பிரான்ஸ், ரோமானியா அணிகளுக்கிடையிலான போட்டி பேர்ன்ஸ் நகரில் நேற்று மாலை 6 மணிக்கு ஆரம்பித்தது. இந்தப் போட்டியில் பலம்பொருந்திய பிரான்ஸ் அணி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், ரோமானிய அணியின் சிறப்பான தடுப்பாட்டத்தின் மூலம் போட்டி சமநிலையில் முடிந்தது. போட்டியி நடைபெற்ற 80 நிமிடங்களும் இரண்டு அணிகளும் எப்படியாவது கோலொன்றைப் பெற்றுவிட வேண்டும் என்று போராடிய போதும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. புpரான்ஸ் அணியின் ஆட்டத்தில் தொய்வு நிலை காணப்பட்டது.
ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கும், ஆரவாரங்களுக்கும் இடையில் சூரிச் நகரில் நேற்றிரவு 8.15 மணிக்கு ஆரம்பமான இரண்டாவது போட்டியில் இத்தாலிய அணிக்கு பலத்த அதிர்ச்சி கொடுத்தது நெதர்லாந்து. போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நடப்பு உலகக்கிண்ண வெற்றியாளர்களான இத்தாலிய அணி, நெதர்லாந்திடம் 3-0 என்ற கணக்கில் பரிதாபகரமாகத் தோல்வியடைந்தது. இத்தாலிய அணியின் முன்கள வீரர்களின் பொறுப்பற்ற விளையாட்டே நேற்றைய தோல்விக்கு காரணமென கால்பந்தாட்ட நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளில் இத்தாலி பெற்ற மிகப்பெரிய தோல்வி இது. கடந்த 30 ஆண்டுகளாக நெதர்லாந்திடம் தோல்வியடையாது இருந்த இத்தாலிக்கு நெதர்லாந்து அணியின் வீரர்கள் அதிர்ச்சியுடன், பாடம் புகட்டியுள்ளனர். டீநதர்லாந்து அணியினர் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தொய்வின்றி ஆட்டத்தினை கொண்டு சென்றனர். அதனை இத்தாலியால் சமாளிக்க முடியவில்லை.
இன்றைய போட்டிகள்: ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளின் நான்காம் நாள் போட்டிகள் ஒஸ்தியாவில் இன்று நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகளில் சுற்றுத்தொடரிலேயே மிகவும் பலம்பொருந்திய அணிகளைக் கொண்ட குழு ‘டி’ யில் அங்கம் வகிக்கிக்னற அணிகள் மோதவுள்ளன.
இன்னஸ்பேர்க் நகரில் இன்று மாலை ஆறு மணிக்கு ஆரம்பிக்கும் முதலாவது போட்டியில் ஸ்பெயினும், ரஷ்யாவும் மோதவுள்ளன. இந்தப் போட்டியில் ஸ்பெயின் வெற்றிபெறுவதற்குரிய சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், ரஷ்ய கால்பந்தாட்ட அணியினர் அண்மைக்காலத்தில் சிறந்த பெறுபோறுகளைக் காண்பித்துள்ளனர்.
சேல்பேர்க் நகரில் இன்று இரவு 8.15 மணிக்கு ஆரம்பிக்கும் இரண்டாவது போட்டியில் ஐரோப்பிய கிண்ண நடப்பு வெற்றியாளர்கள் கிரீசும், பலம்பொருந்திய சுவீடன் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டியில் கிரீஸ் வெற்றி பெறுவதற்குரிய வாய்ப்புக்கள் அதிகமென்று கருதப்படுகின்ற போதிலும், சுவீடன் அணியிடம் பலத்த சவால்களைச் சந்திக்க வேண்டியேற்படும் என்று கால்பந்தாட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக செய்திகள்
- வவுனியாவில் அம்பியூலன்ஸ் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
- திருமலை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி உட்பட மூவர் இடைநிறுத்தம்
- கல்வி சுற்றுலாவில் விபத்து-21 மாணவர்கள் உட்பட 28 பேர் பலி
- இந்தியாவின் ஏவுகணை தடுப்பு ஏவுகணை சோதனை தோல்வி
- நாங்கள் இந்தியாவுக்கு எதிரியல்ல: தாலிபான் மாஜி தலைவர்
- இராணுவ நீதிமன்றில் சரத் : ஜ.தே.மு. கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்
- தாய்லாந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாங்காக்கில் ஆர்ப்பாட்டம்
- பாகிஸ்தானில் தாலிபான் சந்தேக நபர்களின் பதுங்கிடங்கள் மீது விமான குண்டு வீச்சு
- இலங்கைக் கடற்பரப்பில் இன்று அதிகாலை நில அதிர்வு : பாதிப்பு எதுவுமில்லை
- தேசிய தலைவரின் தாயாருக்கு கனடாவுக்குள்அனுமதி மற்றுப்பு? இந்தியா செல்வார்?



.jpg)


