வங்க மொழிப் பத்திரிகை ஒன்றுக்கு கங்குலி அளித்துள்ள பேட்டியில் தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார். “என்னை மட்டுமே பலிகடாவாக்கி, தேர்வுக் குழுவினர் காட்டிய தலைகுனிவான செயல்பாடுகள்தான் திடீரென நான் ஓய்வை அறிவிக்க முக்கியக் காரணம். எல்லோரையும் போல என்னையும் பார்த்தார்களானால் எந்த சூழ்நிலையிலும் கிரிக்கட்டை தொடர்ந்து விளையாடுவதில் பிரச்னை இருக்காது. ஆனால் தேர்வுக் குழுவினர் எல்லோரையும் போல என்னைப் பார்ப்பதில்லை. சிலர் தொடர்ந்து மோசமாக ஆடிவரும்போதும் அணியில் வைத்துக் கொள்கிறார்கள். ஆதலால் அவர்களது (தேர்வுக் குழு) தயவில் கிரிக்கட் விளையாட நான் தயாராக இல்லை.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டிருப்பதை எவ்வளவு நாள்தான் பொறுத்துக்கொண்டிருக்க முடியும்? அதுவும் 450க்கும் மேலான ஆட்டங்களில் விளையாடிய பிறகு. ஒரே ஒரு தொடரில் மட்டுமே மோசமாக விளையாடினேன். அதே தொடரில் மோசமாக ஆடிய மற்றவர்களுக்கு எப்படி வாய்ப்பளிக்கிறார்கள்? மீண்டும் விளையாட எனக்கு வாய்ப்பளித்த பிறகு அதிகபட்சமான ஓட்டங்களை சேர்த்துள்ளேன். ஆனால் எனக்கு குறைந்தபட்ச மரியாதைகூட அளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
“வெங்சர்க்கார் தலைமையிலான தேர்வுக் குழுவினர் இரானி கிண்ணப் போட்டிக்கான இதர இந்திய அணியில் சேர்க்காதபோதே, இதுவே கடைசியாக இருக்கட்டும் என நினைத்தேன். இரானி கிண்ண போட்டியில் வாய்ப்பளிக்க மாட்டார்கள் என ஒருபோதும் நான் நினைத்தது கிடையாது. ஆனால் வாய்ப்பு அளிக்கவில்லை. அந்த வேதனை மிகவும் கடுமையானது. அதனால் ஒரு மாதமாகத் தூங்கவில்லை. அணியிலிருந்து சேப்பல் என்னை நீக்கியபோது இருந்த வேதனைக்கும் மேலான கசப்பான அனுபவம் இரானி கிண்ணப் போட்டியில் விளையாட வாய்ப்பு அளிக்காதபோது ஏற்பட்டது” என்றார் கங்குலி.
ஓய்வு குறித்து பலமுறை சிந்தித்துள்ளேன். அதற்கு இதைக்காட்டிலும் சிறப்பான தருணம் வேறு ஏதும் இல்லை என்பதை உணர்ந்து, நீண்ட ஆலோசனைக்குப் பிறகு தற்போது திட்டவட்டமாக ஓய்வை அறிவித்தேன். எதிர்வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா கைப்பற்றுவதற்கு உறுதுணையாக ஓட்டங்களை குவிப்பதே அடுத்த இலக்கை. வெற்றியுடன் வெளியேறினால் அதுவே எனக்குக் கிடைத்த பெருமையாக இருக்கும் என்றார்.
மேலதிக செய்திகள்
- இன்று ஐ.தே.மு. தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறது
- கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் இன்று ஆரம்பம்
- பெரும்பான்மையினத்துடன் தமிழர்கள் வாழும்பகுதிகளில் தமிழ் எட்டப்ப அரசியல்வாதிகள்
- போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. பரிந்துரை செய்துள்ளதை பர்மா கண்டித்துள்ளது
- ஷேக்ஸ்பியர் 'படைப்பில் உருவான' புதிய நாடகம் பிரசுரம்
- பொன்சேகாவை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது தவறு என்கிறார் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி



.jpg)


