| கிரீஸ் கால்பந்தாட்ட அணி ஒரு சிறப்பு பார்வை. |
|
|
| புதன், 11 ஜூன் 2008 01:35 |
ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளின் நடப்பு வெற்றியாளர்கள் என்ற பெருமையும், 2005ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட அணி என்ற விருதினையும் பெற்றுள்ள கிரீஸ் கால்பந்தாட்ட அணி, சுவிற்சர்லாந்து- ஒஸ்திரியா ஆகிய நாடுகளில் தற்போது நடைபெற்று வரும் 16வது ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் வெற்றி பெறக்கூடிய அணிகள் என்று கருதப்படுகின்றவற்றில் முக்கியமானது.
உலகத் தரநிலையில் 8வது இடத்தினை வகிக்கின்ற கிரீஸ் கால்பந்தாட்ட அணி, ரசிகர்களினால் கருநீல கப்பல்கள் என்று செல்லமாக அழைக்கப்படுகின்றது. கிரீஸ் அணி ஐரோப்பியக் கிண்ண போட்டித் தொடரில் ஸ்பெயின், சுவீடன், ரஷ்யா ஆகிய அணிகள் அங்கம் வகிக்கின்ற ‘டி’ குழுவில் பங்குபற்றுகிறது. இந்தப் பிரிவில் கிரீஸ் அணியே மிகவும் பலம்பொருந்திய அணியாகக் கருதப்படுகின்றது. பின்கள வீரர்கள்: ஜீயர்காஸ் செரறீடிஸ், கிறிஸ்ரோஸ் பற்சக்லூ, நிகோஸ் ஸ்பிறப்பிலோஸ், றைனோஸ் டெல்லஸ், லூக்காஸ் வின்ரா, வஸ்சில்லிஸ் ரொறெடிஸ், சொரிறிஸ் ஹைராக்கோஸ், ஹின்னிஸ் கோமஸ், பரஸ்ஹாவஸ் அன்ற்சாஸ். மத்தியகள வீரர்கள்: அஞ்சலோஸ் பஷினாஸ் (அணித்தலைவர்), ஸ்ரெலியஸ் ஹின்னக்கொப்புலொஸ், ஜீர்கோஸ் ஹரகோயுனிஸ், அலெக்ஸ்சாண்டரஸ் ரொசிலொஸ். முன்கள வீரர்கள்: ஜீர்கோஸ் சமராஸ், அஞ்ஜெலஸ் சறிஸ்ரியஸ், டிமிற்சிஸ் சல்பிங்கிடிஸ், பானிஸ் ஹெகாஸ், ஜின்னிஸ் அமனாரிடிஸ், நிக்கொஸ் லிபெராபூலோஸ். பயிற்சியாளர்: ஒற்றோ றிக்கஜேல். ஐரோப்பியக் கால்பந்தாட்ட கிண்ணத்தை மறுபடியும் கைப்பற்றி தக்கவைக்கும் நோக்கில் களமிறங்கியுள்ள கிரீஸ் கால்பந்தாட்ட அணி, இம்முறை அதிகபட்சம் அரையிறுதி வரையே முன்னேறக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக கால்பந்தாட்ட வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். பொறுந்திருந்து பார்க்கலாம் கிரீஸ் அணி மீண்டும் கிண்ணத்தை கைப்பற்றுகிறதா என்று…. ரோமானியா கால்பந்தாட்ட அணி தொடர்பிலான சிறப்புப் பார்வை நாளை…. மோதி விளையாடு…… |
மேலதிக செய்திகள்
- விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்
- ஜனாதிபதி மீது நாட்டு மக்களுக்குப் பாரிய நம்பிக்கை: பாலித கொஹண
- ஜெ.வுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது: சி.பி.ஐ. கோர்ட்டு
- காமராஜர் பிறந்த நாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: சரத்
- ஈழத்தமிழர்களை நிரந்தரமாக முகாம்களிலேயே தங்க வைத்து விட இலங்கை அரசு சதி
- வவுனியாவில் உள்ள முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்
- ராணுவ கெடுபிடியால் வவுனியா முகாம்களில் அதிகரிக்கும் நோயாளிகள்
- மீண்டும் துவக்கப்படுகிறது 'புலிகளின் குரல்' வானொலி
- 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று
- வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் 6ந் தேதி இலங்கை பயணம்
முக்கிய செய்திகள்
| விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம் |
|
| 3 லட்சம் தமிழர்களுக்கு ராஜபக்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சாற்று |
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார் |
|








ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளின் நடப்பு வெற்றியாளர்கள் என்ற பெருமையும், 2005ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட அணி என்ற விருதினையும் பெற்றுள்ள கிரீஸ் கால்பந்தாட்ட அணி, சுவிற்சர்லாந்து- ஒஸ்திரியா ஆகிய நாடுகளில் தற்போது நடைபெற்று வரும் 16வது ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் வெற்றி பெறக்கூடிய அணிகள் என்று கருதப்படுகின்றவற்றில் முக்கியமானது.
இத்தாலி அணிக்கு எதிராக 1929ஆம் ஆண்டு தனது முதலாவது சர்வதேசப் போட்டியை விளையாடிய கிரீஸ் அணி, அற்தப் போட்டியில் 3-1 என்ற கணக்கில் தோல்வியைடைந்தது. கிரீஸ் அணியின் மிகப்பெரிய வெற்றி 1949ஆம் ஆண்டு சிரியா அணிக்கு எதிராக பெறப்பட்டது. இதில் கிரீஸ் 8-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றிருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.