SmallMediumLarge NarrowWideFluid
அவுஸ்திரேலிய அணியிலிருந்து ஹைடன் நீக்கம் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவடைகிறதா? அச்சிடு E-mail
[ வா.கி.குமார் ]   
வெள்ளி, 09 சனவரி 2009 19:47

altஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய அணியிலிருந்து மத்யூ ஹைடன் நீக்கப்பட்டுள்ளார்.

 


இருபதுக்கு 20 உலகக் கிண்ணம், 2011 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்களை கருத்தில் கொண்டு அணியை தேர்வு செய்ததாகக் கிரிக்கெட் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.


நடந்து முடிந்த கோடைகால டெஸ்ட் போட்டிகளில் ஹைடன் 16.55 என்ற சராசரியுடன் 149 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஒருநாள் அணியிலிருந்து ஹைடனை நீக்கும் திட்டம் டெஸ்ட் போட்டிகளில் சமீப காலங்களாக அவர் சரியாக விளையாடததால் அல்ல, மாறாக அவுஸ்திரேலிய அணியின் ஒருநாள், இருபதுக்கு 20 அணித்தேர்வுத் திட்டத்தில் ஹைடன் இல்லை என்பதாலேயே என்று அணித் தேர்வுக் குழுத் தலைவர் அன்ட்ரூ ஹில்டிச் தெரிவித்துள்ளார்.

 

""அணியிலிருந்து நீக்கியது பற்றி அவரிடம் தெரிவித்த போது அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் என்ன முடிவெடுப்பது என்று தெரியவில்லை. குவின்ஸ்லாந்து அணிக்கு மீண்டும் திரும்பி ஓட்டங்களை அடித்து அடுத்த மாதம் தென்னாபிரிக்க தொடருக்கு தன்னைத் தேர்வு செய்ய நிர்ப்பந்திப்பாரா என்று தெரியவில்லை' என்றார்.

 

ஹில்டிச் கூறுவதைப் பார்க்கும்போது ஹைடனின் சர்வதேச கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வந்துவிட்டதுபோல் தான் தெரிகிறது.


ஆனால், ஹைடனுக்கு கப்டன் ரிக்கி பொண்டிங்கின் ஆதரவு இருக்கிறது. அதாவது ஆஷஸ் தொடர் வரை அவரை அனுமதிக்கலாம் என்று பொண்டிங் நினைப்பதாக தெரிகிறது.


அவுஸ்திரேலியா இருபதுக்கு 20 அணி; பொண்டிங், மைக் ஹஸி, டேவிட் ஹஸி, பென் ஹைபெந்காஸ், ஜேம்ஸ் ஹொப்ஸ், நேதன் பிரேக்கன், பிராட் ஹேடின், ஷான் மார்ஷ், ஷான் டெய்ட், டேவிட் வார்னர், ரியான் ஹேரிஸ், கேமரூன் ஒயிட், நேதன் ஹாரிட்ஸ்.

ஒருநாள் போட்டி அணி; பொண்டிங், மைக்கல் கிளார்க், பிராட் ஹேடின், ஜேம்ஸ் ஹோப்ஸ், நேதன் பிரேக்கன், ஷான் மார்ஷ், மைக் ஹஸி, டேவிட் ஹஸி, நேதன் ஹாரிட்ஸ், பென் ஹைபெந்காஸ், கேமரூன் ஒயிட், ஷான் டெய்ட், பீற்றர் சிடில்.

 
 


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.