ஆனி பெüர்ணமி நாளில் நடைபெறும் இம் மாநாட்டின் முகப்புத் தோற்றம், கோட்டையைப் போல அமைக்கப்பட்டுள்ளது.
மாநாடு நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் மின்விளக்கு அலங்காரத்துடன் "மதில்கள்' அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெரியார், அண்ணா, வைகோவின் உருவங்களும் சீரியல் விளக்கு அலங்காரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதற்காக தீவுத் திடலில் பிரத்யேக டிரான்ஸ்பார்மர்கள், ஜெனரேட்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. மாநாட்டுத் திடலின் நடுவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மதிமுகவின் சின்னமான "பம்பரம்', பெரியார், அண்ணா ஆகியோரின் உருவங்களும் மேடையை அலங்கரிக்கின்றன.
எங்கெங்கு காணினும் மதிமுக கொடிகள்: மாநாட்டு வளாகம், தீவுத்திடல், காமராஜர் சாலை, வாலாஜா சாலை, அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மதிமுக கொடிகள், குழல்விளக்குகள் கட்டப்பட்டுள்ளன.
மதிமுக தொண்டர்களை வரவேற்கும் வகையில், பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
ராட்சத பலூனும் பறக்க விடப்பட உள்ளது.
வைகோவை வாழ்த்தும் வகையில், "தென்னகத்து நேதாஜியே', "வாழும் செகுவரா' என்ற அடைமொழிகளுடன் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டு மேடை அமைத்தல், அலங்கார வேலைகளில் நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இப் பணிகளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.30 மணி வரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பார்வையிட்டார்.
மாநாட்டின் தொடக்கமாக கொள்கை விளக்கப் பாடல்களுடன் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மாலை 4 மணிக்குத் தொடங்கும் இம் மாநாட்டுக்கு நாசரேத் துரை தலைமை வகிக்கிறார். கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தொடங்கி வைக்கிறார்.
வேளச்சேரி பி. மணிமாறன் வரவேற்பு உரையாற்றுகிறார். கட்சிக் கொடியை சு. ஜீவன் ஏற்றுகிறார். பெரியார், அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களின் படங்களை பாலவாக்கம் க. சோமு திறந்து வைக்கிறார்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மு. தம்பிதுரை பங்கேற்கிறார். மு. கண்ணப்பன், மல்லை சி.இ. சத்யா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். நிறைவாக வைகோ மாநாட்டு உரை நிகழ்த்துகிறார்.
ஊர்வலத்தில் தொண்டர்கள் அணி வகுப்பு: முன்னதாக மாநாட்டு பேரணி சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் முன்பிருந்து மாலை 3 மணிக்குப் புறப்படுகிறது.
அண்ணா சிலை, பெரியார் சிலை வழியாக வரும் இந்த அணி வகுப்பு ஊர்வலத்தை மன்றோ சிலை அருகே அமைக்கப்படும் பிரத்யேக மேடையில் இருந்தவாறு வைகோ பார்வையிடுகிறார். இதன்பின் இந்த ஊர்வலம் மாநாட்டுத் திடலுடன் நிறைவடைகிறது.
மாநில முகாமில் பயிற்சி பெற்ற 300-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் சீருடை அணிந்து அணிவகுப்பில் பங்கேற்கின்றனர்.
மகளிர் அணியினரும் இந்த அணி வகுப்பில் பங்கேற்கின்றனர். பாண்டு வாத்தியங்கள் இசைக்க, கொடிகளை ஏந்தியவாறு தொண்டர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.
போக்குவரத்து மாற்றம்: மதிமுக மாநாட்டையொட்டி மன்றோ சிலை, கடற்கரைச் சாலை, போர் நினைவுச் சின்னம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை




.jpg)







.jpg)





