எரிபொருள்களின் விலை உயர்வுக்கு மக்களவையில் அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
திமுக, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய இரு கட்சி எம்.பி.க்களும் பாஜக, சமாஜவாதி மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகளுடன் இணைந்து மக்களவையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இது குறித்து திமுக எம்.பி. டி.ஆர். பாலு மத்திய அரசை நேரடியாகக் குற்றம்சாட்டினார்.
"மத்திய அரசு திமுக, திரிணமூல் காங்கிரஸ் ஆகியவற்றின் ஆதரவுடன் தான் ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆலோசித்து இருக்க வேண்டும். அல்லது மத்திய அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி விவாதித்து இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் தன்னிச்சையாக முடிவு எடுப்பது சரியானது அல்ல.
தற்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது நல்லதல்ல. அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். காங்கிரஸ் கட்சியின் நெருங்கிய நண்பன் என்ற முறையில் இதனை வலியுறுத்துகிறேன்' என்று டி. ஆர். பாலு கூறினார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சுதீப் பந்தோபாத்யாயாவும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியப் பொருள்கள் விலை உயர்ந்துள்ளது என்பது உண்மைதான். இருந்தாலும் இந்த விலை உயர்வு பொதுமக்களை பெரிதும் பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலதிக செய்திகள்
- ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
- பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
- நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
- இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
- தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
- பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு



.jpg)


