SmallMediumLarge NarrowWideFluid
ஹாட்ரிக் வில்லாவும் ஐரோப்பிய சம்பியனின் தோல்வியும் அச்சிடு E-mail
புதன், 11 ஜூன் 2008 15:01
villa.jpgஐரோப்பியக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளின் தொடர்ச்சியில் டி குழுவிற்கான போட்டிகள் 10.06.2008 அன்று ஒஸ்ரியாவின் நிகழ்ந்தன. 18.00 மணிக்கு இன்ஸ்புறுக் Tavoli  Stadion மைதானத்தில் ஸ்பெயின் ரஷ்ய அணிகள் மோதிக்கொண்டன.

இவ்வாட்டம் மிகவும் விறுவிறுப்பாக இரு அணிகளாலும் ஆடப்பட்ட போதிலும் டேவிற் வில்லாவின் (David Villa) தனித்துவமாக முன்நிலை அதிரடி ஆட்டம் ரஷ்ய அணிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. 20,40, 75 என மூன்று வெவ்வேறான நிமிடங்களில் தொடர்ச்சியாக மூன்று கோல்களையும் லாகவமாக போட்ட வில்லாவின் விசித்திர ஆட்டத்தால் ஸ்பெயின் பலம் பெற்றது. இருந்த போதிலும் சளைக்காது ஆடிய ரஷ்யா 86 வது நிமிடத்தில் Pawljutschenk  மூலம் ஒரு கோலைப் போட முடிந்தது. சற்று நிமிடங்கள் நகர 91 வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் Fabregas தனது அணிக்காக நான்காவது கோலைப்போட்டார். இறுதியாக ஸ்பெயின் 4 ; 1  என்று இலகுவாக வெற்றிபெற்றது. இதுவரை நடைபெற்ற ஆட்டங்களிலிருந்து வேறுபட்டதாக அதிக கோல்கள் போட்டபட்ட போட்டியாகவும் நடுவரிடம் இருந்து மஞ்சள் எச்சரிக்கையோ சிவப்பு அட்டையோ பெறாதவகையில் சிறப்பான ஒரு ஆட்டத்தை கண்டு களிக்கக்கூடியதாக அமைந்தது.

இந்நாளில் இரண்டாவது போட்டியில் தற்போதைய ஐரோப்பிய சம்பியன் கிறீஸ் ஸ்கன்ரிநேவியன் பகுதியில் இருந்து பங்குபெறும் ஓரே ஒரு நாடான சுவீடனை எதிர்கொண்டது. சால்ஸ்பூர்க்கில் அமைந்த Wals Siezanheim மைதானத்தில் 20.45 மணிக்கு ஆரம்பித்த போட்டியில் இரு அணிகளும் சளைக்காது ஆடி இடைவேளைவரை எவராலும் எதனையும் சாதிக்க முடியவில்லை. ஆனாலும் இடைவேளையின் பின்னரான ஆட்டம் சுவிடனுக்கு வெற்றிவாகை சூடிவைத்தது. 67 வது நிமிடத்தில் Ibrahimovic  முதற்கோலை அடித்த மகிழ்ச்சியோடு 72 வது நிமிடத்தில் Hansson அதிஷ்ரவசமாக இரண்டாவது கோலை அடிக்க சுவீடனின் கை ஓங்கியது. கிறீஸ் பல அரிய சந்தர்பங்களை தவறவிட்டமையால் சம்பியன் அணியின் பரிதாபத்தோல்வி என்ற நிலைக்கு தள்ளபட்டது.


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.