பீஜிங்கில் நேற்று நடந்த பிரீஸ்டைல் மல்யுத்த போட்டியில் (66 கிலோக் கிராம்) இந்திய வீரர் சுஷில் குமார் களமிறங்கினார். முதல் சுற்றில் உக்ரைன் வீரர் ஆண்ட்ரி ஸ்டாட்னிக் உடன் மோதிய சுஷில் 1:8 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றார். இதையடுத்து, ‘ரெபசேஜ்’ எனப்படும் மறுமோதல் சுற்றில் சுஷில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த சுற்றில், முதலில் அமெரிக்காவின் டெக் ஷ்வாப் உடன் மோதினார். அபாரமாக விளையாடிய சுஷில் 3:1 என்ற கணக்கில் வென்றார். அடுத்து 2வது ‘ரெபசேஜ்’ சுற்றில் பெலாரஸ் வீரர் ஆல்பர்ட் பாட்ரியோவ் உடன் மோதினார். இந்த போட்டியிலும் 3:1 என்ற கணக்கில் வென்று ஆச்சரியத்தை உண்டு பண்ணினார்.
மூன்றாவது சுற்றில், கஷகஸ்தான் வீரர் லெனாய்டு ஸ்பிரிடோனோவ் உடன் சுஷில் மோதினார். லெனாய்டு அரை இறுதிக்கு தகுதிபெற்ற வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டி கடும் போராட்டமாக அமைந்தது. 17:22 நிமிடம் நீடித்த இந்த போட்டியில், சுஷில் 3:1 என்ற கணக்கில் வென்று வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதனையடுத்து, அவருக்கு, இந்தியாவின் முக்கிய தலைவர்கள், மாநில அரசுகள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், பரிசில்களையும் அறிவித்துள்ளன.
மேலதிக செய்திகள்
- இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
- கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
- பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
- போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
- ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
- பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி



.jpg)


