வைகோ பிரசாரம்

 

தஞ்சை தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை.பாலகிருஷ்ணனை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று வல்லம் அண்ணாசிலை அருகில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். பின்னர் செங்கிப்பட்டி பஸ் நிலையம் அருகேயும், பூதலூரிலும் துரை.பாலகிருஷ்ணனுக்கு ஆதரவு கேட்டு பேசினார்.


அங்கு வைகோ பேசியதாவது:-

 

பிரதமர் ஆக தகுதி

 

ஜெயலலிதா பிரதமர் ஆவதற்கு தகுதியானவர். அவர் ஆசைப்படாமல் இருக்கலாம். ஈரோட்டில் பேசிய ஜெயலலிதா, இலங்கையில் தனி தமிழீழம் அமைக்க பாடுபடுவேன் என்றார். பின்னர் இந்திய ராணுவத்தை அனுப்பி தனி தமிழீழத்தை நிர்மாணிப்பேன் என்றார்.

 

இதற்காக நான் கூறவில்லை. அதற்கு 10 நாட்களுக்கு முன்பே நான் ஜெயலலிதா தான் பிரதமர் ஆக தகுதியானவர் என்று கூறினேன். உலகத்தமிழர்கள் வேதனையாக உள்ள நேரத்தில் ஜெயலலிதாவின் பிரகடனம் இருட்டுக்கு மத்தியில் வெளிச்சம் ஏற்பட்டதைப்போல் உள்ளது.

 alt

ஆதாரங்கள்

 

இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்பாக செய்தி வெளியிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுப்பதோடு, சிங்கள அரசுடன் இணைந்து காங்கிரசும் இனப்படுகொலையை நடத்துகின்றது என நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். இதற்கான ஆதாரங்கள் ஆயிரம் உள்ளன.

 

பிரபாகரனை அழிப்பதற்காக ஆயுதம் ஏற்றிச்சென்ற வாகனங்கள் கோவையில் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளன. இதனை பெரியார் தி.க.வினர், ம.தி.மு.க.வினர் செய்தனர் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

 

குறுந்தகடு

 

இலங்கை படுகொலை துயரங்களை குறுந்தகடாக வெளியிடக்கூடாது என்றும், துண்டு பிரசுரங்களாக கொடுக்கக்கூடாது என்றும் அவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் மிரட்டல் விடுத்து உள்ளார். இது என்ன ஹிட்லர் நாடா?

 

குறுந்தகடு, துண்டு நோட்டீசு வினியோகிப்பதை போலீசார் தடுக்கலாம். ஆனால் அதனை வீடு, வீடாக காலை 5 மணிக்குள் கொடுங்கள். போலீசாரும் அந்த குறுந்தகடை வாங்கி போட்டு பாருங்கள். அப்போது இலங்கை தமிழர்களின் நிலை புரியும்.

 

இலங்கை தமிழர்களை அழிப்பதற்காக இந்தியாவில் இருந்து ஆயுதம் கொண்டு சென்றால் அதனை தடுத்து நிறுத்தப்படும். அதற்கு நான் ஆதரவு கொடுப்பேன்.இவ்வாறு அவர் பேசினார்.

 

பின்னர் திருக்காட்டுப்பள்ளி மற்றும் திருவையாறில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு பேசினார்.


 

 
  1. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  2. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  3. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  4. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  5. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  6. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  7. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  8. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
  9. இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
  10. தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

கட்டுரைகள்