|
வியாழன், 12 ஜூன் 2008 16:01 |
B“ குழுவின் வெற்றியாளர்களான ஜேர்மனியும் குரேஷியாவும் தமக்கிடையில் இன்று கிளாகென்போர்ட் (Klagenfurt) மைதானத்தில் மோதிக்கொண்டன. மும்முறை உலக சம்பியனாகவும் இருமுறை ஐரோப்பிய சம்பியனாகவும் தலைநிமிர்ந்து ஐரோப்பாவின் மிக முக்கிய அணியாக கருதப்படும் ஜேர்மனியை எதிர்கொள்வதில் குறுகிய காலத்தில் யூகோஸ்ஸிலாவியாவில் இருந்து பிரிந்து சுதந்திர நாடான எந்த தயக்கமும் காட்டியதாக தெரியவில்லை. போட்டி ஆரம்பமாகியதும் ஜேர்மனியின் முன்நிலை ஆட்டத்தை மடக்கி தம் பிடிக்குள் வைத்துவிட்டு தமது துடிப்பான ஆட்டத்தின் மூலம் 24 வது நிமிடத்தில் Srna வினால் குரேஷியா முதல் கோலைப்போட்டது.
இதுதான் ஜேர்மனிக்கு கிடைத்த பின்னடைவு. கோல் போடுவதைக் காட்டிலும் குரேஷியாவின் கோல்த் தடுப்பையே பிரதானமாக்கவேண்டிய கட்டாயத்தில் ஆடியது ஜேர்மனி என்றே கூறலாம். ஜேர்மனியின் தடுப்பு வியூகத்தையும் உடைத்தெறிந்து 62 வது நிமிடத்தில் Olic இரண்டாவது கோலைப்போட ஜேர்மனியின் தோல்வி உறுதியாகிவிட்டது. ஆனாலும் முதல் ஆட்டத்தின் நாயகனான Podolski 79 வது நிமிடத்தில் ஜேர்மனிக்கா ஒரு கோலைப்போட்டார்.
இறுதிக்கட்டத்தில் இரு அணிகளும் பலமாக ஆட்டத்தை திசை திருப்ப நடுவரும் கண்டிப்பை அதிகப்படுத்த வேண்டியேற்பட்டது. பலருக்கு மஞ்சள் அட்டை எச்சரிக்கையும் ஜேர்மனி வீரன் Schweinsteiger க்கு மைதானத்தை விட்டு வெளியேறவேண்டிய சிவப்பு அட்டைத்தண்டனையும் கிடைத்தது. இரு அணிவீரர்களின் முறுகல் நிலைக்கிடையே குரேஷியா 2 ; 1 என வெற்றிவாகை சூடியது.
|