உலகத் தரநிலையில் 20வது இடத்திலிருக்கின்ற துருக்கி கால்பந்தாட்ட அணி, ஐரோப்பிய கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான தகுதிகாண் சுற்றுப்போட்டிகளில் சிறந்த முறையில் விளையாடி தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளது. குழு ஏயில் அங்கம் வகிக்கின்ற அணிகளில் போர்த்துக்கல்லுக்கு அடுத்த படியாக அதிக பலம் வாய்ந்த அணியாக துருக்கி கருதப்படுகின்றது.
நீலம் வெள்ளை மற்றும் சிவப்பு வெள்ளை நிறத்திலான அங்கிகளை அணிந்து ஐரோப்பிய கிண்ண போட்டிகளில் ஆடவுள்ள துருக்கி அணியின் அணிதலைவராக முன்கள ஆட்டக்காரர் நிஹாட் ஹக்வீசி செயற்படுகின்றார். இவர் தலையில் தற்போதுள்ள அணியில் அனேக வீரர்கள் பதுமுக வீரர்களாவர். அவர்கள் அனைவரும் தமது திறமைகளை வியக்கும் வகையில் அண்மைக்காலத்தில் வெளிப்படுத்தியுள்ளனர்.
ரோமானியா கால்பந்தாட்ட அணிக்கு எதிராக, 1923ஆம் ஆண்டு தனது முதல் சர்வதேசப் போட்டியில் ஆடிய துருக்கி கால்பந்தாட்ட அணி, அந்தப் போட்டியில் 2-2 என்ற கணக்கில் சமநிலையைப் பெற்றது. 1949ஆம் ஆண்டு சிரியா அணிக்கு எதிராக 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதே துருக்கி அணியின் மிகப்பெரிய வெற்றியாகக் கொள்ளப்படுகின்றது.
உலகக் கிண்ணப் போட்டிகள் இரண்டில் விளையாடியுள்ள துருக்கி அணி(1954, 2002), பலரையும் வியப்பில் ஆழ்த்தி 2002ஆம் ஆண்டு 3ஆம் இடத்தைப் பெற்றது. ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளில் மூன்று தடவைகள் பங்குபற்றியுள்ள துருக்கி, 2000 ஆண்டு காலிறுதி வரை முன்னேறியது. 1996ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளிலேயே துருக்கிய முதன்முதலாக பங்கெடுத்தது.
துருக்கி அணியின் முன்கள வீரர்களான நிஹாட் ஹக்வீசி (அணித் தலைவர்), செமி சென்ருக், ஹாசீம் ஹாசீம் ஆகியோர் ஐரோப்பிய பிராந்தியப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருபவர்கள். துருக்கி அணிக்கான கடந்த 3 வருடங்களாக சிறப்பான பெறுபேற்றை பெற்றுக்கொடுத்தவர்கள். இவர்கள் ஊடறுப்பு ஆட்டத்தில் சிறந்தவர்கள்.
மத்திளகள ஆட்டக்காரர்களான சேவற் வெரிக், கோகான் ஷான், எமாரே குண்சோர், எமாரே ஆசிக் ஆகியோர் முன்கள வீரர்களாகவும், சப்ரி சறிக்லூ, ஹமிட் அல்ரிக்ரெப் ஆகியோர் தேவையேற்படும் போது பின்கள வீரர்களாக தாக்குதல் ஆட்டம் ஆடுவதிலும் சிறந்தவர்கள். இவர்கள் துருக்கி அணியின் இரும்புச் சுவர்கள் என வர்ணிக்கப்படுபவர்கள்.
துருக்கி அணியின் பின்கள வீரர்களாக முஹமட் ரெபல், முஹமட் ஆலூறி, கொக்டினிஸ் ஹரடினிஸ், ருமார் ருடின், ஆர்டா ருறான் ஆகியோர் சிறப்பாக செயற்படுகின்ற போதிலும், எதிரணியின் முன்கள வீரர்களின் தாக்குதல் ஆட்டத்தை தடுத்து நிறுத்துவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். ஆணி விபரம்:
கோல் காப்பாளர்கள்: ருஸ்று றெக்பர், ரொல்கா சென்கின், வொல்கொன் டெமிறல்.
பின்கள வீரர்கள்: ஹஹன் பல்ரா, எமாரே பெலசுக்லூ, முஹமட் ரெபல், முஹமட் ஆலூறி, கொக்டினிஸ் ஹரடினிஸ், ருமார் ருடின், ஆர்டா ருறான், உருர் பொரல், ரேன்கி சான்லி, ஆய்ஹான் அஹ்மான்.
மத்தியகள வீரர்கள்: சேவற் வெரிக், கோகான் ஷான், எமாரே குண்சோர், எமாரே ஆசிக், சப்ரி சறிக்லூ, ஹமிட் அல்ரிக்ரெப்.
முன்கள வீரர்கள்: நிஹாட் ஹக்வீசி (அணித் தலைவர்), செமி சென்ருக், ஹாசீம் ஹாசீம், மெல்வுர் பெர்டனிக்.
பயிற்சியாளர்: பேற்ரி டெறிம்.
ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளின் துடிப்பு மிக்க இளைஞர்களைக் கொண்டுள்ள துருக்கி கால்பந்தாட்ட அணி, அதிகபட்சம் காலிறுதி வரை செல்லக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம். ஆனாலும், அனைத்து வீரர்களும் ஒருங்கிணைவுடன் விளையாடினால் அரையிறுதிவரை செல்லலாம். பார்க்கலாம் ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் துருக்கி எவ்வாறு சாதிக்கின்றது என்று……குரேஷியா அணி தொடர்பான பார்வை நாளை…..
மேலதிக செய்திகள்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
- நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
- இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
- தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
- பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
- இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
- தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?



.jpg)


