மேலும் இது தொடர்பாக சென்னையில் ஊடகவியலாளர்களை சந்தித்த திரையிலக தமிழீழ ஆதரவு இயக்கத்தின் அமைப்பாளரான இயக்குநர் பாரதிராஜா, திரைப்பட கலைஞர்களுக்கு சமூக பார்வை இருக்கவேண்டியது அவசியம். தமிழக அரசியலையும், திரைப்படத்துறையையும் பிரித்தறியமுடியாது.
இன்று தமிழக மக்களிடத்தில் இன உணர்வு மங்கிவிட்டது. அதனால் அதனை மீண்டும் கட்டியெழுப்பவும், நம்முடைய உறவான ஈழத்தமிழர்களை பாதுகாக்கவும் நம்மிடம் தற்போதிருக்கும் பலமான ஜனநாயக ஆயுதம் வாக்குரிமை. இதனை மிகச்சரியாக இனத்தை அழித்து வருபவர்களுக்கு எதிராக பயன்படுத்துங்கள் என்பதை வலியுறுத்தி நான், இயக்குநர்கள் சீமான், ஆர். கே. செல்வமணி,ஆர். சுந்தரராஜன், சேரன், அமீர், ஷரணசுப்பையா, செல்வபாரதி, பிரவீண் காந்த்,மனோஜ்குமார், மணிவண்ணன், நடிகர் வடிவேலு, கவிஞர் அறிவுமதி, கவிஞர் சினேகன் மற்றும் ஏராளமான இணை, துணை இயக்குநர்கள் பிரச்சாரத்தைமேற்கொள்ள இருக்கிறோம்.
பேரறிஞர் அண்ணா பிறந்த இடமான காஞ்சிபுரத்தில் தொடங்குகிறோம். ஆரணி, சேலம், திருப்பூர், திண்டுக்கல், விருதுநனர், தென்காசி, திருநெல்வேலி,சிவகங்கை, கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்கில் பொதுகூட்டம் நடத்தி, தமிழின விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்துகிறோம்.
இலங்கையில் கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலையாவதற்கு யார் மூல காரணம் என்பதை அடையாளம் காட்டுவோம்.
தமிழகத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி வரும்போது எங்களுடைய எதிர்ப்பை எந்த வகையில் காட்டவேண்டுமோ அந்த வகையில் முறைப்படி காட்டுவோம். என்றார்.
- ஊடகங்களுக்கு மேர்வின் சில்வா எச்சரிக்கை
- துன்பத் தீயில் துவள்கின்றேன் : சிறையில் வாடும் சண்முகத்தின் கண்ணீர் மடல்
- கிழக்கில் யுத்தம் முடிந்து இதுவரை 95 பேர் காணாமல் போயுள்ளனர் : ததேகூ
- வல்லுறவுச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது கடமையைச் செய்வதற்கு ஐ. நா.தவறியுள்ளது
- இந்தியாவில் பஸ் விபத்து:22 பேர் பலி
- லக்ஷர் ஈ தொய்பா முகாம் குறித்து இந்தியாவிடம் தகவல் கோரியுள்ளது இலங்கை
- சன் ஸீ கப்பலில் சென்றவர் புலிகள் இயக்க அங்கத்தவர் என்ற சந்தேகத்தில் தடுத்து வைப்பு
- த.தே.கூ தடை செய்யப்பட வேண்டும் பியசேன
- தீக்காயத்துக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதி
- அலெக்ஸ் மீண்டும் கனடா செல்ல விருப்பம்





.jpg)











