இலங்கையில் எஞ்சியுள்ள தமிழர்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட பொருட்கள் கிடைப்பதற்கும் மத்திய அரசு மூலம் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

சட்டசபையில் இன்று இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பிறகு அங்குள்ள தமிழர்களுக்கு வாழ்வுரிமை பெற்றுத் தரவும், மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட அவர்களுக்கு தேவையான வசதி களை ஏற்படுத்துவது தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம்  விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

 

அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம், காங்கிரஸ் கட்சி கொறடா பீட்டர் அல்போன்ஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ராமசாமி ஆகியோர் இந்த விவாதத்தில் பங்கேற்று பேசினார்கள்.


இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், திறந்தவெளி பகுதியில் ஆடு, மாடுகளை போல் அடைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட அவர்கள், அந்த மக்களுக்கு தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க செய்ய வேண்டும் என்றும், அவர்களுடைய வாழ்விடங்களுக்கு சென்று பாதுகாப்பாக வாழ்வதற்கு இந்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

 

தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களர்களை குடியேற்றும் நிலை இருப்பதால் அதை தடுத்து நிறுத்தி ஏற்கனவே உள்ளது போல வடக்கு, கிழக்கு பகுதிகளை மீட்டு தமிழர்கள் முழு உரிமை பெற்று சிங்களர்களுக்கு இணையான சமவாழ்வு வாழ்வதற்கு இந்திய அரசு மூலம் தமிழக அரசு உடனடி முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.


இதற்கு நீண்ட பதிலளித்து முதலமைச்சர் கருணாநிதி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

 

இன்றைய தினம் இலங்கை தமிழர் பிரச்சனையை அரசியல் பிரச்சனையாக ஆக்காமல் அனைத்து கட்சி யினரும் ஒரே விதமான கருத்தை தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

 

இலங்கையில் நடைபெறும் பிரச்சனை என்பது சிங்களர் களுக்கும், தமிழ் இனத்திற்குமான போராட்ட மாகும். 50 ஆண்டு காலமாக இலங்கை தமிழர் தலைவர் செல்வா,அமிர்தலிங்கம், குட்டிமணி, ஜெகன் காலம் முதல் போராட்டம் நடை பெறுகிறது.

 

இலங்கையில் உள்ள தமிழர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். தமிழ் மொழி சீரழியாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக போராட்டம் நடைபெற்றது. இதற்காக தமிழீழம் அமைய வேண்டும் என்ற குரலும் எதிரொலித்தது.

 

இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளுக்கு இதில் பல்வேறு நிலைப்பாடு உண்டு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழீழம் என்கிற பிரிவினைக்கு ஆதரவு இல்லை. மாநில சுயாட்சி என்றஅளவில்தான் தீர்வு அமைய வேண்டும் என்பதுதான் அவர்களின் கொள்கையாக இருந்து வந்தது. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இப்போது தமிழீழம்தான் தீர்வு என்று மாற்றிக் கொண்டனர்.

 

பாமக கூட தமிழீழம்தான் தீர்வு என்று பேசி வந்தது. ஆனால் இன்று மாநில சுயாட்சி போதும் என்ற அளவிற்கு பேசி இருக்கிறார்கள். அதுதான் இப்போது முடியும். தமிழர்களுக்கு சம உரிமை, தமிழ்மொழிக்கு சமதகுதி, தமிழர்களுக்கான அதிகாரபகிர்வு இதற்காக நாம் போராடும் நிலைதான் தற்போது உள்ளது.

 

பேரறிஞர் அண்ணா திராவிட நாடு கோரிக்கையை முதலில் எழுப்பி பின்னர் அதை கைவிட்டு விட்டார். அதற்காக இந்த சபையிலேயே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் பாராட்டி பேசியுள்ளார். மக்கள் தலைவர்களாகிய நாம் மக்களை பாதிக்கக் கூடிய ஒரு பிரச்சனை உருவானால் அதற்கு மாற்று என சிந்தித்து எந்த வழியில் சென்றால் அது சரியாக இருக்கும் என தீர்மானித்து செயல்பட வேண்டும்.

 

அப்படித்தான் திராவிட நாடு கொள்கையை கைவிட்ட போதும் அதற்குரிய காரணம் அப்படியே இருக்கிறது என்று மத்திய அரசிடம் நாம் வலியுறுத்தியதன் விளைவாக இன்று மாநில அரசுகளை மதிக்கும் போக்கு மத்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.

 

மத்திய, மாநில அரசுகள் ஒருவரை யொருவர் குறித்து செயல்பட்ட காரணத்தால்தான் இங்கு தமிழ்மொழிக்கு எப்படி அந்தஸ்தை பெற்றிருக்கிறோம். இதே போல அங்கு இலங்கையில் தமிழர்களை மதிக்கின்ற ஒரு அரசு அமைய வேண்டும்.

 

எதிர்காலத்தில் தமிழர்கள் சிங்களர்களுடன் சேர்ந்து ஒரு தமிழர் அரசை அமைக்கும் நிலை உருவாகலாம். ஒரு காலத்தில் வெள்ளையர்கள் மட்டுமே அதிபராகலாம் என்று அமெரிக்காவில் இருந்த நிலை மாறி இப்போது கருப்பர் இனத்தை சேர்ந்த ஒபாமா அதிபராகி இருக்கிறார். இதே போல இலங்கையிலும் தமிழர்களின் அரசு அமைவதற்கு வெகு தூரம் இல்லை என்கிற நம்பிக்கையை நாம் பெற வேண்டும்.

 

ராஜபக்ஷேவை கூண்டில் ஏற்றி விசாரிக்க வேண்டும் என்று இங்கு பேசப்பட்ட கருத்தை முதலமைச்சர் கருணாநிதி கேட்கவில்லை. இன்னும் அவர் ராஜபக்ஷேவுக்கு மரியாதை தருவதை பார்த்தீர்களா? என்று பேசக் கூடும். அப்படி பேசுபவர்கள் அவர்க ளுடைய மனசாட்சியை எடுத்து வெளியில் வைத்து விட்டுத்தான் சொல்ல வேண்டும். தமிழர்களை காப்பாற்ற வேண்டும். அவர்களுடைய வாழ்வாதாரம் வளமிக்கதாக ஆக்க வேண்டும் என்பது முக்கியமா? அல்லது ராஜபக்ஷேவை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது முக்கியமா? என்பதை நாம் சிந்தித்து பேச வேண்டும். அங்குள்ள தமிழர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டும் என்றால் அது சிங்கள அரசின் மூலம்தான் முடியும். அதற்காக இந்தியாவை நாம் வற்புறுத்த செய்ய வேண்டும்.

 

நம்முடைய குரல் உயர்ந்த அளவிற்கு மத்திய அரசின் குரல் உயர்த்தப்படவில்லை என்ற கருத்தை இங்கு பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் பேசியதிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. 

 

எனவே சிங்களர்களுக்கு எதிராக பேசி அவர்களை கோபமடைய செய்யக் கூடாது. சிங்கள பௌத்த துறவிகள் கூட நம் மீது கோப அக்னியை வீசக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள்.

 

எனவேதான் இலங்கை தமிழர்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாத வகையில் நீக்குபோக்குவுடன் நம்முடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். இலங்கை பிரச்சனையை பொறுத்தவரை ஆதி முதல் அந்தம் வரை முழுமையாக தெரிந்தவன் நான். இதை "பண்டாரக வன்னியன்' என்ற நாவல் மூலம் நான் விரிவாக எழுதியிருக்கிறேன்.

 

இலங்கை தமிழர்களுக்கான நிவாரணப் பொருட்கள் அவர்களை சென்றடைவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஏற்கனவே செஞ்சிலுவை சங்கம் மூலம் தமிழக அரசோ, மத்திய அரசோ நிவாரண உதவிகளை அவர்களுக்கு வழங்கி இருக்கிறது.

 

தற்போது வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்களும் பாதிக்கப்பட்ட தமிழர்களை சென்றடைவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. நிச்சயம் தமிழர்களிடம் அந்த பொருட்களை கொண்டு சேர்க்கும்.

 

இலங்கை தமிழர்களுக்கு தற்போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தொண்டைமான் மற்றும் அவருடைய மகன் ஆகியோர் என்னை வந்து சந்தித்திருக்கிறார்கள்.

 

ஒரு குழு வந்து இலங்கையில் பார்வையிட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். மத்திய அரசின் அனுமதி பெற்று உரிய அதிகார அழைப்பின் பேரில்தான் அங்கு செல்ல முடியும் என்று நான் தெரிவித்திருக்கிறேன்.

 

தற்போது இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு உரிய வழிவகைகளை சிங்கள அரசு மூலம் நீங்கள் செய்யுங்கள். நாங்கள் துணை நிற்கிறோம். நிச்சயம் உரிய நல்ல பலன் கிடைக்கும் என்று அவர்களிடம் நானே பேசியிருக்கிறேன். இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அமைச்சர்கள் மூலமாகவும் தெரிவித்திருக்கிறேன். நானே தொலைபேசி மூலமாகவும் பேசியிருக்கிறேன். நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும். எப்போதும் இதே போல தமிழர்களாக ஒற்றுமையாக இருந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்போம். இவ்வாறு கருணாநிதி கூறினார்.

 

இதையடுத்து பேசிய ஜி.கே.மணி, பாமகவை பொறுத்தவரை தமிழீழம்தான் இறுதி தீர்வு என்பதில் உறுதியாக இருக்கிறோம். இடைக்கால தீர்வாக தமிழர்களுக்கு மாநில சுயாட்சி கிடைக்க வேண்டும் என்றுதான் கூறினேன் என கூறினார்.



 

 
Back to Top
சுவிஸ் செய்தி
News image

சுவிட்சர்லாந்தின் தேசிய நாள்

சுவிட்சர்லாந்து நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடு.

Sunday, 1 August 2010

விரிவு...
News image

இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது

சுவிட்சர்லாந்திலுள்ள இரத்தினக்கல் நிறுவனமொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இஸ்ரேலியர் ஒருவர் கைது ...

Thursday, 29 July 2010

விரிவு...
News image

ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ் காலிறுதிச் சுற்றிற்குத் தகுதி

சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் அலியன்ஸ் சியூ பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ்,காலிஞதிச் சுற்றிற்குத் தகுதி ...

Thursday, 29 July 2010

விரிவு...
News image

உலக புகழ்பெற்ற சுவிட்சர்லாந்து நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரரின் பயிற்றுவிப்பாளராக போல் அனாகோன்

போல் அனாகோன், ரொஜர் பெடரரின் தற்காலிக பயிற்றுவிப்பாளராக அனாகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, 29 July 2010

விரிவு...
-
+
1

உலகச் செய்தி
News image

பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி

பாகிஸ்தானின் குவேட்டா நகரில் இன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Friday, 3 September 2010

விரிவு...
News image

பிரிட்டன் அத்தியாவசிய சேவை ஊழியர் வேலை நிறுத்தம் : அரசு தடை

பிரித்தானியாவில் அத்தியாவசிய சேவை துறை ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதித்தது பிரித்தானியா அரசுபிரித்தானிய அரசு செலவீனங்களை கட்டுப்படுத்த தொடங்கியுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள பொதுத்துறை ஊழியர் அமைப்புக்கள் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடத்த முடிவு செய...

Friday, 3 September 2010

விரிவு...
News image

மலேசியாவில் கர்ப்பிணிகளாகும் மாணவிகளுக்கு சிறப்பு பள்ளி

பள்ளிகளில் பலவிதம் உண்டு. ஆனால் மலேசியாவில் திறக்கப்பட்டுள்ள இந்த பள்ளி புது விதம். பள்ளிப் பருவத்தில் திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாகும் பெண்களுக்காக மலேசியாவில் இந்தத் தனி பள்ளி ஒன்று திற...

Thursday, 2 September 2010

விரிவு...
News image

ஈராக்கில் அமெரிக்க வேலை முடிந்துவிட்டது: ஒபாமா அறிவிப்பு

ஈராக் போர் முடிந்து விட்டதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார். ஈராக் நாட்டின் பாதுகாப்பை அதன் மக்களிடமே ஒப்படைப்பதாகவும், ஈராக்கிற்காக அமெரிக்க ராணுவம் செய்த தியாகம் பாராட்டிற்குரியது என்றும் அவர் கூற...

Thursday, 2 September 2010

விரிவு...
-
+
1
இந்திய செய்திகள்
News image

இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்

இந்திய இராணுவத் தளபதி வி.கே.சிங் நாளை மறுதினம் இலங்கை வரவுள்ளார். ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டே அவர் இலங்கை வரவுள்ளார்.

Friday, 3 September 2010

விரிவு...
News image

சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்

கொழும்பில் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென்று தமிழ் எழுத்தாளர்களும், திரைப்பட இயக்குநர்களும் கோரிக்கை விட...

Friday, 3 September 2010

விரிவு...
News image

தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, கச்சத்தீவு கடல் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் விரட்டியடித்தனர்....

Thursday, 2 September 2010

விரிவு...
News image

இலங்கைக்கு வெடி பொருட்களை கடத்த முயற்சி

இலங்கைக்கு வெடி பொருட்களை கடத்த முற்பட்ட இருவர், தமிழ் நாட்டு தொண்டி கடற்பரப்பில் வைத்து வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Thursday, 2 September 2010

விரிவு...
-
+
1
பகிர்ந்துகொள்
Facebook MySpace Twitter Google Bookmarks RSS Feed 
விளையாட்டு செய்திகள்
News image

இலங்கை அணி சம்பியன்

தம்புள்ளையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

Sunday, 29 August 2010

விரிவு...
News image

சூராஜ் ரந்திவ், சேவாக்கிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்

இலங்கை அணியின் பந்துவீச்சாளர் சூராஜ் ரந்திவ் இந்திய அணியின் ஆரம்ப வீரர் வீரேந்திர சேவாக்குக்கு நோ பால் வீசியதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

Tuesday, 17 August 2010

விரிவு...
News image

முரளி இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் இலங்கைக் கிரிக்கெட்

உலகில் அதிகளவு விக்கெட்டுகளைப் பெற்று வரலாற்று நாயகனாக விளங்கும் முத்தையா முரளிதரன் இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் புதிய கிரிக்கெட் சகாப்தத்திற்குள் இலங்கை நேற்று வெள்ளிக்கிழமை ...

Saturday, 24 July 2010

விரிவு...
News image

முரளிதரன் உலக சாதனை-முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி

காலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தனது 800வது விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார் முத்தையா முரளிதரன். இப்போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை ...

Thursday, 22 July 2010

விரிவு...
-
+
1
முரசத்தின் தொடர்பு

+41 (0) 76 290 13 13

 info @ murasam.ch