அந்த மோதலின்போது எதிர்தாக்குதல் நடத்திய ராணுவ வீரர்கள் 20 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பொய் பிரசாரம்
கோவையை அடுத்த மதுக்கரை ராணுவ முகாமை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள், ஆந்திரா மாநிலம் ஐதராபாத்துக்கு துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு சென்றிருந்தனர்.
ஐதராபாத்தில் அவர்கள் பயிற்சியை முடித்துக்கொண்டு, 80 லாரிகளில் கோவைக்கு திரும்பினார்கள். அந்த லாரிகளில் பயிற்சிக்காக பயன்படுத்திய ஆயுதங்கள், தளவாட பொருட்கள் வைத்திருந்தனர்.
லாரிகள் கோவையை அடுத்த நீலாம்பூர் பைபாஸ் சாலையில் நேற்று முன்தினம் மாலை அணிவகுத்து வந்துகொண்டிருந்தன. இதையறிந்த சிலர், அந்த லாரிகளில் இலங்கைக்கு ஆயுதங்களை எடுத்து செல்வதாக தகவல் பரப்பினார்கள்.
இதையடுத்து பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் 100 பேர் நீலாம்பூர் பைபாஸ் சாலையில் குறுக்கே நின்று ராணுவ லாரிகளை தடுத்து போராட்டம் செய்தனர்.
ராணுவ லாரிகள் நொறுக்கப்பட்டன
மேலும் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். அவர்களில் சிலர் திடீரென ராணுவ லாரிகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். கற்களை எடுத்துவீசி லாரிகளின் கண்ணாடிகளை நொறுக்கினார்கள். இதில் லாரியை ஓட்டிவந்த ஒரு வீரரின் நெற்றியில் காயம் ஏற்பட்டது. சில லாரிகளின் டயர்களில் இருந்த காற்றை பிடுங்கிவிட்டனர்.
லாரிகளில் இருந்த ஆயுதங்கள், தளவாட பொருட்கள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவற்றை ரோட்டில் இழுத்துப்போட்டு தீ வைத்தனர். திடீரென ஏற்பட்ட வன்முறை காரணமாக அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினார்கள்.
பெரியார் தி.க.வினர் கைது
அப்போது ராணுவவீரர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளுவாக மாறியது. மேலும் ராணுவவீரர்கள் தங்களது ஆயுதங்கள், தளவாட பொருட்களை தற்காத்துக்கொள்வதற்காக சிலரது மீது தாக்குதலும் நடத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரியார் தி.க. பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், அம்பேத்கார், சண்முகசுந்தரம் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
13 பேர் ஜெயிலில் அடைப்பு
கைதான 13 பேரும் பல்லடம் மாஜிஸ்திரேட்டு நேற்று ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சூலூர் போலீசார் மொத்தம் 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருப்பவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
தனிப்படை போலீசார் கோவையில் ம.தி.மு.க மற்றும் பெரியார் திராவிட கழகத்தினரை தேடும் பணியில் தீவிரமாக உள்ளனர்.
ராணுவ வீரர்கள் மீது வழக்கு
இதற்கிடையே சம்பவத்தில் ராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் தாக்கியதாக போலீஸ் ஐ.ஜி. பிரமோத்குமாரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஐ.ஜி. உத்தரவின்பேரில் ராணுவ வீரர்கள் 20 பேர்மீது சூலூர் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. குற்றம்புரியும் நோக்கத்துடன் கூடுதல், ஆயுதங்களை வைத்திருத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், இரும்புக்கம்பியால் தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ராணுவ வீரர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நீலாம்பூர் சம்பவம் தொடர்பாக அறிந்ததும் மதுக்கரை ராணுவ முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அங்கு லாரிகள் சேதப்படுத்தப்பட்டது, தளவாள பொருட்கள் நாசப்படுத்தப்பட்டது போன்றவற்றை பார்வையிட்டனர். ராணுவத்துக்கு சொந்தமான பொருட்கள் என்னென்ன நாசப்படுத்தப்பட்டன? என்ற தகவல்களை சேகரிக்க உத்தரவிட்டனர். அதையடுத்து தாக்குதல் சம்பவத்தில் நாசமான லாரிகள், பொருட்கள், ஆயுதங்கள் பற்றிய விவரங்களை ராணுவ வீரர்கள் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலதிக செய்திகள்
- இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
- கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
- பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
- போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
- ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
- பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி



.jpg)


