மிகவும் எதிர்பார்ப்புடன் உற்று நோக்கப்பட்ட “சீ” குழுவின் ஆட்டங்கள் 09.06.2008 அன்று முதலாவது போட்டி சூரிச் “லெற்சி குறூன்ட்” (Letzigrund) மைதானத்திலும் இரண்டாவது போட்டி பேர்ன் „Stade de Suisse“ மைதானத்திலும் நடைபெற்றன. முதலாவது போட்டியில் ஆடிய பிரான்ஸ் ரூமேனிய அணிகள் கோல் ஏதும் போடாது ஆட்டத்தை சமநிலையில் முடித்துக்கொண்டன.
அடுத்து 20.45 மணிக்கு பேர்ன் நகரில் நடைபெற்ற முக்கிய போட்டியில் உலகசம்பியன் இத்தாலிக்கு அதிர்ச்சியான அதிரடி வைத்தியம் செய்தது நெதர்லாந்து. மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பித்த இப்போட்டியில் நெதர்லாந்து அணியின் முன்நிலை வீரர்கள் இத்தாலிய பின்நிலை வீர்ர்களின் யூகங்களை உடைத்து கோல் போட முயற்சித்தனர். இந்த முயற்சியின் பலனாக 26 வது நிமிடத்தில் Van Nistelrooy உம் 31 வது நிமிடத்தில் Seijder உம் அடுத்தடுத்து இரு கோல்களை போட இத்தாலிய அணி கதிகலங்கியது. ஆனாலும் இடைவேளை முடிந்த பின்னர் ஆரம்பமான ஆட்ட தொடக்கத்திலிருந்து எப்படியாவது கோல் போட வேண்டுமென்று கங்கணம் கட்டி விறுவிறுப்பாக ஆடியது இத்தாலி. அந்த முயற்சி எல்லாம் தவிடு பொடியாக்கி தற்காப்பு ஆட்டத்தின் மூலம் காத்துக் கொண்டனர் நெதர்லாந்தின் பின்நிலைத் தடுப்பு வீரர்கள்.
இத்தாலியில் கடும் முயற்சிகளுக்கு மத்தியிலும் 79 வது நிமிடத்தில் Van Bronchhorst தனது அணிக்காக மூன்றாவது கோலைப்போட ஆட்டம் முற்று முழுதாக நெதர்லாந்து வசமானது. நெதர்லாந்தின் 3 : 0 என்ற பெரு வெற்றியை தொடர்ந்து அடுத்துவரும் இரு போட்டிகளையும் அபாரமாக ஆடவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித்தவிக்கிறது இத்தாலி.மேலதிக செய்திகள்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
- நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
- இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
- தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
- பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
- இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
- தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?



.jpg)


