தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உறுதியான தீர்வைக்காண்பதற்கான தீர்வுத்திட்ட வரைபைக்கொண்டே தமிழ் தேசிய கூட்டமைப்பு பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சியின் வீடு சின்னத்தில் களமிறங்கியுள்ளதாகவும் இதன் மூலம் சர்வதேச சமூகத்தின் உறுதியான ஆதரவைக்கோர வடகிழக்கு மக்களின் ஆணையை கோரி நிற்பதாகவும் தமிழரசுக்கட்சின் தலைவரும் அக்கட்சியின் திருமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை திருமலை கல்விமான்கள் குழுவினர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துரைரெட்னசிங்கம் தலைமையில் சம்பந்தனை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
"தமிழ்த் தேசியம் பற்றி உரத்துப் பேசுபவர்கள் எதிர்வரும் தேர்தலில் யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மட்டுமே போட்டியிடுகின்றார்கள். வன்னி, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்கள் அவர்களின் தமிழ்த் தேசியத்திற்குள் வரவில்லையா? தமிழ் மக்கள் இது குறித்து யதார்த்தமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டும்" என்று சம்பந்தன் தெரிவித்தார்.
இது தொடர்பில் சம்பந்தன் மேலும் கூறியதாவது;
இலங்கைத் தமிழரசுக் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரண்டு நோக்கங்களை முன்வைத்தே போட்டியிடுகின்றது. ஒன்று, தமிழ்மக்களிடமிருந்து உறுதியான ஆணையைப் பெற்று தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரமான, நிதானமான, நியாயமான உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் வரலாற்றுப் பாரம்பரியப் பிரதேசத்தில் சுயாட்சி ஒன்றை ஏற்படுத்துவது. இரண்டாவது துன்பங்களுக்குள்ளாகி நொந்துபோயிருக்கும் தமிழ்மக்களின் அத்தியாவசியத் தேவைகளை விரைந்து நிறைவேற்றுவது.
இவ்விரு நோக்கங்களையும் அரசியல் தீர்வொன்றின் மூலம் சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் அடைய வேண்டுமென்பதே எமது ஒரே நோக்கம். ஏப்ரல் 8 தேர்தலில் தமிழ்மக்களின் ஆணை எவ்வாறு அமையுமென்பதை சர்வதேச சமூகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என்பதை வடக்கு,கிழக்குத் தமிழ்மக்கள் அனைவரும் உணர்ந்து எமது வாக்குப்பலத்தைப் பயன்படுத்த வேண்டும்.
இறைமை சகல இனங்களுக்கும் உரியது. ஒரு இனத்திற்கு மட்டும் உரியதல்ல. இறைமையின் கீழ் ஆட்சியமைக்கும் அதிகாரம் அனைத்து இனங்களுக்கும் இருக்கவேண்டும். எமது பாரம்பரிய வடக்கு, கிழக்குத் தாயகத்தில் எமக்கு சுயாட்சி, அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென்று தான் கேட்கிறோம்.
எமது உரிமைகளைத் தாருங்கள் என்று தான் தமிழ்மக்கள் கேட்கிறார்கள். மற்றவரின் உரிமையை நாம் கேட்கவில்லை. சர்வதேச சமூகம் யுத்தமற்ற இச்சூழலில் தமிழ்மக்களுக்கு அவர்களின் தாயக பூமியில் சுயாட்சி, அதிகாரம் வழங்கும் தீர்வையே வலியுறுத்தி வருகின்றது. நியாயமான அரசியல் தீர்வொன்றைக் காணவே நாம் கடுமையாக உழைக்கின்றோம்.
காணமுடியாத பட்சத்தில் சர்வதேச சமூகத்தின் துணையை நாடுவோம். இலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேச சமூகம் தொடர்ந்தும் பார்வையாளராக இருக்கமுடியாது. ஐ.நா. சாசனத்தின்படி உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒருமித்த தாயகத்தில் சுயாட்சி உரிமை வழங்கப்பட்டாக வேண்டும். அது மறுக்கப்படின் வெளியக சுயநிர்ணய உரிமைக்கு நாம் தகுதி பெறுகின்றோம்.
தமிழ்மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது. எமது பிரச்சினைக்கு விரைவில் ஒரு முடிவு வரும். அது எமது கைகளில் தான் தங்கியுள்ளது. யுத்தத்தில் சம்பூர் பிரதேசத்தில் இடம்பெயர்வுக்கு ஆளாகி முகாம்களில் வசிக்கும் மக்கள் தங்களின் பாரம்பரியப் பூமியில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும்.
இந்தியாவின் உதவியுடன் சம்பூரில் அமைக்கப்படும் அனல்மின் நிலையம் அதற்குத் தடையாக இருக்கக்கூடாது என்று நான் கொழும்புக்கு வந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமாராவிடம் வற்புறுத்தினேன்.
இந்தியா அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. அனல்மின் நிலையம் சம்பூரில் மீள் குடியேற்றம் இடம்பெறுவதற்குத் தடையாக இருக்காது என்று நிருபமாராவ் உறுதியளித்துள்ளார் என்று சம்பந்தன் கூறினார்.
- யாப்பு சீர்திருத்தம் சபையில் சமர்பிக்கப்பட்டது
- 18வது திருத்த சட்டத்துக்கு எதிராக வாக்களிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானம் (2ஆம் இணைப்பு)
- திருமலையில் தமிழ் மாணவன் கடத்தல் -மீண்டும் தொடரும் கடத்தல் சம்பவம்
- இலங்கையில் தமிழ் எழுத்தாளர் மாநாடு வேண்டாம் பேராசிரியர் க.சிவத்தம்பி
- "தமிழர்களின் தேவைகளை கவனிக்க"இலங்கைக்கு விசேட தூதுவரை இந்தியா நியமிக்கும் சாத்தியம்
![]() சுவிஸில் இலங்கையைச் சேர்ந்த 24 குடும்பங்களுக்கு பிரஜாவுரிமைசுவிஸில் இவ்வருடம் இலங்கைக் குடும்பங்களுக்கு 24 இற்கு பிரஜாவுரிமை கிடைத்துள்ளது. இப்பிரஜாவுரிமைக்கு 435 வெளிநாட்டுக் குடும்பங்கள் விண... Saturday, 4 September 2010 விரிவு... |
![]() சுவிட்சர்லாந்தின் தேசிய நாள்சுவிட்சர்லாந்து நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடு. Sunday, 1 August 2010 விரிவு... |
![]() இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைதுசுவிட்சர்லாந்திலுள்ள இரத்தினக்கல் நிறுவனமொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இஸ்ரேலியர் ஒருவர் கைது ... Thursday, 29 July 2010 விரிவு... |
![]() ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ் காலிறுதிச் சுற்றிற்குத் தகுதிசுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் அலியன்ஸ் சியூ பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ்,காலிஞதிச் சுற்றிற்குத் தகுதி ... Thursday, 29 July 2010 விரிவு... |
- + 1 |
![]() கொங்கோ நாட்டில் படகில் தீப்பிடித்தது; 200 பேர் கருகி பலிமத்திய ஆப்பிரிக்க கண்டத்தில் கொங்கோ நாடு உள்ளது. இங்கு ஆறுகளும், காடுகளும் அதிக அளவில் உள்ளன. எனவே, இந்த நாட்டில் அதிக அளவு படகு போக்குவரத்து நடைபெற்று ... Tuesday, 7 September 2010 விரிவு... |
![]() பாக். பொலிஸ் நிலையம் மீது குண்டுத்தாக்குதல் ; 20 பேர் பலிபாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். Monday, 6 September 2010 விரிவு... |
![]() டோனி பிளேயர் மீது சப்பாத்து,முட்டை வீச்சுபிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. Saturday, 4 September 2010 விரிவு... |
![]() நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலிநியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர். Saturday, 4 September 2010 விரிவு... |
- + 1 |
![]() கவிஞர் வைரமுத்து மகன் கபிலன் வைரமுத்து திருமண விழாகவிஞர் வைரமுத்து-பொன்மணி வைரமுத்து தம்பதியரின் இளைய மகனான கபிலன் மற்றும் திருச்சி மாவட்ட நீதிபதி எம்.மாயாண்டி, பேராசிரியை அமுதா ஆகியோரின் மகள் டாக்டர் ரம்யா ஆகியோருக்கு, சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று திருமணம் ... Monday, 6 September 2010 விரிவு... |
மணவைத்தம்பியின் மூன்றாம் ஆண்டு நினைவுதினம் சென்னையில் இடம்பெற்றதுமறைந்த தமிழ் தலைவர் ஏ.எஸ்.மணவைத்தம்பியின் மூன்றாம் ஆண்டு நினைவுதினம் அண்மையில் தமிழ் நாட்டில் இடம்பெற்றது. Saturday, 4 September 2010 விரிவு... |
![]() இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்இந்திய இராணுவத் தளபதி வி.கே.சிங் நாளை மறுதினம் இலங்கை வரவுள்ளார். ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டே அவர் இலங்கை வரவுள்ளார். Friday, 3 September 2010 விரிவு... |
![]() சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்கொழும்பில் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென்று தமிழ் எழுத்தாளர்களும், திரைப்பட இயக்குநர்களும் கோரிக்கை விட... Friday, 3 September 2010 விரிவு... |
- + 1 |
![]() இலங்கை அணி சம்பியன்தம்புள்ளையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. Sunday, 29 August 2010 விரிவு... |
![]() சூராஜ் ரந்திவ், சேவாக்கிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்இலங்கை அணியின் பந்துவீச்சாளர் சூராஜ் ரந்திவ் இந்திய அணியின் ஆரம்ப வீரர் வீரேந்திர சேவாக்குக்கு நோ பால் வீசியதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார். Tuesday, 17 August 2010 விரிவு... |
![]() முரளி இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் இலங்கைக் கிரிக்கெட்உலகில் அதிகளவு விக்கெட்டுகளைப் பெற்று வரலாற்று நாயகனாக விளங்கும் முத்தையா முரளிதரன் இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் புதிய கிரிக்கெட் சகாப்தத்திற்குள் இலங்கை நேற்று வெள்ளிக்கிழமை ... Saturday, 24 July 2010 விரிவு... |
![]() முரளிதரன் உலக சாதனை-முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்விகாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தனது 800வது விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார் முத்தையா முரளிதரன். இப்போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை ... Thursday, 22 July 2010 விரிவு... |
- + 1 |





.jpg)







.jpg)



