SmallMediumLarge NarrowWideFluid
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் 2010: 10,000 தொண்டர்கள் கடமையில். அச்சிடு E-mail
ஞாயிறு, 28 செப்டெம்பர் 2008 23:41
commonwelth_2010.jpgஇந்தியாவின் புதுடில்லியில் 2010ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் பங்குபற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்காக (Commonwelth Games) 10,000 தன்னார்வத் தொண்டர்களுக்குப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தீயணைப்பு, கட்டுப்பாட்டு அறைகளில் பணிபுரிதல், தந்தியில்ல கருவிகளைக் கையாளுதல், மீட்புப் பணி போன்றவற்றில் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.

சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் காவல்துறையினருக்கு இவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். போட்டிகளின்போது விளையாட்டு அரங்கங்கள் மற்றும் விளையாட்டு கிராமங்களில் அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு வழிகாட்டிகளாகவும் இவர்கள் விளங்குவார்கள். மருத்துவ உதவிகள் அளிப்பது குறித்தும் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.

இத்தகையப் பயிற்சிகளுடன் பல்வேறு அதிகாரிகள், வீரர்களுடன் நடந்து கொள்ளும் முறை குறித்தும், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவதற்கும் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ஒரு பயிற்சி முறையை உருவாக்கி வருவதாக ஊர்க் காவல் படை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

பொதுநலவாய விளையாட்டு போட்டிகளுக்காக தனது உள்கட்டமைப்பை பெரிய அளவில் மாற்றுவதற்கும் ஊர்க் காவல் படை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது.  போட்டிகளின்போது 3 ஆயிரம் வாகனங்கள் பணியில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்து முறை சீராக இருப்பதற்கும் திட்டமிடப்படுகிறது.


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.