.jpg)
கொழும்பில் பயிற்சி பெற்றதாக லக்ஷர் ஈ தொய்பா அங்கத்தவர் தெரிவிப்பு
இந்தியாவின் புனே நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் கொழும்பிலுள்ள சுற்றுலாப் பகுதியொன்று லக்ஷர் ஈ தொய்பா அமைப்பிற்கான பயிற்சித் தளமாக விளங்குவதாக விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளதாக ஏசியன் ஏஜ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எம்.எஸ்.ரமேஷ் 09 செப் 2010

18 ஆவது திருத்தம் நிறைவேற்றம்:2/3 பெரும்பான்மையை பெற்றது
8 ஆவது அரசியல்யாப்பு சட்டமூலம் தொடர்பில் அரசு 161 ஆதரவான வாக்குகளை பெற்று பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை பெற்றுகொண்டுள்ளது.
எம்.எஸ்.ரமேஷ் 08 செப் 2010
குவாலியரில் தொடங்கிய 2வது ஒரு நாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை படைத்தார். 200 ரன்களைக் குவித்ததன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
முதலில், சயீத் அன்வர் மற்றும் கோவன்ட்ரி ஆகியோர் இதுவரை வைத்திருந்த ஒரு நாள் போட்டியில் அதிகபட்ச ரன்னான 194 என்ற இலக்கைத் தாண்டி புதிய சாதனை படைத்தார் சச்சின்.
அதைத் தொடர்ந்து அடுத்த சில பந்துகளில் இரட்டை சதத்தையும் தொட்டு புதிய உலக சாதனையைப் படைத்தார் சச்சின்.
147 பந்துகளில் 200 ரன்களைத் தொட்டார் சச்சின். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது சச்சினுக்கு 442வது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
சயீத் அன்வர் கடந்த 1997ம் ஆண்டு சென்னையில் இந்தியாவுக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் 194 ரன்களைக் குவித்து உலக சாதனை படைத்தார். இந்த சாதனையை கடந்த ஆண்டு ஜிம்பாப்வே வீரர் கோவன்ட்ரி சமன் செய்தார்.
இந்த சாதனையைத்தான் இன்று சச்சின் உடைத்தார். அத்தோடு நில்லாமல் புதிய உலக சாதனையையும் படைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளார்.
முன்னதாக, இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது ஒரு நாள் போட்டி இன்று குவாலியரில் தொடங்கியது.
டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக்கும், சச்சினும் இறங்கினர். ஷேவாக், இன்று விரைவிலேயே அவுட் ஆகி விட்டார். 11 பந்துகளைச் சந்தித்து 9 ரன்களுடன் அவர் நடையைக் கட்டினார்.
இருப்பினும் சச்சினும், திணேஷ் கார்த்திக்கும் இணைந்து பின்னி எடுத்து விட்டனர். சச்சினைப் போலவே திணேஷ் கார்த்திக்கும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தான் நல்ல பார்முக்கு வந்து விட்டதை உணர்த்தும் இன்னொரு ஆட்டத்தைக் கொடுத்தார் அவர்.
சிறப்பாக ஆடிய திணேஷ், 85 பந்துகளில் 79 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். முதல் ஒரு நாள் போட்டியிலும் திணேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந்திய அணியில் கேப்டன் டோணி 35 பந்துகளில் 68 ரன்களைக் குவித்தார். யூசுப் பதான் 23 பந்துகளில் 36 ரன்களைக் குவித்தார்.
50 ஓவர்கள் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 401 ரன்களை எடுத்தது.
இந்தியா ஒரு நாள் போட்டி ஒன்றில் 400 ரன்களைக் கடப்பது இது நான்காவது முறையாகும்.
- ஊடகங்களுக்கு மேர்வின் சில்வா எச்சரிக்கை
- துன்பத் தீயில் துவள்கின்றேன் : சிறையில் வாடும் சண்முகத்தின் கண்ணீர் மடல்
- கிழக்கில் யுத்தம் முடிந்து இதுவரை 95 பேர் காணாமல் போயுள்ளனர் : ததேகூ
- வல்லுறவுச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது கடமையைச் செய்வதற்கு ஐ. நா.தவறியுள்ளது
- இந்தியாவில் பஸ் விபத்து:22 பேர் பலி
- லக்ஷர் ஈ தொய்பா முகாம் குறித்து இந்தியாவிடம் தகவல் கோரியுள்ளது இலங்கை
- சன் ஸீ கப்பலில் சென்றவர் புலிகள் இயக்க அங்கத்தவர் என்ற சந்தேகத்தில் தடுத்து வைப்பு
- த.தே.கூ தடை செய்யப்பட வேண்டும் பியசேன
- தீக்காயத்துக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதி
- அலெக்ஸ் மீண்டும் கனடா செல்ல விருப்பம்





.jpg)











