SmallMediumLarge NarrowWideFluid
கால் இறுதியை நோக்கி போத்துக்கல் – களம் விலகத்தயாராகும் சுவிற்சர்லாந்து அச்சிடு E-mail
வியாழன், 12 ஜூன் 2008 05:33
swiss.jpgகுழுநிலைப்போட்டிகள் வரிசையில் இரண்டாம் போட்டிகள் 11.06.2008  அன்று ஜெனீவா நகரில் முதற்போட்டியில் போத்துகலும் செக் குடியரசும் மோதிக்கொண்டன. இரு அணிகளும் முதற்போட்டியை வென்ற நிலையில் இப்போட்டி குழுவின் முதன்மை நிலையை எட்டுவதற்காக முக்கிய போட்டியாக அமைந்தது. ஆரம்பமாகிய விறுவிறுப்பில் எட்டு நிமிடங்கள் எட்டியது. போத்துக்கல் வீரன் டெக்கோ முதல் கோலைப்போட தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் செக் வீரன் Sionko 17 வது நிமிடத்தில் தனது அணிக்காக ஒரு கோலைப்போட்டு ஆட்டத்தை சமநிலைக்கு மாற்றினார்.

இந்நிலையைதக்கவைத்து கொள்ள விரும்பாதது போல் போத்துக்கல் முன்நிலை வீரர்கள் கடுமையாக போராடினர். இப்போராட்ட பயனாக 63 வது நிமிடத்தில் போத்துக்கல்லின் நட்சத்திர வீரன் C Ronaldo இரண்டாவது கோலைப்போட்டார். அதன்பின் உத்வேகம் கொண்டு ஆடிய செக் வீரர்கள் கோல் போடும் முயற்சியில் ஈடுபட்டனர். இவ்வாறு இருந்தும் 91 நிமிடத்தில் Quaresma போத்துக்கல் அணிக்கான் மூன்றாவது கோலைப்போட மிக எளிதாக வெற்றி பெற்று கால் இறுதிப்போட்டியை நோக்கி அவ்வணி பயணிக்கிறது.

அன்றைய தினம் இரண்டாவது போட்டியில் சுவிற்சர்லாந்து துருக்கியை எதிர்கொண்டது. இவ்விரு அணிகளும் முதல் போட்டியில் தோற்றதால் இதிலும் தோற்றுவிடக்கூடாது என விழிப்பாக ஆட்டத்தை ஆரம்பித்தனர். கடும் மழை வெள்ளத்தின் மத்தியில் 32 நிமிடத்தில் சுவிற்சர்லாந்து அணிக்காக Yakin முதலாவது கோலைப் போடடார். இடைவேளை வரையான ஆட்டத்தின் முடிவில் 1 ; 0 என்ற கோல்க் கணக்கில் சுவிற்சர்லாந்து முன்னணி வகித்தது.

ஆனாலும் விடா முயற்சி எடுத்து 57 வது நிமிடத்தில் Semih துருக்கி அணிக்கான கோலைப் அடிக்க ஆட்டத்தில் மேலும் சூடு பிடித்தது. இரு அணிகளும் வென்று விட வேண்டும் என்று கடுமையாக முயற்சித்தும் துருக்கிய வீரன் Arda வின் நேர்த்தியான கோல் அவ்வணியை 2 ; 1 என முடிவுக் கட்டத்தில் வெற்றிக்கு இட்டது. இத்தோல்வி மூலம் குழுநிலையுடன் மூட்டை முடிச்சைக் கட்டிவிட்டு பார்வையாளர்களாக பார்த்து ரசிக்கவேண்டிய நிலைக்கு சுவிஸ் ரசிகர்கள் தள்ளபட்டுள்ளார்கள். இன்னொரு ஐரோப்பியக் கிண்ண கனவுக்காக நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். 

 


 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.