு வந்து, அதைப் பொன்னம்பலனார் வழிமொழிந்திட- அதனையொட்டி நான் செய்த அறப்போர் முழக்கம் இன்னமும் எல்லோரின் செவிகளிலும் எதிரொலித்துக் கொண்டு தானே இருக்கிறது?

 

1983-ல் இலங்கை வெலிக்கடை சிறைச் சாலையில்-குட்டிமணியைக் குருடாக்கி கொன்று குவித்தபோதும்-ஜெகன், தங்கதுரை போன்றோர் செத்தொழிந்த போதும்- அரை நாள் அறிவிப்பில் சென்னை குலுங்கிடஆறு லட்சம் பேர் நடத்திய அணிவகுப்புக்குத் தலைமை தாங்கியதும்- அகில இந்தியத் தலைவர்கள் வாஜ்பய், என்.டி.ராமராவ், பகுகுணா, ராம்வாலியா, உபேந்திரா, ஜஸ்வந்த் சிங், ராச்சையா போன்றவர்களை மதுரை டெசோ மாநாட்டுக்கு அழைத்து, தமிழ் ஈழம் மலர்வதற்கு வலியுறுத்தியதும்- அதனைத் தொடர்ந்து போராளிகளுக்குள் ஏற்பட்ட பூசல்களால்; சபாரத்தினம் முதல் சமரச சன்மார்க்க சீலராம் அருமை நண்பர் அமிர்தலிங்கனார் வரையில் சவங்களாக்கப்பட்டதும்- இந்தத் தமிழ் நெஞ்சில் ஆணிகள் கொண்டு அடித்து இன்னமும் ரத்தம் வழியும் காயங்கள் அல்லவா?

 

இலங்கை பிரச்சினை

 

இந்தியாவின் ஈடற்ற இளந் தலைவர் ராஜீவ் காந்தியை வீழ்த்தி சின்னாபின்னப்படுத்திய பிறகும் - அதற்கு முன்பே சட்டமன்றப் பதவிகளை இலங்கைப் பிரச்சினைக்காகத் துறந்த எனக்கும், எனதருமைப் பேராசிரியருக்கும் எத்தகைய துயரம் ஏற்பட்டு எங்களைத் துவள வைத்தது என்பதை யார் அறிவார்?

 

வெறுக்கத்தக்கதும்-வேண்டத் தகாததுமான இத்தனை கொடுமைகளுக்கும் "விடுதலைப் போர்'' என்று பெயரிட்டு அழைத்தாலும்-இலங்கையில் விடுதலைப் போர்- இங்கேயிருந்து ஆதரவு தரும் தமிழர்களுக்கு கெடுதலை உருவாக்கும் காரியமன்றோ செய்கின்றார் களத்தில் நிற்போரிடம் கள்ள உறவு வைத்துக் கொண்டு!

 

திருமாவளவன் கேள்வி

 

எல்லோரும் ஒன்றாய்க் கூடி இலங்கைத் தமிழர்க்கு ஆதரவு தரும் கூட்டு முயற்சிக்கு இங்கே வேட்டு வைத்தது யார் என்று; திருச்சி கூட்டத்தில் தம்பி திருமாவளவன் அடுக்கடுக்கான ஆதாரங்களை வரிசைப்படுத்தினாரே

 

1.அனைத்துக் கட்சிகளின் கூட்டத்திற்கு வர மறுத்தவர் யார்?.


2.மனிதச் சங்கிலிக்கு வர மறுத்தவர் யார்?.


3.டெல்லியில் பிரதமரைச் சந்திக்க வர மறுத்தவர்கள் யார்?.


4. உண்ணாவிரதங்களை கபட நாடகம் என்றுரைத்தவர் யார்?.


5.ஈழ விடுதலைக்காக அடுக்கடுக்கான போராட்டங்களை நடத்திய தலைவர் கருணாநிதி அல்லவா? இப்போது நீலிக் கண்ணீர் வடிப்போர் இது வரை ஈழத் தமிழ் சொந்தங்களுக்காக கண்ணீர் வடித்ததுண்டா?


6.இப்போது ஈழம் வாங்கித் தருகிறேன் என்பவர் தேர்தலுக்குப் பிறகு அதைப் பற்றிப் பேசுவாரா?.


7. ஒரு சில இடங்களுக்காகத்தான் அந்த அணியோடு கூட்டணி சேர்ந்தார்களே தவிர, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பார் என்று நினைத்தா தோழமை கொண்டார்கள்? என்றெல்லாம் அடுக்கடுக்காக கேள்விகளைத் தொடுத்தார் திருமாவளவன்.

 

பாராளுமன்ற தேர்தல்...

 

நாடாளுமன்றத் தேர்தல் தேதி நெருங்கியவுடன்; இலங்கையில் படையெடுத்து ஈழத்தை அமைப்போம் என்று இன்றைக்கு எக்காளமிடுகிறாரே; இவருடைய கூட்டணிக் கட்சியாம் கம்ïனிஸ்ட் சீனா கை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்குமா? இத்தகையோர் கோமாளி நடவடிக்கைகளுக்கிடையே அங்கே இலங்கையில் போரில் சிக்கி அவதிப்படும் தமிழர்களைக் காத்திட நமது ஒரு உயிர் பயன்பட்டால் என்ன என்று எடுத்த முடிவுதான்- யாருக்கும் தெரிவிக்காமல் நான் மேற்கொண்ட உண்ணா நோன்பு.

 

வீட்டில் உள்ளவர்களும்-நாட்டில் உள்ள உடன்பிறப்புகளும்-உங்களிடம் அறிவிக்காமல் மேற்கொண்ட இந்த அறப் போருக்காக என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒன்று; அன்று வெற்றி பெற்றதால் இன்று உம்மோடு இருக்கிறேன்.

 

இல்லையேல் விருதுநகர் சங்கரலிங்க நாடார் கல்லறையின் அருகில் -ஈழத்து திலீபன் கல்லறைக்குப் பக்கத்தில் தான் இருந்திருப்பேன்- இது என்தமிழ் மீது சத்தியம்- அண்ணா, அய்யா மீது ஆணை என்பதை மட்டும் அறிந்திடுக! எல்லாம் ஓரளவு நன்மையாக முடிந்த வரையில் சரி;

 

தொடர்பணி

 

அடுத்த கட்ட தொடர் பணி- நாடாளுமன்றத் தேர்தல் தொடர் பணி இருக்கிறதே-திருச்சியில் உன் திருமுகம் கண்டேன். அடுத்து, மதுரையிலும்- கோவையிலும்- மேட்டுப்பாளையத்திலும் என்னுயிரே உன்னைச் சந்திக்கிறேன். களைப்பைப் பொருட்படுத்தாமல் காரியமாற்றுக! என் கண்ணல்ல, மணியல்ல; களத்திலேயே இரு-இது ஜனநாயக வெற்றிக்கான களம் என்பதை மறவாதே!

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

 

 
Back to Top
சுவிஸ் செய்தி
News image

சுவிட்சர்லாந்தின் தேசிய நாள்

சுவிட்சர்லாந்து நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடு.

Sunday, 1 August 2010

விரிவு...
News image

இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது

சுவிட்சர்லாந்திலுள்ள இரத்தினக்கல் நிறுவனமொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இஸ்ரேலியர் ஒருவர் கைது ...

Thursday, 29 July 2010

விரிவு...
News image

ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ் காலிறுதிச் சுற்றிற்குத் தகுதி

சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் அலியன்ஸ் சியூ பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ்,காலிஞதிச் சுற்றிற்குத் தகுதி ...

Thursday, 29 July 2010

விரிவு...
News image

உலக புகழ்பெற்ற சுவிட்சர்லாந்து நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரரின் பயிற்றுவிப்பாளராக போல் அனாகோன்

போல் அனாகோன், ரொஜர் பெடரரின் தற்காலிக பயிற்றுவிப்பாளராக அனாகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, 29 July 2010

விரிவு...
-
+
1

உலகச் செய்தி
News image

பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி

பாகிஸ்தானின் குவேட்டா நகரில் இன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Friday, 3 September 2010

விரிவு...
News image

பிரிட்டன் அத்தியாவசிய சேவை ஊழியர் வேலை நிறுத்தம் : அரசு தடை

பிரித்தானியாவில் அத்தியாவசிய சேவை துறை ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதித்தது பிரித்தானியா அரசுபிரித்தானிய அரசு செலவீனங்களை கட்டுப்படுத்த தொடங்கியுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள பொதுத்துறை ஊழியர் அமைப்புக்கள் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடத்த முடிவு செய...

Friday, 3 September 2010

விரிவு...
News image

மலேசியாவில் கர்ப்பிணிகளாகும் மாணவிகளுக்கு சிறப்பு பள்ளி

பள்ளிகளில் பலவிதம் உண்டு. ஆனால் மலேசியாவில் திறக்கப்பட்டுள்ள இந்த பள்ளி புது விதம். பள்ளிப் பருவத்தில் திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாகும் பெண்களுக்காக மலேசியாவில் இந்தத் தனி பள்ளி ஒன்று திற...

Thursday, 2 September 2010

விரிவு...
News image

ஈராக்கில் அமெரிக்க வேலை முடிந்துவிட்டது: ஒபாமா அறிவிப்பு

ஈராக் போர் முடிந்து விட்டதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார். ஈராக் நாட்டின் பாதுகாப்பை அதன் மக்களிடமே ஒப்படைப்பதாகவும், ஈராக்கிற்காக அமெரிக்க ராணுவம் செய்த தியாகம் பாராட்டிற்குரியது என்றும் அவர் கூற...

Thursday, 2 September 2010

விரிவு...
-
+
1
இந்திய செய்திகள்
News image

இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்

இந்திய இராணுவத் தளபதி வி.கே.சிங் நாளை மறுதினம் இலங்கை வரவுள்ளார். ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டே அவர் இலங்கை வரவுள்ளார்.

Friday, 3 September 2010

விரிவு...
News image

சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்

கொழும்பில் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென்று தமிழ் எழுத்தாளர்களும், திரைப்பட இயக்குநர்களும் கோரிக்கை விட...

Friday, 3 September 2010

விரிவு...
News image

தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, கச்சத்தீவு கடல் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் விரட்டியடித்தனர்....

Thursday, 2 September 2010

விரிவு...
News image

இலங்கைக்கு வெடி பொருட்களை கடத்த முயற்சி

இலங்கைக்கு வெடி பொருட்களை கடத்த முற்பட்ட இருவர், தமிழ் நாட்டு தொண்டி கடற்பரப்பில் வைத்து வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Thursday, 2 September 2010

விரிவு...
-
+
1
பகிர்ந்துகொள்
Facebook MySpace Twitter Google Bookmarks RSS Feed 
விளையாட்டு செய்திகள்
News image

இலங்கை அணி சம்பியன்

தம்புள்ளையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

Sunday, 29 August 2010

விரிவு...
News image

சூராஜ் ரந்திவ், சேவாக்கிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்

இலங்கை அணியின் பந்துவீச்சாளர் சூராஜ் ரந்திவ் இந்திய அணியின் ஆரம்ப வீரர் வீரேந்திர சேவாக்குக்கு நோ பால் வீசியதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

Tuesday, 17 August 2010

விரிவு...
News image

முரளி இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் இலங்கைக் கிரிக்கெட்

உலகில் அதிகளவு விக்கெட்டுகளைப் பெற்று வரலாற்று நாயகனாக விளங்கும் முத்தையா முரளிதரன் இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் புதிய கிரிக்கெட் சகாப்தத்திற்குள் இலங்கை நேற்று வெள்ளிக்கிழமை ...

Saturday, 24 July 2010

விரிவு...
News image

முரளிதரன் உலக சாதனை-முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி

காலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தனது 800வது விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார் முத்தையா முரளிதரன். இப்போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை ...

Thursday, 22 July 2010

விரிவு...
-
+
1
முரசத்தின் தொடர்பு

+41 (0) 76 290 13 13

 info @ murasam.ch