அடுத்த பீபா உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரை 2010 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் உரிய காலத்திற்குள் தென்னாபிரிக்காவில் ஏற்பாடுகள் பூர்த்தியாகா விட்டால் பிரேஷிலுக்கு போட்டித் தொடரை மாற்றப்படலாம் என செய்திகள் வெளியாகின. இது குறித்து பிரேஷில் கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் பேச்சாளர் ரொட்ரிகோ பாய்வா தெரிவிக்கையில், “இது அபத்தமான கருத்து. அவ்வாறான நிலைமை ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை” என்றார்.

பிரேஷில் கால்பந்தாட்டச் சம்ளேனத்தின் தலைவர் ரிகார்டோ டெய்ஸெய்ரா சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் உபதலைவர் ஜெரோம் வால்க் சகிதம் தற்போது பிரான்ஸில் நடைபெறும் உலகக்கிண்ண கடற்கரை கால்பந்தாட்டப் போட்டிகளை பார்வையிடச் சென்றுள்ளார் என்றும், அவர்கள் இருவரும் இவ்வாறான தகவலை அறிந்திருக்கவில்லை என்றும் ரொட்ரிகோ பாய்வா தெரிவித்துள்ளார்.

எனினும், 2014ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடர் பிரேஷில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தற்போதிலிருந்து ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள ரொட்ரிகோ பாய்வா, “அதற்கான ஏற்பாடுகளே 2012ஆம் ஆண்டளவில் தான் முடிவடையும்” என்றார்.

 
  1. வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
  2. திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
  3. கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
  4. இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
  5. நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
  6. இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
  7. தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
  8. பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
  9. இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
  10. தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?

கட்டுரைகள்