ஐரோப்பிய கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளுக்கு தகுதி பெறுவதற்கு பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்த ரோமனியா அணி, இறுதி நேரத்தில் வாய்பைப் பெற்றுள்ளது. ஆனாலும், பலம்பொருந்திய அணிகள் அங்கம் வகிக்கும் பிரிவில் விளையாடுவதால் ரோமானியாவால் தாக்குப் பிடிக்க முடியாமல் போகலாம்.
செம்மஞ்சள், வெள்ளை ஆகிய நிற அங்கிகளுடன் விளையாடும் ரோமானியா அணியின் தலைவராக உலகப் புகழ்பெற்ற பின்கள ஆட்டக்காரர் கிறிஸ்ரியன் சீவு செயற்படுகின்றார். இவர் அணித்தலைவராக பதவியேற்றதன் பின்னர் ரோமனியா கால்பந்தாட்ட அணி, இளைய வீரர்களின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் பல வெற்றிகளைப் பெற்றுள்ளது.
பீபா உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளில், 1990, 1998 ஆகிய ஆண்டுகளில் இரண்டாம் சுற்றுவரை முன்னேறியதே ரோமானிய அணியின் முக்கிய வெற்றிகளாகும். ஐரோப்பிய கிண்ணப் போட்டிகளில், இதுவரை நான்கு தடவைகள் மாத்திரமே விளையாடி முதலாவது சுற்றுடனேயே வெளியேறியுள்ளது.
யூக்கேஸ்லாவியாவுக்கு எதிராக 1922ஆம் ஆண்டு தனது சர்வதேச அறிமுகத்தை மேற்கொண்ட ரோமானியாக் கால்பந்தாட்ட அணி, இந்தப் போட்டியில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. 1973ஆம் ஆண்டு பின்லாந்துக்கு எதிராக 9-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றமையே ரோமானியா அணியின் மிகப்பெரிய வெற்றியாகும்.
ரோமானியா அணியின் முன்கள வீரர்களான அண்றியன் முற்று, மறியஸ் நிக்குலே, டானியல் நிக்குலே ஆகியோர் சர்வதேசப் போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாடி அனுபவமுள்ளவர்கள். இவர்கள் எதிரணியினருக்கு சவாலாக விளங்கக்கூடியவர்கள். கோல் காப்பாளரான பொக்டன் லொபோன்ட் முதற்தரப் போட்டிகளில் மிகவும் முன்னணியிலுள்ள வீரர்.
மத்தியகள வீரர்களான புலோறின்ரின் பீற்றர், பவுல் கொட்றியா, ரஸ்வன் கூசிஸ், பனெல் நிக்கொலிற்ரா ஆகியோர் முன்கள வீரர்களானவும், நிக்கோலியா டீகா தேவையேற்படும் போது பின்கள வீரராகவும் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். அவர்கள் ரோமானியா அணியின் முக்கிய வீரர்களாகக் கருதப்படுகின்றனர்.
ஏதிரணிகளின் முன்கள வீரர்களுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுத்து விளையாடும் தாக்குதல் ஆட்டக்காரர்களாக ரோமானியா அணியின் பின்கள வீரர்கள் புகழ்பெற்றவர்கள். அவர்களில் அணித்தலைவர் கிறிஸ்ரியன் சீவு, கொஸ்மின் கொண்ரா, ரஸ்வான் ரற், கேப்ரியல் தமாஸ் ஆகியோர் முக்கியமானவர்கள். அணி விபரம்:
கோல் காப்பாளர்கள்: பொக்டன் லொபோன்ட், மாறிஸ் பாபா, எடுவாட் ஸ்ரான்சியூ.
பின்கள வீரர்கள்: கொஸ்மின் கொண்ரா, ரஸ்வான் ரற், கேப்ரியல் தமாஸ், கிறிஸ்ரியன் சீவு (அணித்தலைவர்), மிறில் ராடொய், கிறிஸ்ரியன் சபினாறு, சொறின் ஹ_னியா, டொறின் கோயின், கொஸ்மின் மொரி, ஸ்ரீபன் ராடு.
மத்தியகள வீரர்கள்: புலோறின்ரின் பீற்றர், பவுல் கொட்றியா, ரஸ்வன் கூசிஸ், பனெல் நிக்கொலிற்ரா, அட்றியன் கிறிஸ்ரியா, நிக்கோலியா டீகா.
முன்கள வீரர்கள்: சிப்ரியன் மரிக்கா, அண்றியன் முற்று, மறியஸ் நிக்குலே, டானியல் நிக்குலே.
பயிற்சியாளர்: விக்டர் பிற்ரூர்கா.
ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் ரோமானியா அணியால் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாவதே பெரிய இலக்காக இருக்கும். விளையாட்டுக்களில் எந்த நேரத்திலும் அதிசயமும், ஆச்சரியமும் நிகழலாம். பொறுத்திருந்து பார்ப்போம் ரோமானியாக் கால்பந்தாட்ட அணி சாதிக்கின்றதா என்று….. துடிப்பு மிக்க வீரர்களுடன் களமிறங்கியுள்ள துருக்கி அணியைப் பற்றி நாளைய சிறப்பு பார்வையில் பார்க்கலாம்.…. விளையாடு…. விளையாடு….
செம்மஞ்சள், வெள்ளை ஆகிய நிற அங்கிகளுடன் விளையாடும் ரோமானியா அணியின் தலைவராக உலகப் புகழ்பெற்ற பின்கள ஆட்டக்காரர் கிறிஸ்ரியன் சீவு செயற்படுகின்றார். இவர் அணித்தலைவராக பதவியேற்றதன் பின்னர் ரோமனியா கால்பந்தாட்ட அணி, இளைய வீரர்களின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் பல வெற்றிகளைப் பெற்றுள்ளது.
பீபா உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளில், 1990, 1998 ஆகிய ஆண்டுகளில் இரண்டாம் சுற்றுவரை முன்னேறியதே ரோமானிய அணியின் முக்கிய வெற்றிகளாகும். ஐரோப்பிய கிண்ணப் போட்டிகளில், இதுவரை நான்கு தடவைகள் மாத்திரமே விளையாடி முதலாவது சுற்றுடனேயே வெளியேறியுள்ளது.
யூக்கேஸ்லாவியாவுக்கு எதிராக 1922ஆம் ஆண்டு தனது சர்வதேச அறிமுகத்தை மேற்கொண்ட ரோமானியாக் கால்பந்தாட்ட அணி, இந்தப் போட்டியில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. 1973ஆம் ஆண்டு பின்லாந்துக்கு எதிராக 9-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றமையே ரோமானியா அணியின் மிகப்பெரிய வெற்றியாகும்.ரோமானியா அணியின் முன்கள வீரர்களான அண்றியன் முற்று, மறியஸ் நிக்குலே, டானியல் நிக்குலே ஆகியோர் சர்வதேசப் போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாடி அனுபவமுள்ளவர்கள். இவர்கள் எதிரணியினருக்கு சவாலாக விளங்கக்கூடியவர்கள். கோல் காப்பாளரான பொக்டன் லொபோன்ட் முதற்தரப் போட்டிகளில் மிகவும் முன்னணியிலுள்ள வீரர்.
மத்தியகள வீரர்களான புலோறின்ரின் பீற்றர், பவுல் கொட்றியா, ரஸ்வன் கூசிஸ், பனெல் நிக்கொலிற்ரா ஆகியோர் முன்கள வீரர்களானவும், நிக்கோலியா டீகா தேவையேற்படும் போது பின்கள வீரராகவும் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். அவர்கள் ரோமானியா அணியின் முக்கிய வீரர்களாகக் கருதப்படுகின்றனர்.
ஏதிரணிகளின் முன்கள வீரர்களுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுத்து விளையாடும் தாக்குதல் ஆட்டக்காரர்களாக ரோமானியா அணியின் பின்கள வீரர்கள் புகழ்பெற்றவர்கள். அவர்களில் அணித்தலைவர் கிறிஸ்ரியன் சீவு, கொஸ்மின் கொண்ரா, ரஸ்வான் ரற், கேப்ரியல் தமாஸ் ஆகியோர் முக்கியமானவர்கள். அணி விபரம்:
கோல் காப்பாளர்கள்: பொக்டன் லொபோன்ட், மாறிஸ் பாபா, எடுவாட் ஸ்ரான்சியூ.
பின்கள வீரர்கள்: கொஸ்மின் கொண்ரா, ரஸ்வான் ரற், கேப்ரியல் தமாஸ், கிறிஸ்ரியன் சீவு (அணித்தலைவர்), மிறில் ராடொய், கிறிஸ்ரியன் சபினாறு, சொறின் ஹ_னியா, டொறின் கோயின், கொஸ்மின் மொரி, ஸ்ரீபன் ராடு.
மத்தியகள வீரர்கள்: புலோறின்ரின் பீற்றர், பவுல் கொட்றியா, ரஸ்வன் கூசிஸ், பனெல் நிக்கொலிற்ரா, அட்றியன் கிறிஸ்ரியா, நிக்கோலியா டீகா.
முன்கள வீரர்கள்: சிப்ரியன் மரிக்கா, அண்றியன் முற்று, மறியஸ் நிக்குலே, டானியல் நிக்குலே.
பயிற்சியாளர்: விக்டர் பிற்ரூர்கா.
ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் ரோமானியா அணியால் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாவதே பெரிய இலக்காக இருக்கும். விளையாட்டுக்களில் எந்த நேரத்திலும் அதிசயமும், ஆச்சரியமும் நிகழலாம். பொறுத்திருந்து பார்ப்போம் ரோமானியாக் கால்பந்தாட்ட அணி சாதிக்கின்றதா என்று….. துடிப்பு மிக்க வீரர்களுடன் களமிறங்கியுள்ள துருக்கி அணியைப் பற்றி நாளைய சிறப்பு பார்வையில் பார்க்கலாம்.…. விளையாடு…. விளையாடு….
மேலதிக செய்திகள்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
- நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
- இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
- தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
- பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
- இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
- தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

.jpg)