பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட், ஐந்து ஒரு நாள் மற்றும் ஒரு டுவென்டி 20 போட்டியில் விளையாட பாகிஸ்தான் வந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 4ம் தேதி காலே நகரில் நடக்கிறது.


கடந்த மார்ச் 3ம் தேதி பாகிஸ்தானின் லாகூரில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்ற இலங்கை வீரர்கள் மீது தீவிரவாதிகள் கடுமையான தாக்குதல் நடத்தினர். இதில் இலங்கை வீரர்கள் 7 பேர் படுகாயமைடந்தனர்.


இந்த துயர சம்பவத்துக்கு பின்னர் இரு அணிகளும் மீண்டும் மோதும் டெஸ்ட் தொடர் இது தான். இதனால் இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் வீரர்களுக்கு நாட்டுக்கும் வரும் வெளிநாட்டு அதிபர், பிரதமர் போன்ற தலைவர்களுக்கு கொடுக்கப்படும் விவிஐபி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


இது குறித்து இலங்கை கிரிக்கெட் போர்டு மீடியா பிரிவு தலைவர் சரித் சேனநாயகே கூறுகையில்,


வீரர்களுக்கு சிறப்பான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக அவர்களது பேருந்துகள் செல்லும் வழியில் பாதுகாப்பு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.


அவர்களுக்கு வி.வி.ஐ.பி பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் மைதானம் மற்றும் வெளியிலும் அவர்களை சுற்றி 100க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு இருப்பார்கள் என்றார்.

 
  1. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  2. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  3. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  4. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  5. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  6. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  7. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  8. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
  9. இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
  10. தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

கட்டுரைகள்