உலகத் தரநிலையில் 8வது இடத்தினை வகிக்கின்ற கிரீஸ் கால்பந்தாட்ட அணி, ரசிகர்களினால் கருநீல கப்பல்கள் என்று செல்லமாக அழைக்கப்படுகின்றது. கிரீஸ் அணி ஐரோப்பியக் கிண்ண போட்டித் தொடரில்  ஸ்பெயின், சுவீடன், ரஷ்யா ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்ற ‘டி’ குழுவில் பங்குபற்றுகிறது. இந்தப் பிரிவில் கிரீஸ் அணியே மிகவும் பலம்பொருந்திய அணியாகக் கருதப்படுகின்றது.
 
நீலம், வெள்ளை ஆகிய நிறங்களைக் கொண்ட அங்கிகளை தமது விளையாட்டு ஆடைகளாகக் கொண்டுள்ள ஸ்பெயின் கால்பந்தாட்ட அணியின் தலைவராக மத்தியகள ஆட்ட வீரர் அஞ்சலோஸ் பஷினாஸ்  செயற்படுகின்றார். இவர் சர்வதேச அளவில் ரசிகர்களினால் மதிக்கப்படுகின்ற முக்கிய நட்சத்திர வீரராவார்.
 
போர்த்துக்கல்லில் 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐரோப்பியக் கிண்ணப் போட்டித் தொடரில் முக்கிய அணிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்து திறமையாக இறுதிப் போட்டிவரை முன்னேறிய கிரீஸ் அணி, இறுதிப் போட்டியில் பலம்பொருந்திய போர்த்துக்கல் அணியைத் தோற்கடித்து கிண்ணம் வென்றது. சர்வதேச அளவில் கிரீஸ் அணியின் மிகப்பெரிய வெற்றியாக இது கொள்ளப்படுகின்றது.
 
euro2004finalteam.jpgஇத்தாலி அணிக்கு எதிராக 1929ஆம் ஆண்டு  தனது முதலாவது சர்வதேசப் போட்டியை விளையாடிய கிரீஸ் அணி, அற்தப் போட்டியில் 3-1 என்ற கணக்கில் தோல்வியைடைந்தது. கிரீஸ் அணியின் மிகப்பெரிய வெற்றி 1949ஆம் ஆண்டு  சிரியா அணிக்கு எதிராக பெறப்பட்டது. இதில் கிரீஸ் 8-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றிருந்தது.
 
பீபா உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளில் 1994 ஆம் ஆண்டு மாத்திரமே விளையாடத் தகுதி பெற்ற கிரீஸ் அணி, அந்தப் போட்டித் தொடரில் முதலாவது சுற்றுடன் வெளியேறியது. ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளைப் பொறுத்தவரை இதுவரை 100 போட்டிகளில் விளையாடி, 48இல் வெற்றியும், 33இல் தோல்வியும், 19இல் சமநிலையும் பெற்றுள்ளது.
 
கிரீஸ் அணியில் மத்தியகள ஆட்டக்காரர்களான அஞ்சலோஸ் பஷினாஸ், ஸ்ரெலியஸ் ஹின்னக்கொப்புலொஸ், ஜீர்கோஸ் ஹரகோயுனிஸ் ஆகியோர் சிறப்பான பாதுகாப்பு ஆட்டத்தை ஆடக்கூடியவர்கள். முன்கள வீரர்களான அஞ்ஜெலஸ் சறிஸ்ரியஸ், டிமிற்சிஸ் சல்பிங்கிடிஸ், பானிஸ் ஹெகாஸ் ஆகியோர் எதிரணியின் முன்களத்தினுள் தாக்குதல் ஆட்டம் ஆடக்கூடியவர்கள்.
 
ஜீயர்காஸ் செரறீடிஸ், கிறிஸ்ரோஸ் பற்சக்லூ, நிகோஸ் ஸ்பிறப்பிலோஸ், றைனோஸ் டெல்லஸ், லூக்காஸ் வின்ரா, வஸ்சில்லிஸ் ரொறெடிஸ்  உள்ளிட்ட பின்கள வீரர்கள் தாக்குதல் ஆட்டத்திலும், ஊடறுப்பு பாதுகாப்பு ஆட்டத்திலும் சிறந்து விளங்குகின்றனர். இவர்கள் எதிரணிகளுக்கு பலத்த சவாலாக அமைவார்கள். ஆணி விபரம்:
 
கோல் காப்பாளர்கள்: அன்ரனிஸ் நிக்கோபோலிடிஸ், கொஸ்ராஸ் சால்கியாஸ், அலெஸ்சாண்டர்ஸ் சார்வஸ்.

பின்கள வீரர்கள்: ஜீயர்காஸ் செரறீடிஸ், கிறிஸ்ரோஸ் பற்சக்லூ, நிகோஸ் ஸ்பிறப்பிலோஸ், றைனோஸ் டெல்லஸ், லூக்காஸ் வின்ரா, வஸ்சில்லிஸ் ரொறெடிஸ், சொரிறிஸ் ஹைராக்கோஸ், ஹின்னிஸ் கோமஸ், பரஸ்ஹாவஸ் அன்ற்சாஸ்.

மத்தியகள வீரர்கள்: அஞ்சலோஸ் பஷினாஸ் (அணித்தலைவர்), ஸ்ரெலியஸ் ஹின்னக்கொப்புலொஸ், ஜீர்கோஸ் ஹரகோயுனிஸ், அலெக்ஸ்சாண்டரஸ் ரொசிலொஸ்.

முன்கள வீரர்கள்: ஜீர்கோஸ் சமராஸ், அஞ்ஜெலஸ் சறிஸ்ரியஸ், டிமிற்சிஸ் சல்பிங்கிடிஸ், பானிஸ் ஹெகாஸ், ஜின்னிஸ் அமனாரிடிஸ், நிக்கொஸ் லிபெராபூலோஸ்.

பயிற்சியாளர்: ஒற்றோ றிக்கஜேல்.

ஐரோப்பியக் கால்பந்தாட்ட கிண்ணத்தை மறுபடியும் கைப்பற்றி தக்கவைக்கும் நோக்கில் களமிறங்கியுள்ள கிரீஸ் கால்பந்தாட்ட அணி, இம்முறை அதிகபட்சம் அரையிறுதி வரையே முன்னேறக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக கால்பந்தாட்ட வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

பொறுந்திருந்து பார்க்கலாம் கிரீஸ் அணி மீண்டும் கிண்ணத்தை கைப்பற்றுகிறதா என்று…. ரோமானியா கால்பந்தாட்ட அணி தொடர்பிலான சிறப்புப் பார்வை நாளை…. மோதி விளையாடு……

 
  1. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  2. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  3. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  4. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  5. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  6. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  7. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  8. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
  9. இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
  10. தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

கட்டுரைகள்