SmallMediumLarge NarrowWideFluid
செக்’கை வீழ்த்தி போர்த்துக்கல் காலிறுதிக்கு தகுதி: துருக்கியிடம் சுவிற்சர்லாந்து தோல்வி. அச்சிடு E-mail
புதன், 11 ஜூன் 2008 23:54
cr12.jpgஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளின் காலிறுதிக்கு முதலில் தகுதி பெற்ற அணியென்ற பெருமையை பலம்பொருந்திய அணியான போர்த்துக்கல் பெற்றுள்ளது.  போட்டிகளை ஒஸ்திரியாவுடன் இணைந்து நடத்தும் சுவிற்சர்லாந்து முதல் சுற்றுடன் வெளியேறும் முதல் அணியென்ற பரிதாப நிலையைப் பெற்றது.

ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் குழு ‘ஏ’யில் அங்கம் வகிக்கும் அணிகள் நேற்று தமது இரண்டாவது லீக் போட்டிகளில் விளையாடின. சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நேற்று மாலை 6 மணிக்கு ஆரம்பமான முதல் ஆட்டத்தில் பலம் பொருந்திய போர்த்துக்கல் அணியும், செக் குடியரசு அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் 3-1 கோல் கணக்கில் போர்த்துக்கல் வெற்றி பெற்றது.

போர்த்துக்கல் அணியின் வெற்றிக் கோல்களை, டீக்கோ 8வது நிமிடத்திலும்,  கிறிஸ்டியானோ ரொனால்டோ  63வது நிமிடத்திலும், குவாற்சமொ 90வது நிமிடத்திலும் பெற்றனர். செக் குடியரவு சார்பில் சிக்கோ மாத்திரம் 27வது நிமிடத்தில் ஒரு கோலைப் பெற்றார். இந்தப்   போட்டியில் வெற்றிபெற்றதனை அடுத்து போர்த்துக்கல் காலிறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவானார்.

பேசல் நகரில் இரவு 8.15 மணிக்கு ஆரம்பமான முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது போட்டியில் சுவிற்சர்லாந்து அணியும், துடிப்பு மிக்க துருக்கி அணியும் மோதின. இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் துருக்கி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வியுற்றதன் மூலம் முதல் சுற்று ஆட்டங்களுடன் சுவிற்சர்லாந்து வெளியேறுகிறது.

turkey.jpgஆட்டம் ஆரம்பித்தது முதல் துருக்கி அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சுவிற்சர்லாந்தின் ஹன்கன் யக்கின் போட்டியின் 32வது நிமிடத்தில் தனது அணிக்கான கோலைப் பெற்றுக்கொண்டாலும், அதன் பின்னர் சுதாகரித்த துருக்கி அணியின் வீரர்களான செமி செக்ருக் 57வது நிமிடத்திலும், ஆர்டார் ருறான் 92வது நிமிடத்திலும் கோல்களைப் பெற்று அணியை வெற்றிபெறச் செய்தனர்.

இன்றைய போட்டிகள்: ஒஸ்திரியாவில் இன்று இடம்பெறவுள்ள போட்டிகளில் குழு ‘பீ’யில் அங்கம் வகிக்கின்ற அணிகள் மோதவுள்ளன. கோல்பேர்க் நகரில் மாலை 6 மணிக்கு ஆரம்பமாகும் முதல் போட்டியில் பலம் பொருந்திய ஜேர்மனிய அணியும், குரேஷிய அணியும் மோதவுள்ளன.

வியன்னா நகரில் இரவு 8.15க்கு ஆரம்பமாகும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில், ஒஸ்திரியாவும், போலந்தும் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் போலந்து  அணி வெற்றி பெறுவதற்குரிய சாத்தியங்கள் அதிகமென்று கால்பந்து நோக்கர்கள் கூறுகின்றனர்.


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.