SmallMediumLarge NarrowWideFluid
உலகச்சம்பியனை உலுக்கிய நெதர்லாந்தின் நேர்த்தியான வெற்றி அச்சிடு E-mail
செவ்வாய், 10 ஜூன் 2008 12:41
holand_1.jpgஐரோப்பிய கிண்ணப்போட்டிகளுக்கான குழுநிலையில் மிகவும் வலுவானதும் திறமையானதுமான அணிகளை எதிர்கொள்வதே குழு சீ அணியாகும் இதில் தற்போதைய உலக சம்பியனும் நான்கு முறை உலகச்சம்பியனாகவும் 1968 ம் ஆண்டு ஐரோப்பிய சம்பியனையும் வென்ற இத்தாலி 1998 இன் உலகச்சம்பியனும்  இருமுறை ஐரோப்பிய சம்பியனாகவும் உள்ள பிரான்ஸ் 1988 இன் ஐரோப்பிய கிண்ணத்தை சுவீகரித்து 1974, 1978 ஆண்டுகளில் உலகக்கிண்ண இறுதிப்போட்டியைச் சந்தித்த நெதர்லாந்து  ஆகிய மூன்று பலம் மிக்க அணிகளுடன் கிழக்கு ஐரோப்பிய நாடான ரூமேனியாவும் இணைந்து  கொண்டது.

மிகவும் எதிர்பார்ப்புடன் உற்று நோக்கப்பட்ட சீ குழுவின் ஆட்டங்கள் 09.06.2008 அன்று முதலாவது போட்டி சூரிச் லெற்சி குறூன்ட் (Letzigrund) மைதானத்திலும் இரண்டாவது போட்டி பேர்ன் „Stade de Suisse“  மைதானத்திலும் நடைபெற்றன. முதலாவது போட்டியில் ஆடிய பிரான்ஸ் ரூமேனிய அணிகள் கோல் ஏதும் போடாது ஆட்டத்தை சமநிலையில் முடித்துக்கொண்டன.

holand_2.jpg

அடுத்து 20.45 மணிக்கு பேர்ன் நகரில் நடைபெற்ற முக்கிய போட்டியில் உலகசம்பியன் இத்தாலிக்கு அதிர்ச்சியான அதிரடி வைத்தியம் செய்தது நெதர்லாந்து. மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பித்த  இப்போட்டியில் நெதர்லாந்து அணியின் முன்நிலை வீரர்கள்  இத்தாலிய பின்நிலை வீர்ர்களின் யூகங்களை உடைத்து கோல் போட முயற்சித்தனர். இந்த முயற்சியின் பலனாக 26 வது நிமிடத்தில் Van Nistelrooy உம் 31 வது நிமிடத்தில் Seijder உம் அடுத்தடுத்து இரு கோல்களை போட இத்தாலிய அணி கதிகலங்கியது. ஆனாலும் இடைவேளை  முடிந்த பின்னர் ஆரம்பமான ஆட்ட தொடக்கத்திலிருந்து எப்படியாவது கோல் போட வேண்டுமென்று கங்கணம் கட்டி விறுவிறுப்பாக ஆடியது இத்தாலி.  அந்த முயற்சி எல்லாம் தவிடு பொடியாக்கி தற்காப்பு ஆட்டத்தின் மூலம் காத்துக் கொண்டனர் நெதர்லாந்தின் பின்நிலைத் தடுப்பு வீரர்கள்.

இத்தாலியில் கடும் முயற்சிகளுக்கு மத்தியிலும் 79 வது நிமிடத்தில் Van Bronchhorst தனது அணிக்காக மூன்றாவது கோலைப்போட ஆட்டம் முற்று முழுதாக நெதர்லாந்து வசமானது. நெதர்லாந்தின் 3 : 0  என்ற பெரு வெற்றியை தொடர்ந்து அடுத்துவரும் இரு போட்டிகளையும் அபாரமாக ஆடவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித்தவிக்கிறது இத்தாலி.

 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.