விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே, இலங்கை அணியின் முகாமையாளர் பதவிக்கு ஹஸான் நியமிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தார். இதனையடுத்தே ஹஸான்  முகாமையாளர் பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு அரசியல்காரணங்களே முக்கியமாக காரணங்களான தெரிவிக்கப்படுகின்றன.

இதேநேரம், ஹஸான் அணி முகாமையாளராக நியமிக்கப்படுவது தொடர்பாக அமைச்சருக்கு அறிவிக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.  இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை இடைக்கால நிர்வாக நிறைவேற்றுக் குழுவின் அனுமதி பெறப்படாமலே ஹஸான் திலகரட்ன அணி முகாமையாளராக நியமிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இலங்கை-இந்திய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் அறிமுக நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற போது உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகவியலாளர் மத்தியில் ஹஸான் திலகரட்ன இலங்கை அணியின் புதிய முகாமையாளராக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் மறுநாள் அவர் அப்பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார். 83 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹஸான் 10 போட்டிகளுக்கு தலைவாரகச் செயற்பட்டுள்ளார்.

 

 
  1. 'முஸ்லீம் சமுதாயத்தினரிடம் பாரபட்சமாக நடக்கும் ஐரோப்பிய நாடுகள்'
  2. பெங்களூர் இஸ்ரோ ஆய்வு மையம் மீது துப்பாக்கிச் சூடு-தீவிரவாத தாக்குதல் அல்ல
  3. பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் -பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம்
  4. பிஜி தீவை கடும் புயல் தாக்கியது-அவசரநிலை அமல்
  5. நிபுணர்கள்குழுஅமைப்பு : பான்கீ மூன் ,நவநீதம்பிள்ளை பேச்சுவார்த்தை
  6. சாவகச்சேரியில் வர்த்தகரின் மகன் கடத்தல்
  7. பழம்பெரும் பிரபுக்கள் சபையை ஒழிக்கிறது இங்கிலாந்து
  8. பொன்சேகா தேர்தல் பிரசார சுலோகத்துக்கும் ஐ.நா.வின் போர்க் குற்றச்சாட்டுக்கும் இடையில் தொடர்பு வரைகிறார் வீரவன்ச
  9. ஐ.நாவுடன் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடினால் சர்வதேச நிதி உதவிகளுக்கு ஆபத்து இல்லையாம்
  10. இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது

கட்டுரைகள்