ஓரினச் சேர்க்கை செயலை கிரிமினல் குற்றம் என்று கூறும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவு அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்றும் 105 பக்க தீர்ப்பில் அது அறிவித்துள்ளது.
ஓரினச் சேர்க்கையை உரிமையாக அறிவிக்கக்கோரி தொண்டு நிறுவனமான நாஸ் அறக்கட்டளையும் மற்றவர்களும் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்து தலைமை நீதிபதி ஏ.பி.ஷாஇ நீதிபதி எஸ்.முரளீதர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த தீர்ப்பை பிறப்பித்தது.
அந்தரங்கமாக பரஸ்பர சம்மதத்துடன் வயது வந்தவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டால் அது கிரிமினல் குற்றம் என்று அறிவிக்கும் இந்திய தண்டனைச்சட்டத்தின் 377வது பிரிவு அரசமைப்புச் சட்டத்தின் 21, 14, 15வது பிரிவுகளை மீறுவதாகும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
377வது பிரிவில் அரசு உரிய சட்டத் திருத்தம் கொண்டுவரும் வரையில் இந்த தீர்ப்பு செல்லுபடியாகும். வயது வந்தவர்கள் என்றால் 18 வயதும் அதற்கு மேற்பட்டவர்களாகும்.
பரஸ்பரம் சம்மதமில்லாமல் வலுக்கட்டாய ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டாலோ அல்லது மைனர்களுடன் தகாத முறையில் சேர்க்கையில் ஈடுபட்டாலோ அது குற்றமாகும் என நிர்ணயிக்கும் 377வது பிரிவின் சரத்து தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீர்ப்பை முற்போக்கானது என ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தீர்ப்புக்கு ஜும்மா மசூதி இமாம் அகமது புகாரி, கத்தோலிக்க சர்ச் செய்தித்தொடர்பாளர் டொமினிக் இம்மானுவேல் போன்றோர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு விரோதமானது என்றும் அதற்கு சட்ட அங்கீகாரம் தரக்கூடாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவை ரத்து செய்வது பற்றி அரசு பரிசீலித்து வரும் நிலையில் இந்த தீர்ப்பு வந்துள்ளது.
மேலதிக செய்திகள்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
- நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
- இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
- தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
- பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
- இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
- தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?



.jpg)


