ஓஸ்திரியாவின் இன்ஸ்பேர்க் நகரில் நேற்று மாலை 6 மணிக்கு ஆரம்பமான முதலாவது போட்டியில் பலம்பொருந்திய ஸ்பெயின் அணியும், ரஷ்யா அணியும் மோதின. இதில் போட்டி ஆரம்பித்த 20வது நிமிடத்தில் வில்லா பெற்ற முதல் கோலின் மூலம் தனது கணக்கை ஆரம்பித்த ஸ்பெயின், வில்லாவின் 44, 75 மற்றும் பேப்ரெகாசின் 91 நிமிடக் கோலின் மூலம் 4 கோல்களைப் பெற்றது.
ரஷ்யா அணி பலத்த போராட்டங்களை மேற்கொண்டாலும் இந்த அணியின் பல்லியு சென்கோ 86வது நிமிடத்தில் பெற்ற கோலை மாத்திரமே பெற முடிந்தது. இதன் மூலம் ஸ்பெயின் அணி, ரஷ்யாவை 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஸ்பெயின் அணியின் வில்லா ஹட்றிக் கோல்களைப் பெற்றார். இதுவே இந்த ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் முதலாவது ஹட்றிக் ஆகும்.
சேல்பேர்க் நகரில் நேற்றிரவு 8.15க்கு ஆரம்பமான இரண்டாவது போட்டியில் எதிர்பார்ப்புக்களை மீறி சுவீடன் அணி, நடப்பு வெற்றியாளர்கள் கிரீசுக்கு அதிர்ச்சியளித்தது. இந்தப் போட்டியில் சுவீடன் அணியின் இப்ராஹிம் மூவிக் மற்றும் ஹான்சன் ஆகியோர் பெற்ற கோல்களின் உதவியுடன் 2-0 என்ற கணக்கில் வெற்றி கண்டது. இதன் மூலம் சுவீடன் அணி மூன்று புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது.
ஐரோப்பியக் கிண்ண நடப்பு வெற்றியாளர்களும், கிண்ணத்தை வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதுமான கிரீஸ் கால்பந்தாட்ட அணிக்கு நேற்றைய தோல்வி பலத்த ஏமாற்றத்தை அளிக்கும் என்று நோக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இன்றைய போட்டிகள்: குழு ‘ஏ’யில் அங்கம் வகிக்கின்ற செக் குடியரவு, போர்த்துக்கல், சுவிற்சர்லாந்து, துருக்கி ஆகிய அணிகளுக்கிடையினான போட்டிகள் சுவிற்சர்லாந்தில் இன்று இடம்பெறவுள்ளன.
ஜெனீவாவில் இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும் முதலாவது போட்டியில் செக் குடியரசும், போர்த்துக்கல்லும் ஒன்றையொன்று எதிர்த்து ஆடுகின்றன. இரண்டு அணிகளும் ஏற்கனவே தாம் விளையாடிய போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளன. இந்தப் போட்டியில் போர்த்துக்கல் அணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.
பேசல் நகரில் இரவு 8.15 மணிக்கு ஆரம்பிக்கும் இரண்டாவது போட்டியில் சுவிற்சர்லாந்தும், துருக்கியும் போதுகின்றன. இந்த இரண்டு அணிகளும் ஏற்கனவே விளையாடிய போட்டியில் தோல்வியடைந்துள்ளன. எனவே இந்த போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கும். இந்தப் போட்டியில் துருக்கி அணிக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகம்.
மேலதிக செய்திகள்
- இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
- கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
- பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
- போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
- ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
- பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி



.jpg)


