உடனே சபாநாயகர் கோஷ மிடக்கூடாது என்று கூறினார். என்றாலும் அ.தி.மு.க.வினர் தொடர்ந்து கோஷமிட்டப்படி இருந்தனர்.
இதையடுத்து சபாநாயகர் அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரையும் சபையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டார்.
அவையில் இருந்து வெளியேற்றப்பட்டது குறித்து அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இலங்கையில் 50 ஆயிரம் தமிழர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். எனவே இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்துக்கு முன்பு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவுறுத்தலின் பேரில் சபாநாயகரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அவர் அனுமதி மறுத்து விட்டார்.
அதுபற்றி மீண்டும் அனுமதி கேட்டு பிரச்சினையை எழுப்பினோம். சபாநாயகர் முடிவு எடுப்பதற்குள் முதல் அமைச்சர் எங்களை வெளி யேற்ற சொல்லி விட்டார்.அதன் பிறகு சபாநாயகர் எங்களை வெளியேற்ற உத்தரவிட்டார் என்றார்.
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்




.jpg)







.jpg)





