சட்டசபையில் நேற்று, இலங்கையில் போர் முடிவுக்குப் பின்பு தமிழர்களுக்கு வாழ்வுரிமையைப் பெற்றுத் தருவது என்பதோடு மருந்து மற்றும் உணவுப் பொருள்களை ஏற்படுத்தித் தருவது குறித்து ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம்,
இலங்கை போருக்கு முன் உள்ள நிலை பற்றி கருத்து தெரிவிக்கக் கூடாது என்று கேட்டு எனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போரில் மனித உரிமை மீறப்பட்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிவார்கள். அதில் யார் பாவம் செய்தார்களோ? அவா அவா செய்த பாவம் அவா அவாளுக்கே போய்ச் சேரும். நீங்கள் செய்திருந்தால் நோக்குஇ நாங்கள் செய்திருந்தால் நேக்கு.
போருக்கு பின் ஆடு, மாடுகளைவிட கேவலமாக முள்வேலி அமைத்து தமிழ் இளைஞர்களை அடைத்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாத நிலையில் நாம் இருக்கிறோம்.
வணங்கா மண் கப்பல் பல வாரங்களாக கடலில் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது. அதில் வந்த மருந்துகள் கூட காலாவதியாகிவிடும் சூழ்நிலை ஏற்படுமோ என்று தோன்றுகிறது.
இலங்கை தமிழர்கள் மனதில் இன்னும் நம்பிக்கை எழவில்லை. அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தமிழர்களுக்கு சம உரிமை, சம வாழ்வு கிடைக்க நடவடிக்கை எடுத்தால் தான் வருங்கால சரித்திரத்தில் நாம் போருக்கு முன் ஏற்படுத்திய நம்பிக்கையற்ற சூழ்நிலை மாறும். இனிமேலாவது இலங்கை தமிழர்களை காப்பாற்றப்படுகிற சூழ்நிலையை ஏற்படுத்திட வேண்டும் என்றார்.
மேலதிக செய்திகள்
- இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
- கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
- பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
- போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
- ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
- பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி



.jpg)


