SmallMediumLarge NarrowWideFluid
வன்னியிலிருந்து வந்த மக்கள் மீது படையினர் துப்பாக்கிச் சூடு 7 பேர் பலி அச்சிடு E-mail
இலங்கை
[ வா.கி.குமார் ]   
ஞாயிறு, 11 சனவரி 2009 09:34

altவன்னியில் விடுவிக்கப்படாத பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தவர்கள் மீது படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 7 பேர் கொல்லப்பட்டதுடன், 5 பேர் காயமடைந்துள்ளனர். 
 


கண்டாவளையையும் அதனை அண்டிய பகுதி மக்களும் அங்கிருந்து புறப்பட்டு ஊரியான் பகுதிக்கு நேற்று அதிகாலை 3 மணியளவில் வந்துகொண்டிருந்த போதே தம்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தெரிவித்தனர்.

 


இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் சடலங்களும், காயமடைந்தவர்களும் வவுனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். 55 பேர் இவ்வாறு இடம்பெயர்ந்து வந்துகொண்டிருந்தபோதே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

 


வவுனியா பொது மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டவர்களிடம் வவுனியா மாவட்ட நீதவான் அலக்ஸ்ராஜா இன்று ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினார்.

 

கொல்லப்பட்டவர்களில் நால்வரது சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். மகேந்திரன் (47), ராஜ்குமார் (12), சன்சிகா (03), தனுஷா (14) ஆகியோருடைய சடலங்களே அடையாளம் காணப்பட்டுள்ளன.

 

தம்மீது யார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினார்கள் என்பது தெரியாதபோதும், இராணுவத்தினரே தம்மைக் காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்ததாக காயமடைந்த மக்கள் தெரிவித்தனர். 
 
 


 
Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.

 

சிறப்பு ஆய்வுகள்

தமிழ்த் தேசியத்தை விழுங்க முயற்சிக்கும் சிங்கள தேசியம்

இராணுவ ரீதியாகத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்கிய சிங்கள அரசு, இப்போது வரலாற்று ரீதியாக அவர்களை அடிமைப்படுத்தி, தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேரே - வடக்கும் கிழக்கும் தமிழரின் மரபுவழித் தாயகம், தமிழர்கள் ஒரு தேசிய இனம், தமிழ் மக்களுக்கு தன்னாட்சி உரிமை உள்ளது ஆகிய விடயங்கள் தான்.

 
இனிவரும் போர்...?

ஈழத் தமிழினத்தினைப் போல பாவப்பட்ட வேறொரு இனம்  தற்போது இருக்கமுடியாது. அந்தளவுக்கு பலவந்தமாக அவலப்படுத்தப்பட்ட இனமாகவும், சர்வதேசத்தினால் முற்றுமுழுதாகக் கைவிடப்பட்ட ஒரு இனமாகவும் ஈழத் தமிழினம் போய்விட்டுள்ளதென்பது சோகத்திலும் சோகமான விடயம்.

 
இட்ட அடி நோக , எடுத்த அடி கொப்பழிக்க …

தோல்வியில் இருந்து மீண்டெழுதல் , இன்றைய வரலாற்றுக் கடமை இது“இயற்கை எனது நண்பன். வாழ்க்கை எனது தத்துவாசிரியன். வரலாறு எனது வழிகாட்டி.”
இது தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கூறிய மிகப் பிரபல்யமான கருத்து.

 
ஈரடி பின்னால் ஓரடி முன்னால்?

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு திருப்புமுனையைச் சந்தித்துள்ள இன்றைய காலகட்டத்தில் அடுத்தது என்ன எனத் தெரியாத சூழ்நிலைக்குத் தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ள அதேவேளை புலம்பெயர் தமிழர் மத்தியில் இக்குழப்பம் வெகுவாக நிலவுதுடன், மோதல் உருவாகக் கூடிய அபாயமும் தென்படுகின்றது.