சட்டசபையில் நேற்று, இலங்கையில் போர் முடிவுக்குப் பின்பு தமிழர்களுக்கு வாழ்வுரிமையைப் பெற்றுத் தருவது என்பதோடு மருந்து மற்றும் உணவுப் பொருள்களை ஏற்படுத்தித் தருவது குறித்து ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அதில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ்,
இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னரும் 3 லட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்து பாதுகாப்பின்றி வாழ்கிறார்கள் என்கிற போது துடித்துப்போகிறோம். பிரதமர் ரூ.500 கோடி நிதியுதவி அளித்தார்.
ஆனாலும் இலங்கையில் இருந்து வருகிற செய்திகள் மனநிறைவை தரவில்லை. தமிழர்களை இலங்கை அரசு திருப்தியாக நடத்தவில்லை என்று நமது உள்துறை மந்திரியே கூறியிருக்கிறார்.
இலங்கை தமிழர்களுக்கு அடுத்த வழிகாட்டும் தலைவர் இல்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. இலங்கையில் நடந்திருப்பது மிகப்பெரிய வரலாற்று பிழை. இலங்கை தமிழர்கள் மீண்டும் வாழ்வுரிமை பெற வேண்டும். அதைப் பெறுகிற முயற்சியை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்றார்.
மேலதிக செய்திகள்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
- நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
- இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
- தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
- பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
- இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
- தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?



.jpg)


