சூரிச் நகரில் மாலை 6 மணிக்கு ஆரம்பமான முதல் போட்டியில் தற்போதைய உலகக் கிண்ண வெற்றியாளர் இத்தாலியும், ரோமானியாவும் மோதின. இந்தப் போட்டியில் இத்தாலி இலகுவாக வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும், அந்த எதிர்பார்பை ரோமானியா தவிடுபொடியாக்கியது. போட்டியின் 55வது நிமிடத்தில் ரோமானியாவின்  முற்ரூ கோலொன்றைப் பெற்றார். அடுத்த  நிமிடமே இத்தாலியின் பனுச்சியும் கோலொன்றைப் பெற்றார். இதன் மூலம் போட்டி 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

இத்தாலிய கால்பந்தாட்ட அணி இந்தப் போட்டியில் வெற்றி பெறாததையடுத்து, காலிறுதிக்கு தெரிவாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் அணியுடன் அடுத்து இடம்பெறவுள்ள போட்டியில் 5-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றால் மாத்திரமே இத்தாலி அணி காலிறுதிக்கு தகுதி பெறும். எனினும் அவ்வாறான போட்டி முடிவுகள் கிடைக்கப்பெறுவது அசாத்தியமானது.

பேர்ன் நகரில் இரவு 8.15 மணிக்கு ஆரம்பித்த இரண்டாவது ஆட்டத்தில் பலம்பொருந்திய அணிகளான பிரான்சும், நெதர்லாந்தும் மோதின. இந்தப் போட்டியில் பிரான்ஸின் கனவுகளில் தனது திறமையான ஆட்டத்தின் மூலம் நெதர்லாந்து மண்ணை வீசியடித்தது. போட்டி ஆரம்பம் முதலே தனது கட்டுப்பாட்டின் கீழ் ஆட்டத்தை வைத்திருந்த நெதர்லாந்து, 9வது நிமிடத்தில் குயிற், 59வது நிமிடத்தில் வன் பிறீஸ், 72வது நிமிடத்தில் ரொபான், போட்டியின் இறுதித்தருணத்தில் ஸ்நெய்டர் ஆகியோரின் மூலம் கோல்களைப் பெற்றது. புpரான்ஸ் அணிசார்பில் அந்த அணியின் நட்சத்திர வீரர் தியாரி ஹென்றி மாத்திரம் 72வது நிதிடத்தில் கோலொன்றைப் பெற்றார். இதனால் 4-1 என்ற கணக்கில் நெதர்லாந்து வெற்றிபெற்றது.

net14.jpgபிரான்ஸ் அணி மிக நீண்ட காலத்தின் பின்னர் 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து நெதர்லாந்து காலிறுதிக்கு தெரிவாகியது. குழு ‘சீ’யில் ஏற்கனவே இடம்பெற்ற போட்டியொன்றில் இத்தாலியை, நெதர்லாந்து 3-1 என்ற கணக்கில் வெற்றிகொண்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பாரிய எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் களமிறங்கிய இத்தாலி மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு நெதர்லாந்து அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளது.

இன்றைய போட்டிகள்: ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளின்  குழு ‘டி’யில் அங்கம் வகிக்கும் அணிகளுக்கிடையிலான இரண்டவாது லீக் போட்டிகள் ஒஸ்தியாவில் இன்று நடைபெறவுள்ளன. இன்ஸ்பேர்க் நகரில் மாலை 6 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பலம்பொருந்திய அணிகளான சுவீடனும், ஸ்பெயினும் மோதுகின்றன. இந்தப் போட்டி விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும்.

சேல்பேர்க் நகரில் 8.15 மணிக்கு ஆரம்பிக்கும் இரண்டாவது ஆட்டத்தில் பலம்பொருந்திய கிரீஸ் அணியும், ரஷ்யா அணியும் மோதுகின்றன. இந்த இரண்டு அணிகளும் ஏற்கனவே இடம்பெற்ற ஆட்டங்களில் தோல்வியைச் சந்தித்துள்ளன. எனவே, இந்த ஆட்டத்தில் வெற்றிபெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். இந்தப் போட்டியில் கிரீஸ் அணிக்கு பெற்றி வாய்ப்புக்கள் அதிகம்.

 
  1. பொன்சேகா தேர்தல் பிரசார சுலோகத்துக்கும் ஐ.நா.வின் போர்க் குற்றச்சாட்டுக்கும் இடையில் தொடர்பு வரைகிறார் வீரவன்ச
  2. ஐ.நாவுடன் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடினால் சர்வதேச நிதி உதவிகளுக்கு ஆபத்து இல்லையாம்
  3. இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
  4. கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
  5. பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
  6. போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
  7. ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
  8. பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
  9. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  10. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்

கட்டுரைகள்