இது தொடர்பில் சர்வதேச தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
இந்தியா இலங்கைக்கு வழங்கிய முழு உதவியின் அடிப்படையிலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள்.அண்மைய போரில் இந்தியா, இலங்கைக்கு ஆதரவாக இருந்தது.முழமையான உதவியை இந்தியா இலங்கைக்கு வழங்கியது.
இலங்கையின் இராணுவ வெற்றிக்கு இந்தியா எந்தளவு உதவியது என்பது தொடர்பிலான முழு விபரங்களுக்கும் எங்களுக்கு தெரிந்தபோதிலும் நாங்கள் இந்தியாவை வெறுக்கவில்லை.
இந்தியாவின் பிரதேச சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டால் தமிழ் மக்கள்தான் இந்தியாவுக்கு முழுமையான பாதுகாப்பாக இருப்பார்கள் என நாங்கள் உறுதியாக கருதுகிறோம். குறிப்பாக சீனாவை கருத்தில் கொண்டால் நிச்சயம் தமிழ் மக்கள்தான் இந்தியாவுக்கு முழுப் பாதுகாப்பாக இருக்க முடியும்.
இதை இந்தியா ஒரு நாள் உணரும், ஈழத் தமிழர்களின் சுய நிர்ணயப் போராட்டத்தை ஆதரிக்க முன்வரும்.இந்திய அரசுடன் நான் நேரடித் தொடர்பை ஏற்படுத்தவுள்ளேன். ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஆதரவு தருமாறு கோரவுள்ளேன்.
அதேபோல விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என்றார் அவர்.

.jpg)
















