| குடாநாட்டில் ஏழு இளைஞர்களின் சடலங்கள் ஒரு வாரத்தில் கரையொதுங்கின |
|
|
| இலங்கை |
| [ வா.கி.குமார் ] |
| திங்கள், 12 சனவரி 2009 14:41 |
|
காங்கேசன்துறை கடற்கரையில் கடந்த வியாழக்கிழமை ஒதுங்கிய நான்கு இளைஞர்களின் சடலங்கள் அன்று மாலை பொலிஸாரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
கடந்த வாரம் வடமராட்சி பருத்தித்துறை கடற்கரையில் இரு இளைஞர்களின் சடலங்களும் கரையொதுங்கின.
அண்மைக்காலங்களில் குடாநாட்டில் பல இளைஞர்கள் கடத்தப்பட்டும், காணாமலும் போயுள்ளதால் இச்சடலங்கள் அவர்களுடையதாக இருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. |
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|
சிறப்பு ஆய்வுகள்
| தமிழ்த் தேசியத்தை விழுங்க முயற்சிக்கும் சிங்கள தேசியம் |
இராணுவ ரீதியாகத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்கிய சிங்கள அரசு, இப்போது வரலாற்று ரீதியாக அவர்களை அடிமைப்படுத்தி, தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேரே - வடக்கும் கிழக்கும் தமிழரின் மரபுவழித் தாயகம், தமிழர்கள் ஒரு தேசிய இனம், தமிழ் மக்களுக்கு தன்னாட்சி உரிமை உள்ளது ஆகிய விடயங்கள் தான். |
| இனிவரும் போர்...? |
|
| இட்ட அடி நோக , எடுத்த அடி கொப்பழிக்க … |
|
| ஈரடி பின்னால் ஓரடி முன்னால்? |
|








யாழ்ப்பாணம் குடாநாட்டு கடற்கரையோரங்களில் இளைஞர்களின் சடலங்கள் ஒதுங்கும் சம்பவங்கள் அதிகரித்துவருவதால் மக்கள் மத்தியில் அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழினத்தினைப் போல பாவப்பட்ட வேறொரு இனம் தற்போது இருக்கமுடியாது. அந்தளவுக்கு பலவந்தமாக அவலப்படுத்தப்பட்ட இனமாகவும், சர்வதேசத்தினால் முற்றுமுழுதாகக் கைவிடப்பட்ட ஒரு இனமாகவும் ஈழத் தமிழினம் போய்விட்டுள்ளதென்பது சோகத்திலும் சோகமான விடயம்.
தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு திருப்புமுனையைச் சந்தித்துள்ள இன்றைய காலகட்டத்தில் அடுத்தது என்ன எனத் தெரியாத சூழ்நிலைக்குத் தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ள அதேவேளை புலம்பெயர் தமிழர் மத்தியில் இக்குழப்பம் வெகுவாக நிலவுதுடன், மோதல் உருவாகக் கூடிய அபாயமும் தென்படுகின்றது.