கோல் காப்பாளரான ஐகர் ஹசிலாஸை அணித்தலைவராகக் கொண்டுள்ள தற்போதைய ஸ்பெயின் அணி, எதிரணிகளுக்கு மிகுந்த அச்சுறுத்தலை வழங்கி, போட்டிகளில் வெற்றிபெறக் கூடிய அணியாக் கருதப்படுகின்றது. ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னரான முன்னோடிப் போட்டிகளில் ஸ்பெயின் சிறப்பாகச் செயற்பட்டுள்ளது.
சிவப்பு ரோஜாக்கள் என்று அறியப்படுகின்ற ஸ்பெயின் கால்பந்தாட்ட அணி, 1920 ஆம் ஆண்டு தனது முதலாவது சர்வதேசப் போட்டியை டென்மார்க்குக்கு எதிராக விளையாடியது. அதில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 1933ஆம் ஆண்டு பல்கேரிய அணிக்கு எதிராக 13-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றமையே ஸ்பெயினின் மிகப்பெரிய வெற்றியாகக் கொள்ளப்படுகின்றது.
ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் 1964ஆம் ஆண்டு முதலாவது இடத்தினையும், 1984 ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தினையும் ஸ்பெயின் பிடித்துள்ளது. பீபா உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளில் 12 தடவைகள் பங்குபற்றியுள்ளது. இதில் 1950 ஆம் ஆண்டு 4ஆம் இடத்தை பிடித்தமையே அவர்களின் மிகப்பெரிய உலகக் கிண்ண வெற்றியாகும்.
எதிரணிகளின் முன்களப் பகுதிகளில் தாக்குதல் ஆட்டம் ஆடக்கூடிய முன்கள வீரர்களான, பெர்ணான்டோ வில்லா, சேர்ஜியோ ஹார்சியா, டானியல் ஹ_ய்சா, டேவிட் சில்வா ஆகியோரைக் ஸ்பெயின் கொண்டுள்ளது, இது அந்த அணிக்கு பலத்த சாதகத் தன்மையை வழங்கும். இதுபோல் அணித்தலைவர் ஐகர் ஹசிலாஸ் சர்வதேச அளவில் முன்னணியிலுள்ள கோல் காப்பாளர்களில் ஒருவர்.
இதனைவிட, மத்தியகள ஆட்டக்காரர்களான அண்ட்ரஸ் அனிஸ்ரா, ஷாவி ஹேர்னாண்டஸ், ஷேக் பெப்ரேகாஸ் ஆகியோர் முன்கள வீரர்களானவும், ஷாபி ஆலொன்சோ பின்கள வீரராகவும் சிறப்பாகச் செயற்படக் கூடியவர்கள். ஸ்பெயின் அணியின் பின்கள வீரர்கள் பெர்ணான்டோ நவர்ரோ, கார்லஸ் மார்ச்ஷீனா ஆகியோர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள். அணி விபரம்:
கோல் காப்பாளர்கள்: ஐகர் ஹசிலாஸ்(அணித்தலைவர்), அண்ரஸ் பலோப், பேபே றீனா.
பின்கள வீரர்கள்: ராவுல் அல்பியோல், பெர்ணான்டோ நவர்ரோ, கார்லஸ் மார்ச்ஷீனா, கார்ல்ஸ் பியோல், யோஹான் கப்டவில்லா, சேர்ஜியோ ரோமேஸ், அல்வாரோ ஆர்பேலோ, ஜூனிரோ.
மத்தியகள வீரர்கள்: அண்ட்ரஸ் அனிஸ்ரா, ஷாவி ஹேர்னாண்டஸ், ஷேக் பெப்ரேகாஸ், ஷாபி ஆலொன்சோ, மார்கொஸ் சென்னா, றுபேன் டி லா ரெட்.
முன்கள வீரர்கள்: டேவிட் வில்லா, பெர்ணான்டோ வில்லா, சேர்ஜியோ ஹார்சியா, டானியல் ஹ_ய்சா, டேவிட் சில்வா.
பயிற்சியாளர்: லூயிஸ் அரகோனஸ்
ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டித் தொடரில் பலம்பொருந்திய கிரீஸ், சுவீடன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் ‘டி’ குழுவில் ஸ்பெயின் இம்முறை அங்கம் வகிப்பதால் அது பாரிய சிரமங்களுக்கு மத்தியிலேயே வெற்றிகளைப் பெறவேண்டியிருக்கும். ஸ்பெயின் இம்முறை ஆகக்கூடியது அரையிறுதி வரை முன்னேறலாம்.
நாளைய ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளுக்கான சிறப்பு பார்வையில் நடப்பு வெற்றியாளர்கள் கிரீஸைப் பற்றி பார்க்கலாம்….விளையாடு… விளையாடு…….
சிவப்பு ரோஜாக்கள் என்று அறியப்படுகின்ற ஸ்பெயின் கால்பந்தாட்ட அணி, 1920 ஆம் ஆண்டு தனது முதலாவது சர்வதேசப் போட்டியை டென்மார்க்குக்கு எதிராக விளையாடியது. அதில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 1933ஆம் ஆண்டு பல்கேரிய அணிக்கு எதிராக 13-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றமையே ஸ்பெயினின் மிகப்பெரிய வெற்றியாகக் கொள்ளப்படுகின்றது.
ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் 1964ஆம் ஆண்டு முதலாவது இடத்தினையும், 1984 ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தினையும் ஸ்பெயின் பிடித்துள்ளது. பீபா உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளில் 12 தடவைகள் பங்குபற்றியுள்ளது. இதில் 1950 ஆம் ஆண்டு 4ஆம் இடத்தை பிடித்தமையே அவர்களின் மிகப்பெரிய உலகக் கிண்ண வெற்றியாகும்.
எதிரணிகளின் முன்களப் பகுதிகளில் தாக்குதல் ஆட்டம் ஆடக்கூடிய முன்கள வீரர்களான, பெர்ணான்டோ வில்லா, சேர்ஜியோ ஹார்சியா, டானியல் ஹ_ய்சா, டேவிட் சில்வா ஆகியோரைக் ஸ்பெயின் கொண்டுள்ளது, இது அந்த அணிக்கு பலத்த சாதகத் தன்மையை வழங்கும். இதுபோல் அணித்தலைவர் ஐகர் ஹசிலாஸ் சர்வதேச அளவில் முன்னணியிலுள்ள கோல் காப்பாளர்களில் ஒருவர்.இதனைவிட, மத்தியகள ஆட்டக்காரர்களான அண்ட்ரஸ் அனிஸ்ரா, ஷாவி ஹேர்னாண்டஸ், ஷேக் பெப்ரேகாஸ் ஆகியோர் முன்கள வீரர்களானவும், ஷாபி ஆலொன்சோ பின்கள வீரராகவும் சிறப்பாகச் செயற்படக் கூடியவர்கள். ஸ்பெயின் அணியின் பின்கள வீரர்கள் பெர்ணான்டோ நவர்ரோ, கார்லஸ் மார்ச்ஷீனா ஆகியோர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள். அணி விபரம்:
கோல் காப்பாளர்கள்: ஐகர் ஹசிலாஸ்(அணித்தலைவர்), அண்ரஸ் பலோப், பேபே றீனா.
பின்கள வீரர்கள்: ராவுல் அல்பியோல், பெர்ணான்டோ நவர்ரோ, கார்லஸ் மார்ச்ஷீனா, கார்ல்ஸ் பியோல், யோஹான் கப்டவில்லா, சேர்ஜியோ ரோமேஸ், அல்வாரோ ஆர்பேலோ, ஜூனிரோ.
மத்தியகள வீரர்கள்: அண்ட்ரஸ் அனிஸ்ரா, ஷாவி ஹேர்னாண்டஸ், ஷேக் பெப்ரேகாஸ், ஷாபி ஆலொன்சோ, மார்கொஸ் சென்னா, றுபேன் டி லா ரெட்.
முன்கள வீரர்கள்: டேவிட் வில்லா, பெர்ணான்டோ வில்லா, சேர்ஜியோ ஹார்சியா, டானியல் ஹ_ய்சா, டேவிட் சில்வா.
பயிற்சியாளர்: லூயிஸ் அரகோனஸ்
ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டித் தொடரில் பலம்பொருந்திய கிரீஸ், சுவீடன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் ‘டி’ குழுவில் ஸ்பெயின் இம்முறை அங்கம் வகிப்பதால் அது பாரிய சிரமங்களுக்கு மத்தியிலேயே வெற்றிகளைப் பெறவேண்டியிருக்கும். ஸ்பெயின் இம்முறை ஆகக்கூடியது அரையிறுதி வரை முன்னேறலாம்.
நாளைய ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளுக்கான சிறப்பு பார்வையில் நடப்பு வெற்றியாளர்கள் கிரீஸைப் பற்றி பார்க்கலாம்….விளையாடு… விளையாடு…….
மேலதிக செய்திகள்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
- நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
- இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
- தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
- பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
- இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
- தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

.jpg)