SmallMediumLarge NarrowWideFluid
ரஷ்யாவை இலகுவாக வீழ்த்தியது ஸ்பெயின்: கிரீசுக்கு அதிர்ச்சி தந்தது சுவீடன். அச்சிடு E-mail
புதன், 11 ஜூன் 2008 01:15
s11.jpgஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளின் குழு ‘டி’யில் அங்கம் வகிக்கின்ற அணிகளுக்கிடையிலான போட்டி  ஒஸ்திரியாவில் நேற்று இடம்பெற்றது. முதலாவது போட்டியில் ரஷ்யாவை, ஸ்பெயின் இலகுவாகத் தோற்டித்தது. மற்றைய போட்டியில் நடப்பு ஐரோப்பியக் கிண்ண வெற்றியாளரான கிரீசுக்கு, சுவீடன் அதிர்ச்சியளித்து திறமையான வெற்றியென்றைப் பெற்றது.

ஓஸ்திரியாவின் இன்ஸ்பேர்க் நகரில் நேற்று மாலை 6 மணிக்கு ஆரம்பமான முதலாவது போட்டியில் பலம்பொருந்திய ஸ்பெயின் அணியும், ரஷ்யா அணியும் மோதின. இதில் போட்டி ஆரம்பித்த 20வது நிமிடத்தில் வில்லா பெற்ற முதல் கோலின் மூலம் தனது கணக்கை ஆரம்பித்த ஸ்பெயின், வில்லாவின் 44, 75 மற்றும் பேப்ரெகாசின் 91 நிமிடக் கோலின் மூலம் 4 கோல்களைப் பெற்றது.

ரஷ்யா அணி பலத்த போராட்டங்களை மேற்கொண்டாலும் இந்த அணியின் பல்லியு சென்கோ  86வது நிமிடத்தில் பெற்ற கோலை மாத்திரமே பெற முடிந்தது. இதன் மூலம் ஸ்பெயின் அணி, ரஷ்யாவை 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மூன்று புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஸ்பெயின் அணியின் வில்லா ஹட்றிக் கோல்களைப் பெற்றார். இதுவே இந்த ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் முதலாவது ஹட்றிக் ஆகும்.

சேல்பேர்க் நகரில் நேற்றிரவு 8.15க்கு ஆரம்பமான இரண்டாவது போட்டியில் எதிர்பார்ப்புக்களை மீறி சுவீடன் அணி, நடப்பு வெற்றியாளர்கள் கிரீசுக்கு அதிர்ச்சியளித்தது. இந்தப் போட்டியில் சுவீடன் அணியின் இப்ராஹிம் மூவிக் மற்றும் ஹான்சன் ஆகியோர் பெற்ற கோல்களின் உதவியுடன் 2-0 என்ற கணக்கில் வெற்றி கண்டது. இதன் மூலம் சுவீடன் அணி மூன்று புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது.

spain11.jpgஐரோப்பியக் கிண்ண நடப்பு வெற்றியாளர்களும், கிண்ணத்தை வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதுமான கிரீஸ் கால்பந்தாட்ட அணிக்கு நேற்றைய தோல்வி பலத்த ஏமாற்றத்தை அளிக்கும் என்று நோக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இன்றைய போட்டிகள்: குழு ‘ஏ’யில் அங்கம் வகிக்கின்ற  செக் குடியரவு, போர்த்துக்கல், சுவிற்சர்லாந்து, துருக்கி ஆகிய அணிகளுக்கிடையினான போட்டிகள் சுவிற்சர்லாந்தில் இன்று இடம்பெறவுள்ளன.

ஜெனீவாவில் இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும் முதலாவது போட்டியில் செக் குடியரசும், போர்த்துக்கல்லும் ஒன்றையொன்று எதிர்த்து ஆடுகின்றன. இரண்டு அணிகளும் ஏற்கனவே தாம் விளையாடிய போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளன. இந்தப் போட்டியில் போர்த்துக்கல் அணிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.

பேசல் நகரில் இரவு 8.15 மணிக்கு ஆரம்பிக்கும் இரண்டாவது போட்டியில் சுவிற்சர்லாந்தும், துருக்கியும் போதுகின்றன. இந்த இரண்டு அணிகளும் ஏற்கனவே விளையாடிய போட்டியில் தோல்வியடைந்துள்ளன. எனவே இந்த போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கும். இந்தப் போட்டியில் துருக்கி அணிக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகம்.


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.