ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மொஸ்கோவை சென்றடைந்தார். இவ்விஜயத்தின் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்படுவதற்காக ஒப்பந்தமொன்று தயார் செய்யப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் துணை நிதி அமைச்சர் பான்கின் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்கான ரஷ்யாவின் ஆயுதங்களை வாங்குவதற்காக ரஷ்யா 300மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கும் என ரஷ்ய அரசாங்கத்தின் ரியா நோவாஸ்தி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது 3 நாள் ரஷ்ய விஜயத்தின்போது ரஷ்யாவின் மக்கள் நட்புறவு பல்கலைகழகத்தின் பொன்விழா நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின்போது இலங்கை அரசாங்கத்துக்கு ரஷ்யா ஆதரவளித்தது. கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோவ், இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்குவதற்கு முன்வந்தமை குறிப்பிடத்தக்கது

.jpg)
















