SmallMediumLarge NarrowWideFluid
ரோமானியா கால்பந்தாட்ட அணி ஒரு சிறப்பு பார்வை. அச்சிடு E-mail
வியாழன், 12 ஜூன் 2008 06:17
r1111.jpgஉலகத் தரநிலையில் 12வது இடத்தினையும், ரசிகர்களினால் அமைதியான ஆட்டக்காரர்கள் என்று அழைக்கப்படுகின்றதுமான ரோமானியா கால்பந்தாட்ட அணி, ஐரோப்பியக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளில் பலம்பொருந்திய இத்தாலி, பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய அணிகள் அங்கம் வகிக்கும் குழு சீ’யில் பங்குபற்றுகிறது. ஐரோப்பிய கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளுக்கு தகுதி பெறுவதற்கு பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்த ரோமனியா அணி, இறுதி நேரத்தில் வாய்பைப் பெற்றுள்ளது. ஆனாலும், பலம்பொருந்திய அணிகள் அங்கம் வகிக்கும் பிரிவில் விளையாடுவதால் ரோமானியாவால் தாக்குப் பிடிக்க முடியாமல் போகலாம்.
 
செம்மஞ்சள், வெள்ளை ஆகிய நிற அங்கிகளுடன் விளையாடும் ரோமானியா அணியின் தலைவராக உலகப் புகழ்பெற்ற பின்கள ஆட்டக்காரர் கிறிஸ்ரியன் சீவு செயற்படுகின்றார். இவர் அணித்தலைவராக பதவியேற்றதன் பின்னர் ரோமனியா கால்பந்தாட்ட அணி, இளைய வீரர்களின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் பல வெற்றிகளைப் பெற்றுள்ளது.
 
பீபா உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகளில், 1990, 1998 ஆகிய ஆண்டுகளில் இரண்டாம் சுற்றுவரை முன்னேறியதே ரோமானிய அணியின் முக்கிய வெற்றிகளாகும். ஐரோப்பிய கிண்ணப் போட்டிகளில், இதுவரை நான்கு தடவைகள் மாத்திரமே விளையாடி முதலாவது சுற்றுடனேயே வெளியேறியுள்ளது. 
 
romania.jpgயூக்கேஸ்லாவியாவுக்கு எதிராக 1922ஆம் ஆண்டு தனது சர்வதேச அறிமுகத்தை மேற்கொண்ட ரோமானியாக் கால்பந்தாட்ட அணி, இந்தப் போட்டியில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. 1973ஆம் ஆண்டு பின்லாந்துக்கு எதிராக 9-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றமையே ரோமானியா அணியின் மிகப்பெரிய வெற்றியாகும்.
 
ரோமானியா அணியின் முன்கள வீரர்களான அண்றியன் முற்று, மறியஸ் நிக்குலே, டானியல் நிக்குலே ஆகியோர் சர்வதேசப் போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாடி அனுபவமுள்ளவர்கள். இவர்கள் எதிரணியினருக்கு சவாலாக விளங்கக்கூடியவர்கள். கோல் காப்பாளரான பொக்டன் லொபோன்ட் முதற்தரப் போட்டிகளில் மிகவும் முன்னணியிலுள்ள வீரர்.
 
மத்தியகள வீரர்களான புலோறின்ரின் பீற்றர், பவுல் கொட்றியா, ரஸ்வன் கூசிஸ், பனெல் நிக்கொலிற்ரா ஆகியோர் முன்கள வீரர்களானவும், நிக்கோலியா டீகா தேவையேற்படும் போது பின்கள வீரராகவும் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள்.  அவர்கள் ரோமானியா அணியின் முக்கிய வீரர்களாகக் கருதப்படுகின்றனர்.
 
ஏதிரணிகளின் முன்கள வீரர்களுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுத்து விளையாடும் தாக்குதல் ஆட்டக்காரர்களாக ரோமானியா அணியின் பின்கள வீரர்கள் புகழ்பெற்றவர்கள். அவர்களில் அணித்தலைவர் கிறிஸ்ரியன் சீவு, கொஸ்மின் கொண்ரா, ரஸ்வான் ரற், கேப்ரியல் தமாஸ் ஆகியோர் முக்கியமானவர்கள். அணி விபரம்:
 
கோல் காப்பாளர்கள்:  பொக்டன் லொபோன்ட், மாறிஸ் பாபா, எடுவாட் ஸ்ரான்சியூ.
 
பின்கள வீரர்கள்: கொஸ்மின் கொண்ரா, ரஸ்வான் ரற், கேப்ரியல் தமாஸ், கிறிஸ்ரியன் சீவு (அணித்தலைவர்), மிறில் ராடொய், கிறிஸ்ரியன் சபினாறு, சொறின் ஹ_னியா, டொறின் கோயின், கொஸ்மின் மொரி, ஸ்ரீபன் ராடு.
 
மத்தியகள வீரர்கள்: புலோறின்ரின் பீற்றர், பவுல் கொட்றியா, ரஸ்வன் கூசிஸ், பனெல் நிக்கொலிற்ரா, அட்றியன் கிறிஸ்ரியா, நிக்கோலியா டீகா.
 
முன்கள வீரர்கள்: சிப்ரியன் மரிக்கா, அண்றியன் முற்று, மறியஸ் நிக்குலே, டானியல் நிக்குலே.
 
பயிற்சியாளர்: விக்டர் பிற்ரூர்கா.
 
ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் ரோமானியா அணியால் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாவதே பெரிய இலக்காக இருக்கும். விளையாட்டுக்களில் எந்த நேரத்திலும் அதிசயமும், ஆச்சரியமும் நிகழலாம். பொறுத்திருந்து பார்ப்போம் ரோமானியாக் கால்பந்தாட்ட அணி சாதிக்கின்றதா என்று…..  துடிப்பு மிக்க வீரர்களுடன் களமிறங்கியுள்ள துருக்கி அணியைப் பற்றி நாளைய சிறப்பு பார்வையில் பார்க்கலாம்.…. விளையாடு…. விளையாடு….

 

மேலதிக செய்திகள்

Webமுரசம்

முக்கிய செய்திகள்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாட்டிற்கான இணையத்தளம் அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக   செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்

 
3 லட்சம் தமிழர்களுக்கு ராஜப‌க்சே இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றச்சா‌ற்று

 

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அ‌திப‌ர் மகிந்த ராஜபக்சே இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' நாளிதழ் குற்றம் சா‌ற்‌றியுள்ளது.

 
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு புலம்பெயர் மக்கள் தூண்களாக நிற்கவேண்டும் - உருத்திரகுமார்

 

altநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் மக்கள் தூண்களாக இருந்து தாங்கி நிற்கவேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்குழுத்தலைவரும் சட்டத்தரணியுமான வி;.உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.