SmallMediumLarge NarrowWideFluid
ஸ்பெயின் கால்பந்தாட்ட அணி ஒரு சிறப்பு பார்வை . அச்சிடு E-mail
செவ்வாய், 10 ஜூன் 2008 06:24
s.jpgஉலகத்தர வரிசையில் 4வது இடத்தினை வகிக்கின்றதும், 1964ஆம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்தாட்ட கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளதுமான ஸ்பெயின் கால்பந்தாட்ட அணி சுவிற்சர்லாந்து-ஒஸ்திரியாவில் இடம்பெற்றுவரும் ஐரோப்பிய கிண்ண போட்டிகளில் கிண்ணம் வெல்லக் கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. ரசிகர்களினால் தாக்குதல் ஆட்ட வீரர்கள் என்று செல்லமான ஸ்பெயின் அணியினர் அழைக்கப்படுகின்றனர். பலம் பொருந்திய கிரீஸ், சுவீடன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் ‘டி’ குழுவில் ஸ்பெயின் இம்முறை அங்கம் வகிக்கின்றது. கோல் காப்பாளரான ஐகர் ஹசிலாஸை அணித்தலைவராகக் கொண்டுள்ள தற்போதைய ஸ்பெயின் அணி, எதிரணிகளுக்கு மிகுந்த அச்சுறுத்தலை வழங்கி, போட்டிகளில் வெற்றிபெறக் கூடிய அணியாக் கருதப்படுகின்றது. ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னரான முன்னோடிப் போட்டிகளில் ஸ்பெயின் சிறப்பாகச் செயற்பட்டுள்ளது.
 
சிவப்பு ரோஜாக்கள் என்று அறியப்படுகின்ற ஸ்பெயின் கால்பந்தாட்ட அணி, 1920 ஆம் ஆண்டு தனது முதலாவது சர்வதேசப் போட்டியை டென்மார்க்குக்கு எதிராக விளையாடியது. அதில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 1933ஆம் ஆண்டு பல்கேரிய அணிக்கு எதிராக 13-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றமையே ஸ்பெயினின் மிகப்பெரிய வெற்றியாகக் கொள்ளப்படுகின்றது.
 
ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் 1964ஆம் ஆண்டு  முதலாவது இடத்தினையும், 1984 ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தினையும் ஸ்பெயின் பிடித்துள்ளது. பீபா உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளில் 12 தடவைகள் பங்குபற்றியுள்ளது. இதில் 1950 ஆம் ஆண்டு 4ஆம் இடத்தை பிடித்தமையே அவர்களின் மிகப்பெரிய உலகக் கிண்ண வெற்றியாகும். 
 
spain.jpgஎதிரணிகளின் முன்களப் பகுதிகளில்  தாக்குதல் ஆட்டம் ஆடக்கூடிய  முன்கள வீரர்களான, பெர்ணான்டோ வில்லா, சேர்ஜியோ ஹார்சியா, டானியல் ஹ_ய்சா, டேவிட் சில்வா  ஆகியோரைக் ஸ்பெயின் கொண்டுள்ளது, இது அந்த அணிக்கு பலத்த சாதகத் தன்மையை வழங்கும். இதுபோல் அணித்தலைவர் ஐகர் ஹசிலாஸ் சர்வதேச அளவில் முன்னணியிலுள்ள கோல் காப்பாளர்களில் ஒருவர்.
 
இதனைவிட, மத்தியகள ஆட்டக்காரர்களான அண்ட்ரஸ் அனிஸ்ரா, ஷாவி ஹேர்னாண்டஸ், ஷேக் பெப்ரேகாஸ் ஆகியோர் முன்கள வீரர்களானவும், ஷாபி ஆலொன்சோ பின்கள வீரராகவும் சிறப்பாகச் செயற்படக் கூடியவர்கள். ஸ்பெயின் அணியின் பின்கள வீரர்கள் பெர்ணான்டோ நவர்ரோ, கார்லஸ் மார்ச்ஷீனா ஆகியோர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள். அணி விபரம்:
 
கோல் காப்பாளர்கள்: ஐகர் ஹசிலாஸ்(அணித்தலைவர்), அண்ரஸ் பலோப், பேபே றீனா.
 
பின்கள வீரர்கள்: ராவுல் அல்பியோல், பெர்ணான்டோ நவர்ரோ, கார்லஸ் மார்ச்ஷீனா, கார்ல்ஸ் பியோல், யோஹான் கப்டவில்லா, சேர்ஜியோ ரோமேஸ், அல்வாரோ ஆர்பேலோ, ஜூனிரோ.
 
மத்தியகள வீரர்கள்:  அண்ட்ரஸ் அனிஸ்ரா, ஷாவி ஹேர்னாண்டஸ், ஷேக் பெப்ரேகாஸ், ஷாபி ஆலொன்சோ, மார்கொஸ் சென்னா, றுபேன் டி லா ரெட்.
 
முன்கள வீரர்கள்: டேவிட் வில்லா, பெர்ணான்டோ வில்லா, சேர்ஜியோ ஹார்சியா, டானியல் ஹ_ய்சா, டேவிட் சில்வா.
 
பயிற்சியாளர்: லூயிஸ் அரகோனஸ்
 
ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டித் தொடரில் பலம்பொருந்திய கிரீஸ், சுவீடன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன் ‘டி’ குழுவில் ஸ்பெயின் இம்முறை அங்கம் வகிப்பதால் அது பாரிய சிரமங்களுக்கு மத்தியிலேயே வெற்றிகளைப் பெறவேண்டியிருக்கும். ஸ்பெயின் இம்முறை ஆகக்கூடியது அரையிறுதி வரை முன்னேறலாம்.
 
நாளைய ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளுக்கான சிறப்பு பார்வையில் நடப்பு வெற்றியாளர்கள் கிரீஸைப் பற்றி பார்க்கலாம்….விளையாடு… விளையாடு…….

 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.