டுவென்டி20 உலகக் கோப்பைக்கு முன் தான் விளையாடிய ஆட்டங்களில் தனி முத்திரை பதித்த இந்திய அணி, கிரிக்கெட்டில் எல்லா வகையான (டெஸ்ட், 50 ஓவர், 20 ஓவர் போட்டிகள்) ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவுக்கு சவால் விடுக்கும் அளவுக்கு முன்னேறியது.


ஆனால், டுவென்டி20 உலகக் கோப்பை போட்டியில் அயர்லாந்துக்கு சமமாக சூப்பர் 8 பிரிவில் தான் விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவி மிகச் சாதாரண அணியாக இந்தியா உருமாறி விட்டது போலாகிவிட்டது.


ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அதிரடி மன்னன் வீரேந்திர சேவாக், வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர் கான் ஆகியோர் அணியில் இடம்பெறாதது மேலும் ஒரு பின்னடைவை இந்திய அணிக்கு ஏற்படுத்தியுள்ளது. ஆனால், டுவென்டி20 உலகக் கோப்பை போட்டி தோல்வியிலிருந்து மீண்டு வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவிக்கிறார் இந்திய அணியின் கேப்டன் தோனி.


இந்திய அணியில் கெüதம் கம்பீர், யுவராஜ் சிங், ரோஹித் சர்மா போன்ற அதிரடி வீரர்களும், யூசுப் பதான், ரவீந்திர ஜடேஜா போன்ற ஆல்ரவுண்டர்களும், இஷாந்த் சர்மா போன்ற வேகப் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணியை வெல்வது என்பது கடினமானதுதான்.


இந்தத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகளை வென்றால் ஐசிசியின் ஒரு தினத் தொடர் தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ள இந்தியாவுக்கு வாய்ப்புள்ளது. இது இந்தியாவுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற ஊக்கத்தைத் தரக் கூடியதாகும்.

 

அதேசமயம், டுவென்டி20 உலகக் கோப்பைக்கு முன்னர் இங்கிலாந்து தொடரில் தோல்வியுற்றாலும், மேற்கிந்தியத் தீவுகள் அணி தன்னம்பிக்கை இழக்கவில்லை. டுவென்டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்ததுடன் அரை இறுதி வரை முன்னேறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் கிறிஸ் கெயில் எந்த அணியின் பந்துவீச்சையும் துவம்சம் செய்யக் கூடியவர். டுவைன் பிராவோ, ராம் நரேஷ் சார்வான் சந்தர்பால் போன்ற வீரர்கள் இருந்தாலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது அந்த அணியின் முக்கிய குறையாகும்.


இருப்பினும், உள்ளூரில் விளையாடுவது அந்த அணிக்கு சாதகமான அம்சம். டுவென்டி20 உலகக் கோப்பை தோல்வியை மறக்க வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா உள்ளதாலும், தாயக ரசிகர்கள் மத்தியில் சிறப்பாக விளையாடும் ஆர்வத்தில் மேற்கிந்தியத் தீவுகள் உள்ளதாலும் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


அணிகள் விவரம்:


இந்தியா: தோனி (கேப்டன்), கெüதம் கம்பீர், யுவராஜ் சிங், ரோஹித் சர்மா, ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா, யூசுப் பதான், முரளி விஜய், எஸ்.பத்ரிநாத்,ஆர்.பி.சிங், பிரவீன்குமார், இஷாந்த் சர்மா, அபிஷேக் நாயர், ஆஷிஷ் நெஹ்ரா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக்.


மேற்கிந்தியத் தீவுகள்: கெயில் (கேப்டன்), தினேஷ் ராம்தின், லியோனல் பேகர், டேரன் பிராவோ, டுவைன் பிராவோ சுலைமான் பென், டேவிட் பெர்னார்ட் ஜூனியர், சிவநாராயண் சந்தர்பால், நரசிங் தேவநாராயண், ருனாகோ மோர்டன், ரவி ராம்பால், ராம்நரேஷ் சார்வான், ஜெரோம் டெய்லர்.

 
  1. ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
  2. பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
  3. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  4. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  5. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  6. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  7. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  8. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  9. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  10. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு

கட்டுரைகள்