திங்கள், 15 மார்ச் 2010 06:13 | [ வா.கி.குமார் ] |
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம் நடத்திய பல்லாயிரக்கணக்கானவர்கள், திங்கட்கிழமை மதியவேளைக்கு முன்பாக அரசாங்கம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
திங்கள், 15 மார்ச் 2010 06:07 | [ வா.கி.குமார் ] |
பாகிஸ்தானின் வடமேற்குப் பிராந்தியத்தில் ஆப்கானுடனான எல்லையை ஒட்டிய பகுதிகளில் தாலிபான்களின் பதுங்கிடமாக சந்தேகிக்கப்படும் இடங்களில் அரச படையினர் நடத்திய வான் தாக்குதலில் குறைந்தபட்சம் ஒன்பது கிளர்ச்சிக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்தோனேசியாவின் கிழக்கு தீவுப் பகுதிகளில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7 என பதிவாகியிருந்தாக இந்தோனேசிய புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க முதலீட்டு வங்கியான லீமன் பிரதர்ஸ் நிறுவனத்தின் வீழ்ச்சி குறித்து வெளியாகியுள்ள ஓர் ஆய்வறிக்கை, அந்நிறுவனம் தனது நிஜமான நிதி நிலைமையை மறைத்து வந்திருந்தது என்று கண்டறிந்துள்ளது.
லாகூரில் நேற்று அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 57 பேர் பலியான நிலையில், இன்று காலை ஸ்வாத் மாவட்டத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.