ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் குழு ‘ஏ’யில் அங்கம் வகிக்கும் அணிகள் நேற்று தமது இரண்டாவது லீக் போட்டிகளில் விளையாடின. சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நேற்று மாலை 6 மணிக்கு ஆரம்பமான முதல் ஆட்டத்தில் பலம் பொருந்திய போர்த்துக்கல் அணியும், செக் குடியரசு அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் 3-1 கோல் கணக்கில் போர்த்துக்கல் வெற்றி பெற்றது.
போர்த்துக்கல் அணியின் வெற்றிக் கோல்களை, டீக்கோ 8வது நிமிடத்திலும், கிறிஸ்டியானோ ரொனால்டோ 63வது நிமிடத்திலும், குவாற்சமொ 90வது நிமிடத்திலும் பெற்றனர். செக் குடியரவு சார்பில் சிக்கோ மாத்திரம் 27வது நிமிடத்தில் ஒரு கோலைப் பெற்றார். இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதனை அடுத்து போர்த்துக்கல் காலிறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவானார்.
பேசல் நகரில் இரவு 8.15 மணிக்கு ஆரம்பமான முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது போட்டியில் சுவிற்சர்லாந்து அணியும், துடிப்பு மிக்க துருக்கி அணியும் மோதின. இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் துருக்கி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வியுற்றதன் மூலம் முதல் சுற்று ஆட்டங்களுடன் சுவிற்சர்லாந்து வெளியேறுகிறது.
ஆட்டம் ஆரம்பித்தது முதல் துருக்கி அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சுவிற்சர்லாந்தின் ஹன்கன் யக்கின் போட்டியின் 32வது நிமிடத்தில் தனது அணிக்கான கோலைப் பெற்றுக்கொண்டாலும், அதன் பின்னர் சுதாகரித்த துருக்கி அணியின் வீரர்களான செமி செக்ருக் 57வது நிமிடத்திலும், ஆர்டார் ருறான் 92வது நிமிடத்திலும் கோல்களைப் பெற்று அணியை வெற்றிபெறச் செய்தனர்.
இன்றைய போட்டிகள்: ஒஸ்திரியாவில் இன்று இடம்பெறவுள்ள போட்டிகளில் குழு ‘பீ’யில் அங்கம் வகிக்கின்ற அணிகள் மோதவுள்ளன. கோல்பேர்க் நகரில் மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும் முதல் போட்டியில் பலம் பொருந்திய ஜேர்மனிய அணியும், குரேஷிய அணியும் மோதவுள்ளன.
வியன்னா நகரில் இரவு 8.15க்கு ஆரம்பமாகும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில், ஒஸ்திரியாவும், போலந்தும் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் போலந்து அணி வெற்றி பெறுவதற்குரிய சாத்தியங்கள் அதிகமென்று கால்பந்து நோக்கர்கள் கூறுகின்றனர்.
மேலதிக செய்திகள்
- 'முஸ்லீம் சமுதாயத்தினரிடம் பாரபட்சமாக நடக்கும் ஐரோப்பிய நாடுகள்'
- பெங்களூர் இஸ்ரோ ஆய்வு மையம் மீது துப்பாக்கிச் சூடு-தீவிரவாத தாக்குதல் அல்ல
- பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் -பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம்
- பிஜி தீவை கடும் புயல் தாக்கியது-அவசரநிலை அமல்
- நிபுணர்கள்குழுஅமைப்பு : பான்கீ மூன் ,நவநீதம்பிள்ளை பேச்சுவார்த்தை
- சாவகச்சேரியில் வர்த்தகரின் மகன் கடத்தல்
- பழம்பெரும் பிரபுக்கள் சபையை ஒழிக்கிறது இங்கிலாந்து
- பொன்சேகா தேர்தல் பிரசார சுலோகத்துக்கும் ஐ.நா.வின் போர்க் குற்றச்சாட்டுக்கும் இடையில் தொடர்பு வரைகிறார் வீரவன்ச
- ஐ.நாவுடன் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடினால் சர்வதேச நிதி உதவிகளுக்கு ஆபத்து இல்லையாம்
- இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது



.jpg)


