கோவை அருகே இடையர்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை பன்னாட்டு அரிமா சங்கங்கள் சார்பில் நடந்த மண்டல மாநாட்டில் அவர் பேசியதாவது:
நம் நாட்டில் அறிவியல், விஞ்ஞானம் வளர்ந்து கொண்டே சென்றாலும் மக்களுக்குத் துன்பம் குறைந்தபாடில்லை. உணர்வு, பாசம், நெறிகள் அனைத்தும் நாசமாகிக் கொண்டிருக்கின்றன.
சந்திராயன்-1 விண்கலத்தை விண்ணுக்குச் செலுத்தி வெற்றி கண்டுள்ளோம். நாம் ஒரு புறம் மேல் நோக்கிச் சென்றாலும், மறுபுறம் பாதாளக் குழிக்குள் விழுகின்றோம்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள இளம் பெண்கள் தங்களது மண்ணின் மானம் காக்க ஆயுதம் ஏந்தி போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், போரை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறி மறைமுகமாக இலங்கை ராணுவத்துக்கு மத்திய அரசு ஆயுத உதவிகளையும், நிதி உதவியையும் அளித்து ஊக்குவித்து வருகிறது.
தமிழர்களின் பண்பாடு அழியாமல் இருக்குமானால் அது ஈழத் தமிழர்களால்தான். ஆனால், அவர்கள் போரில் கொல்லப்பட்டு அவர்களின் ஆடைகளை களைந்து சிங்கள ராணுவத்தினர் சித்ரவதை செய்கின்றனர்.
ஈழத்தில் தமிழர்களாக பிறப்பது பாவமா? இதற்கு இந்தியாவில் வாழும் தமிழ் உணர்வு உள்ள தமிழர்கள்தான் பதில் கூற வேண்டும் என்றார் அவர்.

.jpg)
















